சங்கீதம்
அவருடைய பரிசுத்த ஆலயத்தில் அவரைப் புகழுங்கள்.+
அவருடைய பலத்துக்கு அத்தாட்சியான ஆகாயவிரிவிலே அவரைப் புகழுங்கள்.+
2 அவருடைய மகத்தான செயல்களுக்காக அவரைப் புகழுங்கள்.+
அவருடைய எல்லையில்லாத மகத்துவத்துக்காக அவரைப் புகழுங்கள்.+
3 ஊதுகொம்பை ஊதி அவரைப் புகழுங்கள்.+
நரம்பிசைக் கருவியையும் யாழையும் இசைத்து அவரைப் புகழுங்கள்.+
4 கஞ்சிராவைத் தட்டியும்,+ நடனமாடியும்* அவரைப் புகழுங்கள்.
யாழை+ மீட்டியும், புல்லாங்குழலை+ ஊதியும் அவரைப் புகழுங்கள்.
5 மெல்லிய ஓசை எழுப்பும் ஜால்ராக்களால் அவரைப் புகழுங்கள்.
பேரோசை எழுப்பும் ஜால்ராக்களால் அவரைப் புகழுங்கள்.+
6 சுவாசமுள்ள எல்லா உயிர்களுமே “யா”வைப் புகழட்டும்.