ஏசாயா
23 தீருவுக்கு எதிரான தீர்ப்பு:+
தர்ஷீசின் கப்பல்களே,+ அழுது புலம்புங்கள்.
துறைமுகம் அழிக்கப்பட்டது; அங்கே இனி போக முடியாது.
கித்தீமில்+ அவர்களுக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது.
2 கடலோரத்தில்* வாழ்கிறவர்களே, அமைதியாக இருங்கள்.
கடல் கடந்து தொழில் செய்கிற சீதோனின்+ வியாபாரிகள் உங்கள் தேசத்தைச் செல்வத்தால் நிரப்பியிருக்கிறார்கள்.
3 தீருவே, உனக்கு வருவாயாக இருக்கும் நைல் நதியின் விளைச்சலும்,
சீகோரின்*+ கரையில் விளையும் தானியமும்
பல தேசங்களுக்குக் கப்பலில் அனுப்பப்பட்டு,
உனக்கு லாபம் தேடித் தருகிறது.+
4 சீதோனே, கடலின் கோட்டையே, தலைகுனி.
ஏனென்றால், “எனக்குப் பிரசவ வேதனை வந்ததில்லை,
நான் பிள்ளைகளைப் பெற்றெடுத்தது இல்லை.
ஆண் பிள்ளைகளையோ பெண் பிள்ளைகளையோ வளர்க்கவில்லை” என்று கடல் சொன்னது.+
5 எகிப்துக்கு நடந்ததைக்+ கேள்விப்பட்டபோது ஜனங்கள் எப்படிக் கலங்கினார்களோ,
அப்படியே தீருவுக்கு நடந்ததைக் கேள்விப்படும்போதும் கலங்குவார்கள்.+
6 கடல் கடந்து தர்ஷீசுக்குப் போங்கள்!
கடலோரத்தில் வாழ்கிறவர்களே, அழுது புலம்புங்கள்!
7 காலம்காலமாகச் சந்தோஷத்தில் களைகட்டியிருந்த நகரமா இது?
குடியிருப்பதற்காகத் தூர தேசங்களில் கால் பதித்த நகரமா இது?
8 அவள் பலருக்குக் கிரீடம் சூட்டினாளே.
அவளுடைய வியாபாரிகள் அதிபதிகளாக இருந்தார்களே.
அவளுடைய வணிகர்கள் உலகமெங்கும் மதிக்கப்பட்டார்களே.+
தீருவுக்கு இப்படி நடக்குமென்று தீர்மானித்தது யார்?
9 பரலோகப் படைகளின் யெகோவாவே இதைத் தீர்மானித்திருக்கிறார்.
அவளுடைய எல்லா சிறப்புகளையும் நினைத்து அவள் அடைகிற பெருமையை அவர் அழித்துவிடுவார்.
இந்த உலகம் தலைமேல் வைத்துக் கொண்டாடிய எல்லாரையும் தலைகுனியச் செய்துவிடுவார்.+
10 தர்ஷீசின் மகளே, நைல் நதி கரைபுரண்டு போவது போல நீயும் தேசமெங்கும் போ.
இனி கப்பல் கட்டும் இடமே* இல்லை.+
11 யெகோவா கடலின் மேல் கையை ஓங்கியிருக்கிறார்.
ராஜ்யங்களைக் கவிழ்த்திருக்கிறார்.
பெனிக்கேயின் கோட்டைகளை அழிக்க அவர் கட்டளை கொடுத்திருக்கிறார்.+
கடல் கடந்து கித்தீமுக்குப்+ போ.
அங்கேயும் உனக்கு நிம்மதி கிடைக்காது” என்று சொல்கிறார்.
13 கல்தேயர்களின் தேசத்தைப்+ பாருங்கள்.
அவர்கள் தீருவை பாலைவன மிருகங்களின் இடமாக மாற்றினார்கள்.
அசீரியர்கள்+ அல்ல, கல்தேயர்கள்தான் அப்படிச் செய்தார்கள்.
முற்றுகைக் கோபுரங்களை எழுப்பினார்கள்.
அவளுடைய கோட்டைகளை அழித்தார்கள்.+
அவளைச் சின்னாபின்னமாக்கினார்கள்.
15 ஒரு ராஜாவின் ஆயுள் காலத்துக்குச் சமமான 70 வருஷங்களுக்கு தீரு மறக்கப்படுவாள்.+ அதன் முடிவிலே, இந்தப் பாடலில் வரும் விபச்சாரியைப் போல அவள் ஆகிவிடுவாள்:
16 “மறக்கப்பட்ட விபச்சாரியே, யாழை எடுத்துக்கொண்டு நகரத்தைச் சுற்றி வா.
உன் யாழைத் திறமையாக வாசி.
நிறைய பாடல்களைப் பாடு.
அப்போதுதான், அவர்களுக்கு உன்னைப் பற்றிய நினைவு வரும்.”
17 யெகோவா 70 வருஷங்களின் முடிவிலே தீருவிடம் தன்னுடைய கவனத்தைத் திருப்புவார். அவள் மறுபடியும் தன்னுடைய தொழிலை ஆரம்பிப்பாள். உலக ராஜ்யங்கள் எல்லாவற்றோடும் விபச்சாரம் செய்வாள். 18 ஆனால், அவளுக்குக் கிடைக்கும் லாபமும் கூலியும் சேமித்து வைக்கப்படாது. அது யெகோவாவுக்குப் பரிசுத்தமானதாக ஆகும்; யெகோவாவின் ஜனங்களுக்குப் போய்ச் சேரும். அதனால் அவர்கள் வயிறார சாப்பிடுவார்கள், சிறந்த துணிமணிகளை உடுத்திக்கொள்வார்கள்.+