ஏசாயா
2 அவர்கள் ஒவ்வொருவரும் காற்றுக்கு ஒதுங்கும் இடமாக இருப்பார்கள்.
புயலிலிருந்து பாதுகாக்கும் புகலிடமாக இருப்பார்கள்.
தண்ணீரில்லாத தேசத்தில் பாயும் நீரோடைகளாக இருப்பார்கள்.+
சுட்டெரிக்கும் வெயிலில் நிழல் தரும் பெரிய கற்பாறையாக இருப்பார்கள்.
3 பார்வை உள்ளவர்களின் கண்கள் இனி மூடியிருக்காது.
கேட்பவர்களின் காதுகள் இனி அடைக்கப்பட்டிருக்காது.
4 யோசிக்காமல் நடந்துகொள்கிறவர்களின் உள்ளம் இனி உண்மைகளை* பற்றி ஆழமாக யோசிக்கும்.
திக்கித்திக்கிப் பேசும் நாவு இனி தெளிவாகவும் சரளமாகவும் பேசும்.+
5 கெட்ட குணமுள்ளவனை* இனி யாரும் தாராள குணமுள்ளவன் என்று அழைக்க மாட்டார்கள்.
நேர்மை இல்லாதவனை இனி யாரும் பெரிய மனிதன் என்று அழைக்க மாட்டார்கள்.
6 ஏனென்றால், புத்தி இல்லாதவன் அர்த்தமில்லாமல் பேசுவான்.
கெட்டது செய்ய உள்ளத்தில் திட்டமிடுவான்.+
யெகோவாவைவிட்டு விலகவும்,* அவருக்கு எதிராகப் பொய் பேசவும் விரும்புவான்.
பசியில் வாடுபவனுக்குச் சாப்பிட எதுவும் கொடுக்க மாட்டான்.
தாகத்தில் தவிப்பவனுக்குக் குடிக்க எதுவும் கொடுக்க மாட்டான்.
7 நேர்மை இல்லாதவனின் வழிகள் மோசமானவை.+
வெட்கக்கேடாக நடக்கும்படி மற்றவர்களைத் தூண்டுகிறான்.
ஏழை எளியவர்கள் உண்மை பேசினாலும்,
பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர்கள் வாழ்க்கையை நாசமாக்கப் பார்க்கிறான்.+
8 ஆனால், தாராள குணமுள்ளவன் தாராளமாகக் கொடுக்கவே நினைக்கிறான்.
எப்போதுமே மற்றவர்களுக்கு வாரி வழங்குகிறான்.
9 “அலட்சியமாக இருக்கிற பெண்களே, எழுந்து நான் சொல்வதைக் கேளுங்கள்!
கவலையில்லாமல் திரிகிற பெண்களே,+ நான் சொல்வதைக் கவனியுங்கள்!
10 கவலையில்லாமல் திரிகிற நீங்கள் ஒரு வருஷத்துக்குப் பின்பு கதிகலங்கிப்போவீர்கள்.
ஏனென்றால், அறுவடைக் காலம் முடிந்தாலும் திராட்சைப் பழங்கள் சேகரிக்கப்பட்டிருக்காது.+
11 அலட்சியமாக இருக்கிற பெண்களே, பயந்து நடுங்குங்கள்!
கவலையில்லாமல் திரிகிறவர்களே, கலக்கம் அடையுங்கள்!
உங்களுடைய மேலாடையைக் கழற்றிவிட்டு,
துக்கத் துணியை* இடுப்பில் கட்டிக்கொள்ளுங்கள்.+
12 செழிப்பான வயல்களுக்கும் திராட்சைத் தோட்டங்களுக்கும் வந்த கதியைப் பாருங்கள்.
நெஞ்சில் அடித்துக்கொண்டு புலம்புங்கள்.
13 இனி என் ஜனங்களின் நிலத்தில் முட்கள்தான் வளரும்.
குதூகலமாக இருந்த நகரத்தையும்
சந்தோஷத்தில் களைகட்டியிருந்த வீடுகளையும் முட்புதர்கள்தான் மூடியிருக்கும்.+
ஓபேலும்+ காவற்கோபுரமும் நிரந்தரமாகப் பாழாகிப்போனது.
அங்கே காட்டுக் கழுதைகள்தான் சந்தோஷமாகத் திரிகின்றன.
ஆடுமாடுகள்தான் மேய்கின்றன.+
15 கடவுள் தன்னுடைய சக்தியை நம்மேல் பொழியும்வரை+ இப்படித்தான் இருக்கும்.
அதன்பின் வனாந்தரம் பழத் தோட்டமாக மாறும்.
அந்தத் தோட்டம் காடுபோல் அடர்த்தியாகும்.+
17 உண்மையான நீதியின் விளைவாக சமாதானம் உண்டாகும்.+
உண்மையான நீதியின் பலனாக நிம்மதியும் பாதுகாப்பும் என்றென்றும் கிடைக்கும்.+