-
1 கொரிந்தியர் 5:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 ஆனால், சகோதரன் என்று அழைக்கப்படுகிற எவனும் பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவனாகவோ பேராசைப்படுகிறவனாகவோ+ சிலை வழிபாட்டில் ஈடுபடுகிறவனாகவோ சபித்துப் பேசுகிறவனாகவோ* குடிகாரனாகவோ+ கொள்ளையடிக்கிறவனாகவோ+ இருந்தால், அப்படிப்பட்டவனோடு பழகுவதை விட்டுவிட வேண்டும்+ என்றுதான் இப்போது நான் உங்களுக்கு எழுதுகிறேன்; அப்படிப்பட்டவனோடு சேர்ந்து நீங்கள் சாப்பிடவும் கூடாது.
-
-
எபேசியர் 4:17-19பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 அதனால், உலக மக்கள் தங்களுடைய வீணான எண்ணங்களின்படி+ நடப்பதுபோல் நீங்களும் இனி நடக்கக் கூடாதென்று+ நம் எஜமான் முன்னால் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். 18 அவர்கள் வேண்டுமென்றே கடவுளைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள், அவர்களுடைய இதயம் மரத்துப்போயிருக்கிறது; அதனால் அவர்களுடைய மனம் இருண்டு போயிருக்கிறது, கடவுள் தருகிற வாழ்வு கிடைக்காதபடி அவர்கள் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். 19 ஒழுக்க உணர்வு துளிகூட இல்லாமல், எல்லாவித அசுத்தமான செயல்களையும் பேராசையோடு செய்து வருவதற்காக வெட்கங்கெட்ட நடத்தைக்கு*+ தங்களையே கொடுத்துவிட்டார்கள்.
-