நெகேமியா
3 தலைமைக் குருவான எலியாசிபும்+ அவருடைய சகோதரர்களான குருமார்களும் ‘ஆட்டு நுழைவாசலை’+ கட்டினார்கள். அதை அர்ப்பணம் செய்து*+ அதற்குக் கதவுகளை வைத்தார்கள். அவர்கள் மேயா கோபுரம்வரையிலும்+ அதைத் தொடர்ந்து அனானெயேல் கோபுரம்வரையிலும்+ மதிலைக் கட்டி அர்ப்பணம் செய்தார்கள். 2 அடுத்த பகுதியை, எரிகோ ஊர் ஆண்கள்+ கட்டினார்கள். அடுத்த பகுதியை, இம்ரியின் மகன் சக்கூர் கட்டினார்.
3 அசெனாவின் வம்சத்தார் ‘மீன் நுழைவாசலை’+ கட்டினார்கள். அதற்கு நிலைகளை வைத்து, கதவுகளையும் தாழ்ப்பாள்களையும் தாழ்ப்பாள் கட்டைகளையும்+ பொருத்தினார்கள். 4 அடுத்த பகுதியை, அக்கோசுக்குப் பிறந்த ஊரியாவின் மகன் மெரெமோத்+ பழுதுபார்த்தார். அடுத்த பகுதியை, மெஷெசாபெயேலுக்குப் பிறந்த பெரகியாவின் மகன் மெசுல்லாம்+ பழுதுபார்த்தார். அடுத்த பகுதியை, பானாவின் மகன் சாதோக் பழுதுபார்த்தார். 5 அடுத்த பகுதியை, தெக்கோவா ஊர் மக்கள்+ பழுதுபார்த்தார்கள். ஆனால், அவர்களுடைய முக்கியப் பிரமுகர்கள் வேலை செய்ய மறுத்தார்கள். ஏனென்றால், மேற்பார்வை செய்கிறவர்களின் கீழ் வேலை செய்வதைக் கௌரவக் குறைச்சலாக நினைத்தார்கள்.
6 பசெயாவின் மகன் யொயதாவும் பேசோதியாவின் மகன் மெசுல்லாமும் ‘பழைய நகரின் நுழைவாசலை’+ பழுதுபார்த்தார்கள். அதற்கு நிலைகளை வைத்து, கதவுகளையும் தாழ்ப்பாள்களையும் தாழ்ப்பாள் கட்டைகளையும் பொருத்தினார்கள். 7 அடுத்த பகுதியை, கிபியோனியனான+ மெலதீயாவும் மிஸ்பாவைச்+ சேர்ந்த மெரோனோத்தியனான யாதோனும் பழுதுபார்த்தார்கள். இவர்கள் ஆற்றுக்கு அப்பாலுள்ள* பிரதேசத்தின்+ ஆளுநருடைய ஆட்சியின் கீழ் இருந்தார்கள். 8 அடுத்த பகுதியை, தங்க ஆசாரிகளில் ஒருவரான அராயாவின் மகன் ஊசியேல் பழுதுபார்த்தார். அடுத்த பகுதியை, வாசனைத் தைலம் செய்கிறவர்களில் ஒருவரான அனனியா பழுதுபார்த்தார். இவர்கள் இரண்டு பேரும் ‘அகன்ற மதில்’+ வரையாக கல்தளம் அமைத்தார்கள். 9 அடுத்த பகுதியை, ஹூரின் மகனும் எருசலேமின் பாதி மாகாணத்துக்குத் தலைவருமான ரெபாயா பழுதுபார்த்தார். 10 அடுத்ததாக, அருமாப்பின் மகன் யெதாயா தன்னுடைய வீட்டுக்கு எதிரில் இருந்த பகுதியைப் பழுதுபார்த்தார். அடுத்த பகுதியை, ஆசாப்நெயாவின் மகன் அத்தூஸ் பழுதுபார்த்தார்.
11 மற்றொரு பகுதியையும் ‘அடுப்புகளின் கோபுரத்தையும்,’+ ஆரீமின் மகன்+ மல்கீயாவும் பாகாத்-மோவாபின் மகன்+ அசூபும் பழுதுபார்த்தார்கள். 12 அடுத்த பகுதியை, அல்லோகேசின் மகனும் எருசலேமின் பாதி மாகாணத்துக்குத் தலைவருமான சல்லூம் தன்னுடைய மகள்களோடு சேர்ந்து பழுதுபார்த்தார்.
13 ஆனூனும் சனோவா ஊர்+ ஜனங்களும் ‘பள்ளத்தாக்கு நுழைவாசலை’+ பழுதுபார்த்தார்கள். அதற்கு நிலைகளை வைத்து, கதவுகளையும் தாழ்ப்பாள்களையும் தாழ்ப்பாள் கட்டைகளையும் பொருத்தினார்கள். அவர்கள் ‘குப்பைமேட்டு நுழைவாசல்’+ வரையாக சுமார் 1,460 அடி* நீளத்துக்கு மதிலைப் பழுதுபார்த்தார்கள். 14 ரேகாபின் மகனும் பெத்-கேரேம் மாகாணத்துக்குத்+ தலைவருமான மல்கீயா, ‘குப்பைமேட்டு நுழைவாசலை’ பழுதுபார்த்தார். அதற்குக் கதவுகளையும் தாழ்ப்பாள்களையும் தாழ்ப்பாள் கட்டைகளையும் பொருத்தினார்.
15 கொல்லோசேயின் மகனும் மிஸ்பா மாகாணத்துக்குத்+ தலைவருமான சல்லுன், ‘நீரூற்று நுழைவாசலை’+ பழுதுபார்த்தார். அதற்குக் கூரை அமைத்து கதவுகளையும் தாழ்ப்பாள்களையும் தாழ்ப்பாள் கட்டைகளையும் பொருத்தினார். அதோடு, ‘ராஜாவின் தோட்டத்துக்கு’+ பக்கத்திலுள்ள ‘சேலா* குளத்தின்’ மதிலை,+ ‘தாவீதின் நகரத்திலிருந்து’+ கீழே இறங்குகிற ‘படிக்கட்டு’+ வரையாகவும் பழுதுபார்த்தார்.
16 அடுத்ததாக, அஸ்பூகின் மகனும் பெத்-சூரின்+ பாதி மாகாணத்துக்குத் தலைவருமான நெகேமியா, ‘தாவீதின் கல்லறைத் தோட்டத்துக்கு’+ முன்னால் ஆரம்பித்து, வெட்டப்பட்ட குளம் வரையாகவும்+ ‘படைவீரர்களின் பாசறை’ வரையாகவும் பழுதுபார்த்தார்.
17 அடுத்த பகுதிகளை லேவியர்கள் பழுதுபார்த்தார்கள். முதலாவதாக, பானியின் மகன் ரெகூம் பழுதுபார்த்தார். அடுத்ததாக, கேகிலாவின்+ பாதி மாகாணத்துக்குத் தலைவரான அஷபியா தன் மாகாணத்தின் சார்பில் பழுதுபார்த்தார். 18 அடுத்த பகுதியை, அவர்களுடைய சகோதரர்கள் பழுதுபார்த்தார்கள். முக்கியமாக, எனாதாத்தின் மகனும் கேகிலாவின் பாதி மாகாணத்துக்குத் தலைவருமான பாபாய் பழுதுபார்த்தார்.
19 அடுத்ததாக, மேட்டுப் பகுதிக்கு முன்னால் ஆரம்பித்து முட்டுச்சுவருக்குப்+ பக்கத்திலுள்ள ஆயுதக்கிடங்கு வரையான பகுதியை, யெசுவாவின் மகனும்+ மிஸ்பாவின் தலைவருமான ஏத்சேர் பழுதுபார்த்தார்.
20 அடுத்ததாக, முட்டுச்சுவரில் ஆரம்பித்து தலைமைக் குருவான எலியாசிபின்+ வீட்டுவாசல் வரையுள்ள பகுதியை, சாபாயின் மகன்+ பாருக் மிக மும்முரமாகப் பழுதுபார்த்தார்.
21 அடுத்ததாக, எலியாசிபுடைய வீட்டின் வாசலிலிருந்து அதன் முனை வரையுள்ள பகுதியை, அக்கோசுக்குப் பிறந்த ஊரியாவின் மகன் மெரெமோத்+ பழுதுபார்த்தார்.
22 அடுத்ததாக, யோர்தான்* பிரதேசத்தைச்+ சேர்ந்த குருமார்கள் பழுதுபார்த்தார்கள். 23 அடுத்ததாக, பென்யமீனும் அசூபும் தங்களுடைய வீட்டுக்கு எதிரே உள்ள பகுதியைப் பழுதுபார்த்தார்கள். அடுத்ததாக, அனனெயாவுக்குப் பிறந்த மாசெயாவின் மகன் அசரியா தன் வீட்டுக்குப் பக்கத்தில் பழுதுபார்த்தார். 24 அடுத்ததாக, அசரியாவின் வீட்டிலிருந்து முட்டுச்சுவர்+ வரைக்கும், அதைத் தொடர்ந்து மூலைவரைக்கும் உள்ள பகுதியை, எனாதாத்தின் மகன் பின்னூய் பழுதுபார்த்தார்.
25 அடுத்ததாக, முட்டுச்சுவருக்கும் ராஜாவின் அரண்மனையை+ ஒட்டிய கோபுரத்துக்கும், அதாவது ‘காவலர் முற்றத்தில்’+ இருந்த உயர்ந்த கோபுரத்துக்கும், எதிரே உள்ள பகுதியை உசாயின் மகன் பாலால் பழுதுபார்த்தார். அடுத்த பகுதியை, பாரோஷின் மகன்+ பெதாயா பழுதுபார்த்தார்.
26 ஓபேலில்+ வாழ்ந்த ஆலயப் பணியாளர்கள்,*+ கிழக்கே இருக்கிற ‘தண்ணீர் நுழைவாசலுக்கும்’+ மதிலுக்கு வெளிப்பக்கமாக நீட்டிக்கொண்டிருக்கும் கோபுரத்துக்கும் முன்னாலுள்ள பகுதிவரை பழுதுபார்த்தார்கள்.
27 அடுத்ததாக, மதிலுக்கு வெளிப்பக்கமாக நீட்டிக்கொண்டிருக்கும் பெரிய கோபுரத்தின் முன்னால் ஆரம்பித்து ஓபேலின் மதில் வரையுள்ள மற்றொரு பகுதியை, தெக்கோவா ஊர் மக்கள்+ பழுதுபார்த்தார்கள்.
28 ‘குதிரை நுழைவாசல்’+ தொடங்கி, குருமார்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு எதிரே உள்ள பகுதியைப் பழுதுபார்த்தார்கள்.
29 அடுத்ததாக, இம்மேரின் மகன் சாதோக்+ தன்னுடைய வீட்டுக்கு எதிரே உள்ள பகுதியைப் பழுதுபார்த்தார்.
அடுத்த பகுதியை, ‘கிழக்கு நுழைவாசலின்’ காவலரும்+ செக்கனியாவின் மகனுமான செமாயா பழுதுபார்த்தார்.
30 அடுத்த பகுதியை, செலேமியாவின் மகனான அனனியாவும் சாலாபின் ஆறாவது மகனான ஆனூனும் பழுதுபார்த்தார்கள்.
அடுத்ததாக, பெரகியாவின் மகனான மெசுல்லாம்+ தன்னுடைய வீட்டுக்கு* முன்னால் உள்ள பகுதியைப் பழுதுபார்த்தார்.
31 அடுத்ததாக, தங்க ஆசாரிகளின் சங்கத்தைச் சேர்ந்த மல்கீயா, ‘சோதனை நுழைவாசலின்’ எதிரில் ஆலயப் பணியாளர்களும்* வியாபாரிகளும் தங்கியிருக்கிற வீடுவரைக்கும்,+ மூலையில் உள்ள மேல்மாடிவரைக்கும் பழுதுபார்த்தார்.
32 மூலையில் உள்ள மேல்மாடிக்கும் ‘ஆட்டு நுழைவாசலுக்கும்’+ இடையிலிருந்த பகுதியை, தங்க ஆசாரிகளும் மற்ற வியாபாரிகளும் பழுதுபார்த்தார்கள்.