ஓசியா
3 பின்பு யெகோவா என்னிடம், “இஸ்ரவேல் ஜனங்கள் மற்ற தெய்வங்களை வணங்கி,+ உலர்ந்த திராட்சை அடைகளை* விரும்புகிறார்கள். ஆனாலும், யெகோவாவாகிய நான் அவர்கள்மேல் அன்பு காட்டுகிறேன்.+ அதைப் போல நீயும், உனக்குத் துரோகம் செய்து இன்னொருவனின் ஆசைநாயகியாக மாறிவிட்ட பெண்ணை மறுபடியும் கூட்டிக்கொண்டு வந்து அவளிடம் அன்பு காட்டு”+ என்றார்.
2 அதனால், நான் 15 வெள்ளிக் காசுகளையும் ஒன்றரை ஹோமர் அளவு* பார்லியையும் விலையாகக் கொடுத்து அவளைக் கூட்டிக்கொண்டு வந்தேன். 3 பின்பு அவளிடம், “நீ பல நாட்களுக்கு எனக்குச் சொந்தமானவளாக இருப்பாய். நீ விபச்சாரம் செய்யக் கூடாது, வேறு யாரோடும் உறவுகொள்ளக் கூடாது. நானும் உன்னோடு உறவுகொள்ள மாட்டேன்” என்று சொன்னேன்.
4 ஏனென்றால், இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் வெகு காலத்துக்கு ராஜாவோ தலைவரோ இருக்க மாட்டார்;+ பலியோ, பூஜைத் தூணோ, ஏபோத்தோ,+ குலதெய்வச் சிலைகளோ+ இருக்காது. 5 அதன்பின் அவர்கள் திரும்பி வந்து, தங்கள் கடவுளான யெகோவாவையும் தங்கள் ராஜாவான தாவீதையும் தேடுவார்கள்.+ கடைசி நாட்களில் அவர்கள் யெகோவாவின் ஆசீர்வாதத்தை* பெற அவரிடம் நடுக்கத்துடன் வருவார்கள்.+