ஏசாயா
51 “யெகோவாவை ஆர்வமாகத் தேடுகிறவர்களே,
நீதிநெறிகளை நாடுகிறவர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.
நீங்கள் எந்தப் பாறையிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டீர்களோ,
எந்தக் கற்சுரங்கத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டீர்களோ அதை நினைத்துப் பாருங்கள்.
நான் ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்தபோது அவனுக்கு வாரிசே இல்லை.+
நான் அவனை ஆசீர்வதித்து ஒரு பெரிய தேசமாக்கினேன்.+
3 யெகோவா சீயோனை ஆறுதல்படுத்துவார்.+
இடிந்துகிடக்கும் அதன் இடங்களையெல்லாம் எடுத்து நிறுத்துவார்.*+
அங்கே உள்ள வனாந்தரத்தை ஏதேன் தோட்டம்போல் ஆக்குவார்.+
அங்கே இருக்கிற பாலைநிலத்தை யெகோவாவின் தோட்டம்போல் மாற்றுவார்.+
அங்கே சந்தோஷம் களைகட்டும்.
ஜனங்கள் எல்லாரும் நன்றி சொல்லிப் பாடுவார்கள்.+
நான் ஒரு சட்டத்தைக் கொடுப்பேன்.+
என்னுடைய நியாயத்தை வெளிச்சம்போல் மக்கள்மேல் பிரகாசிக்க வைப்பேன்.+
5 நான் சீக்கிரத்தில் நீதி செய்வேன்,+
6 மேலே இருக்கிற வானத்தைப் பாருங்கள்.
கீழே இருக்கிற பூமியையும் பாருங்கள்.
வானம் புகையைப் போல மறைந்துவிடும்.
பூமி துணியைப் போல இற்றுப்போகும்.
ஜனங்கள் பூச்சிகளைப் போலச் செத்துப்போவார்கள்.
7 என்னுடைய சட்டத்தை* இதயத்தில் வைத்திருக்கிற ஜனங்களே,+
நீதியை அறிந்தவர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.
அற்ப மனுஷர்கள் பழித்துப் பேசுவதைக் கேட்டு பயந்துபோகாதீர்கள்.
அவர்கள் கண்டபடி பேசுவதைக் கேட்டு மிரண்டுபோகாதீர்கள்.
8 பொட்டுப்பூச்சி ஒரு உடையைத் தின்பது போல அவர்களைத் தின்றுவிடும்.
அந்துப்பூச்சி* ஒரு கம்பளியை நாசமாக்குவது போல அவர்களை நாசமாக்கிவிடும்.+
ஆனால், என் நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.
நான் தரும் மீட்பு எல்லா தலைமுறைகளுக்கும் கிடைக்கும்.”+
9 யெகோவாவின் கரமே,+ எழும்பு! எழும்பு!
பூர்வ நாட்களிலும், முந்தின தலைமுறைகளிலும் எழும்பியது போலவே எழும்பு!
உன் பலத்தைக் காட்டு!
10 ஆழமான கடலின் தண்ணீரை வற்ற வைத்தது நீதானே?+
மீட்கப்பட்ட ஜனங்களைக் கூட்டிக்கொண்டு போவதற்காக ஆழமான கடலில் பாதை உண்டாக்கியது நீதானே?+
11 யெகோவாவினால் விடுவிக்கப்பட்ட ஜனங்கள் திரும்பி வருவார்கள்.+
ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமுமாக இருப்பார்கள்.
அவர்களுடைய வேதனையும் துக்கமும் காணாமல் போய்விடும்.+
12 “நான்தான் உங்களுக்கு ஆறுதல் தருகிறேன்.+
அப்படியிருக்கும்போது, அற்ப மனுஷனைப் பார்த்து நீ ஏன் பயப்படுகிறாய்?+
அவன் பசும்புல்லைப் போலச் சீக்கிரத்தில் வாடிப்போவானே!
அவரை மறந்ததால் உன்னை அடக்கி ஒடுக்கினவனுடைய* ஆவேசத்தைப் பார்த்துத் தினம் தினம் நடுங்கினாய்.
அவன் உன்னை அடியோடு அழித்துவிடுவான் என்று நினைத்துப் பயந்தாய்.
இப்போது அவனுடைய ஆவேசம் எங்கே?
14 சங்கிலிகளால் கட்டப்பட்டுக் கிடப்பவன் சீக்கிரத்தில் விடுதலை ஆவான்.+
அவன் பசியில் தவிக்க மாட்டான்.
இறந்து, குழிக்குள் போக மாட்டான்.
15 நான் உன் கடவுளாகிய யெகோவா.
நான் கடலைக் கொந்தளிக்க வைக்கிறேன், அலைகளைப் பொங்கியெழ வைக்கிறேன்.+
பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் என்னுடைய பெயர்.+
16 என் வார்த்தைகளை உன் நாவில் வைப்பேன்.
என் கையின் கீழே* உன்னைப் பாதுகாப்பேன்.+
உன்னைப் பயன்படுத்தி வானத்தை விரிப்பேன், பூமிக்கு அஸ்திவாரம் போடுவேன்.+
சீயோனிடம், ‘நீ என் ஜனம்’ என்று சொல்வேன்.+
17 விழித்தெழு! விழித்தெழு! எருசலேமே, எழுந்திரு!+
யெகோவாவின் கோபம் என்ற கோப்பையிலிருந்து நீ குடித்தாய்.
அதில் இருப்பதையெல்லாம் குடித்துவிட்டாய்.
தள்ளாட வைக்கும் அந்தக் கோப்பையிலிருந்து குடித்துத் தீர்த்துவிட்டாய்.+
18 உனக்கு வழிகாட்ட உன்னுடைய மகன்களில் யாருமே இல்லை.
உன் கையைப் பிடித்துச் செல்ல நீ வளர்த்த பிள்ளைகளில் யாருமே இல்லை.
19 இரண்டு விதங்களில் உனக்கு அழிவு வந்திருக்கிறது.
நாசமும் சீர்குலைவும் ஒரு பக்கம்; பஞ்சமும் போரும் இன்னொரு பக்கம்.+
உன்னைப் பார்த்துப் பரிதாபப்பட ஆளே இல்லை.
உனக்கு ஆறுதல் சொல்ல யாரும் இல்லை.+
20 உன்னுடைய மகன்கள் மயங்கிவிட்டார்கள்.+
எல்லா தெரு முனைகளிலும் விழுந்து கிடக்கிறார்கள்.
வலையில் சிக்கிய காட்டு மிருகத்தைப் போலக் கிடக்கிறார்கள்.
யெகோவாவின் கோபத்தையும் தண்டனையையும் முழுமையாக அனுபவிக்கிறார்கள்.”
21 திராட்சமதுவைக் குடிக்காமலேயே போதையில் தள்ளாடுகிற பெண்ணே,
தண்டனை அனுபவிக்கிறவளே, தயவுசெய்து இதைக் கேள்.
22 உன் எஜமானும், தன்னுடைய ஜனங்களுக்காக வழக்காடுகிற கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்:
“என்னுடைய கோபம் என்ற கோப்பையை உன் கையிலிருந்து எடுத்துவிடுவேன்.
தள்ளாட வைக்கும் அந்தக் கோப்பையிலிருந்து+
இனி ஒருபோதும் நீ குடிக்க மாட்டாய்.+
23 உனக்குக் கொடுமை செய்கிறவர்களின் கையில் அதைக் கொடுப்பேன்.+
அவர்கள் உன்னிடம், ‘நீ குப்புற விழு, உன்மேல் ஏறி நடக்க வேண்டும்!’ என்று சொன்னார்கள்.
நீயும் தரையில் குப்புற விழுந்து உன் முதுகைக் காட்டினாய்.
அவர்கள் தெருவில் நடப்பதுபோல் உன் முதுகின் மேல் ஏறி நடந்தார்கள்.”