லேவியராகமம்
12 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘ஒரு பெண் கர்ப்பமாகி ஆண் குழந்தையைப் பெற்றால், ஏழு நாட்களுக்குத் தீட்டுப்பட்டவளாக இருப்பாள். மாதவிலக்கு+ நாட்களைப் போலவே இந்த நாட்களிலும் தீட்டுப்பட்டிருப்பாள். 3 எட்டாம் நாளில் அந்த ஆண் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டும்.+ 4 இரத்தப்போக்கினால் ஏற்பட்ட தீட்டு நீங்குவதற்கு, அடுத்த 33 நாட்களுக்கு அவள் வீட்டிலேயே இருக்க வேண்டும். அந்தச் சுத்திகரிப்பு நாட்கள் முடியும்வரை பரிசுத்தமான எதையும் அவள் தொடக் கூடாது, பரிசுத்த இடத்துக்குள் வரவும் கூடாது.
5 அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றால், 14 நாட்களுக்குத் தீட்டுப்பட்டவளாக இருப்பாள். மாதவிலக்கு நாட்களைப் போலவே இந்த நாட்களிலும் தீட்டுப்பட்டிருப்பாள். இரத்தப்போக்கினால் ஏற்பட்ட தீட்டு நீங்குவதற்கு, அடுத்த 66 நாட்களுக்கு அவள் வீட்டிலேயே இருக்க வேண்டும். 6 ஆண் குழந்தையையோ பெண் குழந்தையையோ பெற்றவள் தன்னுடைய சுத்திகரிப்பு நாட்கள் முடிந்ததும், ஒருவயது செம்மறியாட்டுக் கடாக் குட்டியைத் தகன பலியாகவும்,+ ஒரு புறாக் குஞ்சை அல்லது காட்டுப் புறாவைப் பாவப் பரிகார பலியாகவும் கொண்டுவர வேண்டும். அவற்றைச் சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் குருவானவரிடம் கொடுக்க வேண்டும். 7 அவர் அவற்றை யெகோவாவின் முன்னிலையில் செலுத்தி, அவளுக்காகப் பாவப் பரிகாரம் செய்வார். அப்போது, இரத்தப்போக்கினால் ஏற்பட்ட தீட்டு நீங்கி அவள் சுத்தமாவாள். ஆண் குழந்தையையோ பெண் குழந்தையையோ பெற்றவளுக்காகக் கொடுக்கப்படும் சட்டம் இதுதான். 8 ஆனால், ஆட்டுக்குட்டியைக் கொடுக்க வசதி இல்லாவிட்டால், இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு புறாக் குஞ்சுகளையோ+ அவள் கொண்டுவர வேண்டும். ஒன்றைத் தகன பலியாகவும் மற்றொன்றைப் பாவப் பரிகார பலியாகவும் கொடுக்க வேண்டும். அவளுக்காக குருவானவர் பாவப் பரிகாரம் செய்வார். அப்போது, அவள் சுத்தமாவாள்’” என்றார்.