-
மாற்கு 14:43-47பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
43 அப்போதே, அவர் பேசிக்கொண்டிருந்தபோதே, பன்னிரண்டு பேரில் ஒருவனாகிய யூதாஸ் அங்கே வந்தான். முதன்மை குருமார்களும் வேத அறிஞர்களும் பெரியோர்களும்* அனுப்பிய ஆட்கள் வாள்களோடும் தடிகளோடும் அவனுடன் கூட்டமாக வந்தார்கள்.+ 44 அவரைக் காட்டிக்கொடுப்பவன், “நான் யாருக்கு முத்தம் கொடுக்கிறேனோ அவர்தான் அந்த ஆள்; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள், காவலோடு கொண்டுபோங்கள்” என்று அவர்களிடம் சொல்லி வைத்திருந்தான். 45 அவன் நேராக அவரிடம் வந்து, “ரபீ!”* என்று சொல்லி, மென்மையாக முத்தம் கொடுத்தான். 46 அப்போது, அவர்கள் அவரைப் பிடித்துக் கைது செய்தார்கள். 47 ஆனால், அங்கே நின்றுகொண்டிருந்தவர்களில் ஒருவர் தன் வாளை உருவி, தலைமைக் குருவின் வேலைக்காரனைத் தாக்கினார்; அவனுடைய காது அறுந்துபோனது.+
-
-
லூக்கா 22:47-51பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
47 அவர் பேசிக்கொண்டிருந்தபோதே, ஆட்கள் கூட்டமாக வந்தார்கள். பன்னிரண்டு பேரில் ஒருவனாகிய யூதாஸ் அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்தான்; அவன் இயேசுவுக்கு முத்தம் கொடுக்க அவர் பக்கத்தில் வந்தான்.+ 48 ஆனால் இயேசு அவனிடம், “யூதாஸ், மனிதகுமாரனை முத்தம் கொடுத்தா காட்டிக்கொடுக்கிறாய்?” என்று கேட்டார். 49 அவரோடு நின்றுகொண்டிருந்தவர்கள் நடக்கப்போவதை உணர்ந்து, “எஜமானே, நாங்கள் வாளால் வெட்டலாமா?” என்று கேட்டார்கள். 50 அவர்களில் ஒருவர் தலைமைக் குருவின் வேலைக்காரனைத் தாக்கினார், அவனுடைய வலது காது அறுந்துபோனது.+ 51 அப்போது இயேசு, “இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். பின்பு, அந்த வேலைக்காரனுடைய காதைத் தொட்டு அவனைக் குணப்படுத்தினார்.
-