20 யெரொபெயாம் திரும்பி வந்த விஷயம் இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும் தெரிந்ததும் அவர்கள் ஒன்றுகூடி வந்தார்கள். அந்தக் கூட்டத்துக்கு அவரை வரவழைத்து இஸ்ரவேல் முழுவதற்கும் ராஜாவாக்கினார்கள்.+ யூதா கோத்திரத்தாரைத் தவிர வேறு யாரும் தாவீதின் வம்சத்தாருக்கு ஆதரவு கொடுக்கவில்லை.+
11ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தவுடனே, போர்ப் பயிற்சி பெற்ற 1,80,000 வீரர்களை யூதா வம்சத்திலிருந்தும் பென்யமீன் வம்சத்திலிருந்தும்+ ஒன்றுதிரட்டினார். இஸ்ரவேலுடன் போர் செய்து அதை மறுபடியும் தன்னுடைய ஆட்சியின்கீழ் கொண்டுவருவதற்காக அப்படிச் செய்தார்.+