-
எரேமியா 21:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 அதற்குப் பின்பு, யூதாவின் ராஜாவான சிதேக்கியாவையும் அவனுடைய ஊழியர்களையும் இந்த நகரத்து ஜனங்களையும் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் கையில் கொடுப்பேன்.” யெகோவா சொல்வது இதுதான்: “கொள்ளைநோய்க்கும் வாளுக்கும் பஞ்சத்துக்கும் தப்பியவர்களை, அவர்களைக் கொல்லத் துடிக்கிற எதிரிகளின் கையில் கொடுப்பேன்.+ பாபிலோன் ராஜா அவர்கள் எல்லாரையும் வாளால் வெட்டிச் சாய்ப்பான். அவர்கள்மேல் இரக்கமோ கரிசனையோ காட்ட மாட்டான், பரிதாபப்பட மாட்டான்.”’+
-
-
எரேமியா 25:9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 வடக்கிலிருக்கிற எல்லா ஜனங்களையும்+ என் ஊழியனான பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரையும்+ வர வைத்து, இந்தத் தேசத்தையும் இந்த ஜனங்களையும் சுற்றுப்புற தேசங்களில் இருக்கிறவர்களையும் அழித்துவிடுவேன்.”+ யெகோவா சொல்வது இதுதான்: “நான் அவர்களுக்குக் கோரமான முடிவைக் கொண்டுவருவேன். அதைப் பார்க்கிற எல்லாரும் கேலி செய்வார்கள்.*
-