எசேக்கியேல்
25 யெகோவா மறுபடியும் என்னிடம், 2 “மனிதகுமாரனே, அம்மோனியர்களுக்கு+ நேராக உன் முகத்தை வைத்துக்கொண்டு அவர்களுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்.+ 3 அவர்களைப் பற்றி இப்படிச் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள். உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “என்னுடைய ஆலயம் தீட்டுப்படுத்தப்பட்ட சமயத்திலும், இஸ்ரவேல் தேசம் பாழாகிப்போன சமயத்திலும், யூதா ஜனங்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போன சமயத்திலும் நீங்கள் ஏளனம் செய்தீர்கள். 4 அதனால், உங்களைக் கிழக்கத்திய ஜனங்களின் கையில் கொடுக்கப்போகிறேன். அவர்கள் உங்களுக்கு நடுவே தங்களுடைய முகாம்களையும் கூடாரங்களையும் போடுவார்கள். உங்களுடைய தேசத்தின் விளைச்சலைச் சாப்பிட்டு, உங்களுடைய மந்தையின் பாலைக் குடிப்பார்கள். 5 நான் ரப்பாவை+ ஒட்டகங்கள் மேய்கிற நிலமாகவும், அம்மோனியர்களின் தேசத்தை மந்தைகள் படுத்துக்கொள்கிற இடமாகவும் மாற்றுவேன். அப்போது, நான் யெகோவா என்று நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்”’” என்றார்.
6 “உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேல் தேசத்தின் கதியைப் பார்த்து நீங்கள் கைகொட்டிச் சிரித்தீர்கள்,+ சந்தோஷத்தில் குதித்தீர்கள், கேலியும் கிண்டலும் செய்தீர்கள்.+ 7 அதனால் நான் உங்களைத் தண்டித்து, சூறையாடப்பட்ட பொருள்களைப் போல மற்ற தேசங்களின் கையில் கொடுப்பேன். ஜனங்களின் மத்தியிலும் தேசங்களின் நடுவிலும் இல்லாதபடி உங்களை அழிப்பேன்.+ உங்களை ஒரேயடியாக ஒழித்துக்கட்டுவேன். அப்போது, நான் யெகோவா என்று தெரிந்துகொள்வீர்கள்.’
8 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘“யூதா ஜனங்கள் மற்ற எல்லா ஜனங்களையும் போலத்தான் இருக்கிறார்கள்” என்று மோவாபும்+ சேயீரும்+ சொல்கின்றன. 9 அதனால், மோவாபின் எல்லைகளில் இருக்கிற நகரங்களை எதிரிகள் தாக்கும்படி செய்வேன். தேசத்துக்கு அழகு சேர்க்கும் பெத்-யெசிமோத்தையும், பாகால்-மெயோனையும், கீரியாத்தாயீமையும்கூட+ அவர்கள் தாக்கும்படி செய்வேன். 10 அம்மோனியர்களைப் பற்றிய நினைவையே அழிப்பதற்காக+ அவர்களை எப்படிக் கிழக்கத்திய ஜனங்களின் கையில் கொடுத்தேனோ+ அப்படியே மோவாபியர்களையும் கொடுத்துவிடுவேன். 11 மோவாபை நான் தண்டிப்பேன்.+ அப்போது, நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.’
12 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘ஏதோம் மிகப் பெரிய குற்றம் செய்திருக்கிறது. அது யூதா ஜனங்களைப் பழிவாங்கியிருக்கிறது.+ 13 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நான் ஏதோமைத் தண்டித்து, மனுஷர்களோ மிருகங்களோ இல்லாதபடி அதை வெறிச்சோடிப்போக வைப்பேன்.+ தேமானிலிருந்து தேதான்வரை இருக்கிற எல்லாரும் வாளால் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்.+ 14 ‘என்னுடைய ஜனங்களான இஸ்ரவேலர்களின் கையால் நான் ஏதோமைப் பழிவாங்குவேன்.+ அவர்கள் மூலமாக என்னுடைய கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் காட்டுவேன். ஏதோம் ஜனங்களை நான் பழிதீர்ப்பேன்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.”’
15 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘தீராத பகையினால் பெலிஸ்தியர்கள் என்னுடைய ஜனங்களைப் பழிவாங்கவும் அழிக்கவும் சதி செய்தார்கள்.+ 16 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நான் பெலிஸ்தியர்களைத் தண்டிப்பேன்.+ கிரேத்தியர்களை அழிப்பேன்.+ கடலோரத்தில் மீதியாக இருக்கிறவர்களை ஒழித்துக்கட்டுவேன்.+ 17 அவர்களைக் கடும் கோபத்தோடு தண்டித்து, பயங்கரமாகப் பழிவாங்குவேன். அவர்களை நான் பழிதீர்க்கும்போது, நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.”’”