-
நியாயாதிபதிகள் 6:1-5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 ஆனால், இஸ்ரவேலர்கள் மறுபடியும் யெகோவாவுக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்தார்கள்.+ அதனால், யெகோவா அவர்களை ஏழு வருஷங்களுக்கு மீதியானியர்களின் கையில் கொடுத்துவிட்டார்.+ 2 மீதியானியர்கள் இஸ்ரவேலர்களை அடக்கி ஒடுக்கினார்கள்.+ இஸ்ரவேலர்கள் மீதியானியர்களுக்குப் பயந்து மலைகளிலும், குகைகளிலும், யாரும் நெருங்க முடியாத பகுதிகளிலும் பதுங்குவதற்கான இடங்களை* அமைத்தார்கள்.+ 3 இஸ்ரவேலர்கள் விதை விதைத்தபோதெல்லாம், மீதியானியர்களும் அமலேக்கியர்களும்+ கிழக்கத்தியர்களும்+ அவர்களைத் தாக்கினார்கள். 4 அவர்கள் இஸ்ரவேலர்களுக்கு விரோதமாக முகாம்போட்டு, காசா வரைக்கும் அவர்களுடைய விளைச்சலை நாசமாக்கினார்கள். இஸ்ரவேலர்கள் சாப்பிடுவதற்கு அவர்கள் எதையுமே விட்டுவைக்கவில்லை. ஆடு, மாடு, கழுதை என எல்லாவற்றையும் அழித்தார்கள்.+ 5 ஏராளமான ஆட்கள் தங்களுடைய கால்நடைகளோடும் கூடாரங்களோடும் கணக்குவழக்கில்லாத ஒட்டகங்களோடும்+ வெட்டுக்கிளிகள்போல் திரண்டு வந்து+ எல்லாவற்றையும் அழித்தார்கள்.
-