சங்கீதம்
தாவீதின் சங்கீதம்.
உங்களுடைய உண்மைத்தன்மைக்கும் நீதிக்கும் ஏற்றபடி எனக்குப் பதில் கொடுங்கள்.
2 அடியேனை விசாரணைக் கூண்டில் நிறுத்தாதீர்கள்.
உயிரோடு இருக்கிற யாருமே உங்கள்முன் நீதிமானாக இருக்க முடியாதே.+
ரொம்பக் காலத்துக்கு முன் இறந்தவர்களைப் போல என்னை இருட்டில் இருக்க வைக்கிறான்.
5 கடந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன்.
உங்களுடைய செயல்களைப் பற்றியெல்லாம் தியானிக்கிறேன்.+
உங்களுடைய கைகளால் நீங்கள் செய்தவற்றைப் பற்றி ஆர்வத்தோடு யோசித்துப் பார்க்கிறேன்.*
6 கைகளை விரித்து உங்களிடம் ஜெபம் செய்கிறேன்.
வறண்ட நிலம் மழைக்காகத் தவிப்பதுபோல்,
நான் உங்களுக்காகத் தவிக்கிறேன்.+ (சேலா)
உங்கள் முகத்தை என்னிடமிருந்து மறைத்துக்கொள்ளாதீர்கள்.+
இல்லாவிட்டால், நான் சவக்குழிக்குள் போகிறவனைப் போல ஆகிவிடுவேன்.+
8 காலையில் உங்களுடைய மாறாத அன்பைப் பற்றிக் கேட்க வையுங்கள்.
ஏனென்றால், நான் உங்களைத்தான் நம்பியிருக்கிறேன்.
நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காட்டுங்கள்.+
ஏனென்றால், நான் உங்களிடம்தான் உதவிக்காகக் கெஞ்சுகிறேன்.
9 யெகோவாவே, எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்.
எனக்குப் பாதுகாப்பு கொடுங்கள்.+
உங்களுடைய அருமையான சக்தி என்னைச் சமமான பாதையில்* வழிநடத்தட்டும்.
11 யெகோவாவே, உங்களுடைய பெயரை மனதில் வைத்து என் உயிரைக் காப்பாற்றுங்கள்.
உங்கள் நீதியின்படி என்னை வேதனையிலிருந்து காப்பாற்றுங்கள்.+