நீதிமொழிகள்
18 தன்னைத் தனிமைப்படுத்துகிறவன் தன்னுடைய* ஆசைகளையே தீர்த்துக்கொள்ளப் பார்க்கிறான்.
எல்லா ஞானத்தையும்* அவன் ஒதுக்கித்தள்ளுகிறான்.
2 புத்தியில்லாதவன் எதையும் புரிந்துகொள்ள விரும்ப மாட்டான்.
தன்னுடைய உள்ளத்தில் இருப்பதைத்தான் சொல்ல விரும்புவான்.+
4 ஒருவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகள் ஆழமான தண்ணீர்போல் இருக்கின்றன.+
ஞானத்தின் ஊற்று, பாய்ந்தோடுகிற நீரோடைபோல் இருக்கிறது.
8 இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவனின் வார்த்தைகள் சிலருக்கு ருசியான உணவு* போல் இருக்கின்றன.+
அதை அவர்கள் ஆசை ஆசையாக விழுங்குகிறார்கள்.+
10 யெகோவாவின் பெயர் ஒரு பலமான கோட்டை.+
நீதிமான் அதற்குள் ஓடி பாதுகாப்பு பெறுவான்.+
11 பணக்காரனின் சொத்து அவனுக்கு மதில் சூழ்ந்த நகரம்போல் இருக்கிறது.
அதை ஒரு கோட்டைச் சுவர்போல் அவன் கற்பனை செய்துகொள்கிறான்.+
13 ஒரு விஷயத்தை முழுமையாகக் கேட்பதற்குமுன் பதில் சொல்வது முட்டாள்தனம்.
அது அவமானத்தைத்தான் தேடித்தரும்.+
14 மனதில் தைரியம் இருக்கும்போது நோயைத் தாங்கிக்கொள்ளலாம்.+
ஆனால், மனம் உடைந்துபோகும்போது யாரால் தாங்கிக்கொள்ள முடியும்?+
16 அன்பளிப்பு கொடுக்கிறவனுக்குப் பல வாய்ப்புகள் திறக்கின்றன.+
பெரிய மனிதர்களைப் பார்த்துப் பேச வாய்ப்புகள் கிடைக்கின்றன.
17 முதலில் வாதாடுகிறவனின் பக்கம்தான் நியாயம் இருப்பதுபோல் தெரியும்.+
ஆனால், எதிர்க்கட்சிக்காரன் வந்து குறுக்கு விசாரணை செய்யும்போது உண்மை புரியும்.+
18 குலுக்கல் போட்டால் சச்சரவுகள் தீரும்,+
எதிரும் புதிருமாக இருப்பவர்களின் சண்டைகள் முடிவுக்கு வரும்.
19 மதில் சூழ்ந்த நகரத்தைப் பிடிப்பதைவிட புண்பட்ட சகோதரனை* சமாதானப்படுத்துவது ரொம்பவே கஷ்டம்.+
வாக்குவாதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போல் பலமாக இருக்கும்.+
20 ஒருவன் பேசும் வார்த்தைகள் அவனுடைய வயிற்றை நிரப்பும் உணவுபோல் இருக்கின்றன.+
அவற்றின் விளைவுகளை அவன் அனுபவிப்பான்.
21 சாவும் வாழ்வும் நாவின் அதிகாரத்தில் இருக்கின்றன.+
நாவை அதிகமாகப் பயன்படுத்த விரும்புகிறவர்கள் அதன் பின்விளைவுகளை அனுபவிப்பார்கள்.+
23 ஏழை உதவி கேட்டுக் கெஞ்சுகிறான்.
ஆனால், பணக்காரன் எரிந்துவிழுகிறான்.