ஏசாயா
31 குதிரைகளையும், ஏராளமான போர் ரதங்களையும்,
பலமுள்ள போர்க்குதிரைகளையும்* நம்பி,+
எகிப்திடம் உதவி கேட்டுப் போகிறவர்களுக்கு ஐயோ கேடு!+
அவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளிடம் உதவி கேட்பதில்லை.
யெகோவாவைத் தேடுவதில்லை.
2 அவர்களைவிட அவர் ஞானமுள்ளவர்.
அவர் அழிவைக் கொண்டுவருவார்.
சொன்ன சொல்லை மாற்ற மாட்டார்.
தப்பு செய்கிறவர்களையும் அவர்களுக்கு உதவுகிறவர்களையும் தண்டிப்பார்.+
3 எகிப்தியர்கள் கடவுள் கிடையாது, அவர்கள் சாதாரண மனிதர்கள்தான்.
அவர்களுடைய குதிரைகளுக்கு எந்த விசேஷ சக்தியும் கிடையாது,+ அவை சாதாரண மிருகங்கள்தான்.
யெகோவா அவருடைய கையை ஓங்கும்போது
உதவி செய்கிறவர்கள் வீழ்ச்சி அடைவார்கள்,
உதவி பெறுகிறவர்களும் வீழ்ச்சி அடைவார்கள்.
அவர்கள் எல்லாரும் ஒரே சமயத்தில் அழிந்துபோவார்கள்.
4 யெகோவா என்னிடம்,
“பலமான இளம் சிங்கம் இரையைப் பிடிக்கும்போது,
அதைத் துரத்த மேய்ப்பர்கள் கூட்டமாக வந்தாலும்,
அவர்களுடைய சத்தத்துக்கு அது பயப்படாது.
அவர்கள் போடும் கூச்சலைக் கேட்டு நடுங்காது; அவர்களைப் பார்த்து கர்ஜிக்கும்.
அதேபோல் பரலோகப் படைகளின் யெகோவா, சீயோன் மலைக்காகவும் அதன் குன்றுக்காகவும்
பரலோகத்திலிருந்து இறங்கி வந்து போர் செய்வார்.
5 குஞ்சுகளைக் காப்பாற்றுவதற்காகப் பறந்து வரும் பறவையைப் போல்,
எருசலேமைக் காப்பாற்றுவதற்காக பரலோகப் படைகளின் யெகோவா வருவார்.+
அவளை விடுவித்துக் காப்பாற்றுவார், அழிந்துபோகாதபடி பாதுகாப்பார்” என்று சொன்னார்.
6 “கொஞ்சமும் அடங்காமல் என் பேச்சை மீறி நடந்த இஸ்ரவேல் ஜனங்களே, என்னிடம் திரும்பி வாருங்கள்.+ 7 அந்த நாளில், நீங்கள் செய்த பாவத்தை உணர்வீர்கள்; வெள்ளியிலும் தங்கத்திலும் நீங்கள் உருவாக்கிய ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களை வீசி எறிவீர்கள்.
8 அசீரியர்கள் வாளால் வீழ்த்தப்படுவார்கள், ஆனால் மனுஷனுடைய வாளால் அல்ல.
அவர்கள் வாளுக்குப் பலியாவார்கள், ஆனால் மனுஷனுடைய வாளுக்கு அல்ல.+
அவர்கள் வாளைக் கண்டு பயந்து ஓடுவார்கள்.
வாலிபர்கள் கொத்தடிமைகள்போல் ஆவார்கள்.