ஒபதியா
ஏதோமைப்+ பற்றி உன்னதப் பேரரசராகிய யெகோவா சொன்னதை ஒபதியா இப்படி விவரித்தார்:
“யெகோவாவிடமிருந்து நமக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது.
எல்லா தேசங்களுக்கும் அதைச் சொல்ல ஒரு தூதுவர் அனுப்பப்பட்டிருக்கிறார்.
‘தயாராகுங்கள், ஏதோமுக்கு எதிராகப் போர் செய்யப் புறப்படுவோம்!’+ என்று அந்தத் தூதுவர் அறிவிக்கிறார்.”
2 கடவுள் இப்படிச் சொல்கிறார்: “உன்னைத் தேசங்களிலேயே அற்பமான தேசமாக்கினேன்.
நீ அடியோடு வெறுக்கப்படுகிறாய்.+
3 பாறைகளின் நடுவே பாதுகாப்பாகக் குடியிருப்பவனே,
உயரமான குன்றின் மேல் வாழ்கிறவனே,
‘யாராலும் என்னைக் கீழே தள்ள முடியாது’ என்று உள்ளத்தில் சொல்கிறவனே,
4 நீ கழுகைப் போல் உயரத்தில் தங்கினாலும்,*
நட்சத்திரங்களின் நடுவில் கூடு கட்டினாலும்,
அங்கிருந்து உன்னைக் கீழே தள்ளுவேன்.” யெகோவாவே இதைச் சொல்கிறார்.
5 “ராத்திரியில் வருகிற திருடர்கள் என்ன செய்வார்கள்?
தங்களுக்குப் போதுமானதை மட்டும் எடுத்துக்கொண்டு மிச்சத்தை விட்டுவிடுவார்கள்தானே?
திராட்சைக் குலைகளை அறுக்க வருகிறவர்கள் என்ன செய்வார்கள்?
6 ஏசாவே, உன்னை வலைவீசித் தேடினார்கள்!
உன் புதையல்களைக் கொள்ளையடிக்கத் துடித்தார்கள்!
7 எல்லைவரை உன்னைத் துரத்தினார்கள்.
உன் கூட்டாளிகள் எல்லாரும் உன்னை ஏமாற்றினார்கள்.
உன்னோடு சமாதானமாக இருந்தவர்கள் உன்னை வீழ்த்தினார்கள்.
உன்னோடு சேர்ந்து சாப்பிடுகிறவர்கள் உனக்கு வலை விரிப்பார்கள்.
ஆனால், நீ அதை உணர மாட்டாய்.
8 அந்த நாளில், ஏதோமில் உள்ள ஞானிகளையும்,+
ஏசாவின் மலைப்பகுதியில் உள்ள அறிவாளிகளையும்*
நான் அழிக்காமல் விடமாட்டேன்” என்று யெகோவா சொல்கிறார்.
10 உன் சகோதரனான யாக்கோபுக்கு நீ கொடுமை செய்தாய்.+
அதனால், நீ பெருத்த அவமானம் அடைவாய்.+
அடியோடு அழிந்துபோவாய்.+
11 அவனுடைய வீரர்களை அன்னியர்கள் பிடித்துக்கொண்டு போனார்கள்.+
எருசலேமுக்குள் மற்ற தேசத்து ஜனங்கள் புகுந்தார்கள், அதைப் பங்கிட குலுக்கல் போட்டார்கள்.+
இதையெல்லாம் நீ பக்கத்தில் நின்று வேடிக்கை பார்த்தாய்.
எதிரிகளைப் போலவே நீயும் நடந்துகொண்டாய்.
12 உன் சகோதரனுக்குக் கஷ்டம் வந்தபோது நீ ஏன் கைகொட்டிச் சிரித்தாய்?+
யூதா ஜனங்களுக்கு அழிவு வந்தபோது நீ ஏன் சந்தோஷத்தில் துள்ளினாய்?+
அவர்கள் வேதனையில் அவதிப்பட்டபோது நீ ஏன் அகம்பாவமாகப் பேசினாய்?
13 அழிவு நாளில் என் ஜனங்களுடைய நகரவாசலுக்குள் ஏன் போனாய்?+
அழிவு நாளில் அவர்கள் சின்னாபின்னமானதைப் பார்த்து ஏன் உள்ளுக்குள் சிரித்தாய்?
அழிவு நாளில் அவர்களுடைய சொத்துகளை ஏன் சுருட்டிக்கொண்டாய்?+
14 தப்பித்து ஓடியவர்களை வெட்டி வீழ்த்த ஏன் சாலை சந்திப்புகளில் காத்திருந்தாய்?+
மீதியிருந்தவர்களை இக்கட்டு நாளில் ஏன் எதிரிகளிடம் பிடித்துக் கொடுத்தாய்?
நீ இப்படியெல்லாம் செய்திருக்கக் கூடாது.+
15 யெகோவா எல்லா தேசங்களையும் தண்டிக்கப்போகும் நாள் வந்துவிட்டது.+
நீ செய்த தீமை உனக்கே திருப்பிச் செய்யப்படும்.+
மற்றவர்களுக்கு நீ செய்த கெடுதல் உன் தலையிலேயே வந்து விடியும்.
16 என்னுடைய பரிசுத்த மலையில் நீ மதுவைக் குடித்தாய்.
அதேபோல், எல்லா தேசத்தாரும் என்னுடைய கோபம் என்ற மதுவைக் குடிப்பார்கள்.+
அதை மடமடவென்று குடிப்பார்கள்.
பின்பு, இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.
17 ஆனால், தப்பிக்கிறவர்கள் சீயோன் மலையில் இருப்பார்கள்.+
சீயோன் மலை பரிசுத்தமாக இருக்கும்.+
யாக்கோபின் வம்சத்தார் தங்களுக்குச் சேர வேண்டியதைக் கைப்பற்றுவார்கள்.+
18 யாக்கோபின் வம்சத்தார் நெருப்பு போலவும்,
யோசேப்பின் வம்சத்தார் தீப்பிழம்பு போலவும் இருப்பார்கள்.
ஆனால், ஏசாவின் வம்சத்தார் வைக்கோலைப் போல இருப்பார்கள்.
இவர்களை யோசேப்பின் வம்சத்தார் கொளுத்திவிடுவார்கள்.
ஏசாவின் வம்சத்தாரில் ஒருவரும் தப்பிக்க மாட்டார்கள்.+
யெகோவாவே இதைச் சொல்லியிருக்கிறார்.
எப்பிராயீமின் நிலத்தையும் சமாரியாவின் நிலத்தையும்+ சொந்தமாக்கிக்கொள்வார்கள்.
கீலேயாத்தை பென்யமீன் சொந்தமாக்கிக்கொள்வான்.
20 இந்த அரணிலிருந்து சிறைபிடிக்கப்பட்டுப் போன இஸ்ரவேல் ஜனங்களுக்கு+ கானானியர்களின் தேசம் சொந்தமாகும்.
சாறிபாத்+ வரையுள்ள பகுதி அவர்கள் கைக்கு வந்து சேரும்.
எருசலேமிலிருந்து செப்பாராத்துக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்கள் நெகேபின் நகரங்களைக் கைப்பற்றுவார்கள்.+