15 ஆனால், இன்று நான் கொடுக்கிற கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கவனமாகக் கடைப்பிடிக்காமலும், உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடக்காமலும் இருந்தால் இந்த எல்லா சாபங்களும் உங்கள்மேல் வந்து குவியும்:+
36 உங்களுக்கோ உங்கள் முன்னோர்களுக்கோ தெரியாத தேசத்துக்கு உங்களையும் உங்கள் ராஜாவையும் யெகோவா துரத்தியடிப்பார்.+ அங்கே மரத்தாலும் கல்லாலும் உருவாக்கப்பட்ட பொய் தெய்வங்களை வணங்குவீர்கள்.+