-
எண்ணாகமம் 6:23-26பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
23 “நீ ஆரோனிடமும் அவனுடைய மகன்களிடமும் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நீங்கள் இஸ்ரவேலர்களை வாழ்த்தும்போது,+
24 “யெகோவா உங்களை ஆசீர்வதிக்கட்டும்,+ அவர் உங்களைப் பாதுகாக்கட்டும்.
25 யெகோவா தன்னுடைய முகத்தை உங்கள்மேல் பிரகாசிக்கச் செய்து,+ உங்களுக்குக் கருணை காட்டட்டும்.
26 யெகோவா உங்களைக் கரிசனையோடு பார்த்து,* உங்களுக்குச் சமாதானம் தரட்டும்”+ என்று சொல்லி வாழ்த்த வேண்டும்’”
என்றார்.
-