-
2 நாளாகமம் 36:11-13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 சிதேக்கியா+ ராஜாவானபோது அவருக்கு 21 வயது; அவர் எருசலேமில் 11 வருஷங்கள் ஆட்சி செய்தார்.+ 12 இவரும் தன்னுடைய கடவுளான யெகோவா வெறுக்கிற காரியங்களையே செய்துவந்தார். யெகோவாவின் கட்டளைப்படி எரேமியா தீர்க்கதரிசி இவரிடம் பேசினார்.+ ஆனாலும், அவர் முன்னால் சிதேக்கியா தாழ்மையாக நடந்துகொள்ளவில்லை. 13 சிதேக்கியாவிடமிருந்து கடவுளுடைய பெயரில் நேபுகாத்நேச்சார் ராஜா உறுதிமொழி வாங்கியிருந்தும், அவனை எதிர்த்துக் கலகம் செய்தார்,+ பிடிவாதமாக இருந்தார், வீம்பாக நடந்துகொண்டார், இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவிடம் திரும்பிவர மறுத்தார்.
-