34 அப்போது பேதுரு பேச ஆரம்பித்து, “கடவுள் பாரபட்சம் காட்டாதவர்+ என்பதையும், 35 அவருக்குப் பயந்து சரியானதைச் செய்கிறவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்+ என்பதையும் இப்போது நான் நன்றாகப் புரிந்துகொண்டேன்.
10 உனக்கு வரப்போகிற கஷ்டங்களை நினைத்து பயப்படாதே.+ இதோ! உங்களை முழுமையாய்ச் சோதிப்பதற்காகப் பிசாசு உங்களில் சிலரைச் சிறையில் தள்ளிக்கொண்டே இருப்பான். பத்து நாட்கள் உங்களுக்கு உபத்திரவம் இருக்கும். நீ சாகும்வரை உண்மையோடு இரு, அப்போது வாழ்வுக்கான கிரீடத்தை நான் உனக்குத் தருவேன்.+