ஏசாயா
57 நீதிமான்கள் அழிந்துபோகிறார்கள்.
ஆனால், யாரும் அதைக் கண்டுகொள்வதில்லை.
விசுவாசமாக* நடக்கிறவர்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்.*+
ஆனாலும், கஷ்டங்களின் காரணமாகவே*
நீதிமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள் என்பதை யாரும் புரிந்துகொள்வதில்லை.
2 நேர்மையானவர்கள் எல்லாரும் தங்கள் படுக்கையில்* ஓய்வெடுக்கிறார்கள்.
அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்.
3 “ஆனால், சூனியக்காரியின் பிள்ளைகளே,
முறைகேடான உறவினாலும் விபச்சாரத்தினாலும் பிறந்தவர்களே,
நீங்கள் இங்கே வாருங்கள்.
4 யாரைப் பார்த்துக் கேலி செய்கிறீர்கள்?
யாரைப் பார்த்து வாயைத் திறந்து நாக்கை நீட்டுகிறீர்கள்?
நீங்கள் பாவம் செய்கிற பிள்ளைகள்,
ஏமாற்றுப் பேர்வழிகள்.+
5 பெரிய மரங்களின் கீழும் அடர்த்தியான மரங்களின் கீழும்+
நீங்கள் மோகத் தீயில் பற்றியெரிகிறீர்கள்.+
பள்ளத்தாக்குகளிலும்* பாறை இடுக்குகளிலும்
உங்கள் பிள்ளைகளை நரபலி கொடுக்கிறீர்கள்.+
6 பள்ளத்தாக்கில் உள்ள வழுவழுப்பான கற்களை ஆசையாக எடுத்து வைத்துக்கொள்கிறீர்கள்.+
அந்தக் கற்கள்தான் உங்கள் கூலி, அவைதான் உங்கள் சொத்து.
அவற்றுக்குத் திராட்சமது காணிக்கையையும் மற்ற காணிக்கைகளையும் செலுத்துகிறீர்கள்.+
அதைப் பார்த்து நான் திருப்தி அடைய* வேண்டுமா?
7 உயர்ந்தோங்கி நிற்கிற மலைமேல் உங்கள் மெத்தையை விரித்தீர்கள்.+
அங்கே ஏறிப் போய் பலி செலுத்தினீர்கள்.+
8 கதவுக்கும் கதவு நிலைக்கும் பின்னால் ஞாபகச் சின்னத்தை* வைத்தீர்கள்.
என்னை விட்டுவிட்டீர்கள்; உடைகளைக் கழற்றினீர்கள்.
மேலே போய் உங்கள் மெத்தையைப் பெரிதாக்கினீர்கள்.
அவர்களோடு ஒப்பந்தம் செய்தீர்கள்.
தொலைதூர தேசங்களுக்குத் தூதுவர்களை அனுப்பினீர்கள்.
இப்படி, கல்லறை வரைக்கும் இறங்கினீர்கள்.
10 உங்களுக்கு இஷ்டமான வழியிலெல்லாம் போய் பாடுபட்டு உழைத்தீர்கள்.
ஆனால், ‘இதெல்லாம் வீண்!’ என்று சொல்லாமல்,
உங்களுக்குப் புதுத்தெம்பு கிடைத்ததாக நினைத்தீர்கள்.
அதனால்தான் விடாமல் அதையே செய்கிறீர்கள்.
நீங்கள் என்னை நினைத்துப் பார்க்கவில்லை.+
நான் ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக இருந்தேன் அல்லவா?+
அதனால்தான், நீங்கள் எனக்குப் பயப்படவே இல்லை.
12 நீதிமான்கள்போல் காட்டிக்கொண்டு+ நீங்கள் செய்கிற அநியாயங்களை+ நான் அம்பலப்படுத்துவேன்.
அவற்றால் உங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இருக்காது.+
13 நீங்கள் உதவி கேட்டுக் கெஞ்சும்போது,
நீங்கள் வரிசையாக அடுக்கி வைத்திருக்கிற சிலைகள் உங்களைக் காப்பாற்றாது.+
காற்று அவற்றை அடித்துக்கொண்டு போகும்.
மூச்சுக்காற்றுகூட அவற்றை ஊதித்தள்ளிவிடும்.
ஆனால், என்னிடம் அடைக்கலம் தேடி வருகிறவர்கள்
தேசத்தையும் என்னுடைய பரிசுத்த மலையையும் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.+
14 ‘சாலையை அமையுங்கள்! பாதையை உண்டாக்குங்கள்! வழியைத் தயார்படுத்துங்கள்!+
என் ஜனங்களுடைய வழியில் உள்ள தடைகளையெல்லாம் நீக்குங்கள்’ என்று சொல்லப்படும்.”
15 உயர்ந்தவரும் உன்னதமானவரும், என்றென்றும் வாழ்கிறவரும்,+
பரிசுத்தர் என்ற பெயர் உள்ளவருமான கடவுள்+ சொல்வது இதுதான்:
“நான் மேலே பரிசுத்தமான இடத்தில் குடியிருக்கிறேன்.+
ஆனாலும், நெஞ்சம் நொறுங்கியவர்களோடும் துவண்டுபோனவர்களோடும் இருக்கிறேன்.
எளியவர்களுக்குப் புத்துயிர் அளிக்கிறேன்.
நெஞ்சம் நொறுங்கியவர்களுக்குப் புதுத்தெம்பு கொடுக்கிறேன்.+
16 நான் என்றென்றும் எதிர்த்துக்கொண்டே இருக்க மாட்டேன்.
எப்போதுமே கோபமாக இருக்க மாட்டேன்.+
அப்படி இருந்தால், மனுஷன் ரொம்பவே சோர்ந்துபோய்விடுவான்.+
நான் படைத்த எல்லா உயிர்களுமே சோர்ந்துபோய்விடும்.
17 ஆதாயத்துக்காக அவன் அநியாயமும் பாவமும் செய்ததைப் பார்த்துக் கொதித்துப்போனேன்.+
அதனால் அவனைத் தாக்கினேன்; கோபத்தில் என் முகத்தை அவனிடமிருந்து மறைத்துக்கொண்டேன்.
அவனோ மனம்* போன போக்கில் போய்+ எனக்குத் துரோகம் செய்துகொண்டே இருந்தான்.
18 அவன் போகிற போக்கையெல்லாம் பார்த்தேன்.
ஆனாலும் அவனைக் குணப்படுத்துவேன்,+ வழிநடத்துவேன்.+
அவனுக்கும் அவனோடு சேர்ந்து துக்கப்படுகிறவர்களுக்கும்+ ஆறுதல் அளிப்பேன்.”+
19 “அவனுடைய உதடுகள் என்னைப் புகழும்படி செய்வேன்.
தூரத்தில் இருக்கிறவனையும் பக்கத்தில் இருக்கிறவனையும் எப்போதுமே சமாதானத்தோடு வாழ வைப்பேன்.+
அவனைக் குணப்படுத்துவேன்” என்று யெகோவா சொல்கிறார்.
20 “ஆனால், கெட்டவர்கள் கொந்தளிக்கிற கடலைப் போல இருக்கிறார்கள்.
அது அடங்காமல் சேற்றையும் சகதியையும்தான்* அடியிலிருந்து கிளறிவிடுகிறது.
21 கெட்டவர்களுக்கு நிம்மதியே இருக்காது”+ என்று என் கடவுள் சொல்கிறார்.