ஆமோஸ்
9 பலிபீடத்துக்கு மேலாக யெகோவா நிற்பதைப் பார்த்தேன்.+ அப்போது அவர், “தூண்களின் மேல்பகுதியை உடைத்துப்போடு, அவற்றின் அஸ்திவாரம் ஆட்டம் காணட்டும். தூண்களின் தலைப்பகுதியைத் தகர்த்துப்போடு. ஜனங்களில் மீதியாக இருப்பவர்களை நான் வாளால் கொல்வேன். யாராலும் தப்பித்து ஓட முடியாது, தப்பிக்க நினைப்பவர்கள் மாட்டிக்கொள்வார்கள்.+
2 அவர்கள் பாதாளம்வரை* குழிதோண்டிப் பதுங்கிக்கொண்டாலும்,
அவர்களை மேலே இழுத்து வருவேன்.
அவர்கள் வானம்வரை ஏறிப் போனாலும்,
அவர்களைக் கீழே இழுத்து வருவேன்.
அவர்கள் என் கண்களிலிருந்து தப்பிக்க கடலுக்கு அடியில் மறைந்துகொண்டாலும்,
அவர்களைக் கடிக்கும்படி பாம்புக்குக் கட்டளை கொடுப்பேன்.
4 எதிரிகள் அவர்களைப் பிடித்துக்கொண்டு போனாலும்,
அவர்களைக் கொல்லும்படி வாளுக்குக் கட்டளை கொடுப்பேன்.+
அவர்களை ஆசீர்வதிப்பதற்குப் பதிலாக அழிப்பதிலேயே குறியாக இருப்பேன்.+
5 உன்னதப் பேரரசரான பரலோகப் படைகளின் யெகோவா தேசத்தின் மேல்* கை வைப்பார்.
அப்போது அது அதிரும்,+ ஜனங்களெல்லாம் புலம்புவார்கள்.+
அது எகிப்தின் நைல் நதிபோல் கொந்தளித்து,
அதே நைல் நதிபோல் அடங்கிவிடும்.+
6 ‘பரலோகம்வரை படிக்கட்டுகளைக் கட்டுபவரும்,
வானம் என்ற கூரையைப் பூமிமேல் விரிப்பவரும்,
கடல்நீரை அள்ளி எடுப்பவரும்,
பூமிமேல் அதைப் பொழிய வைப்பவரும்+
யெகோவா என்ற பெயர் உள்ளவர்தான்.’+
7 யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேல் ஜனங்களே, நீங்கள் எனக்கு கூஷ் வம்சத்தாரைப் போலத்தானே இருக்கிறீர்கள்?
உங்களை நான் எகிப்து தேசத்திலிருந்து விடுதலை செய்யவில்லையா?+
பெலிஸ்தியர்களை கிரேத்தாவிலிருந்தும்,+ சீரியர்களை கீரிலிருந்தும் கூட்டிக்கொண்டு வரவில்லையா?+
8 யெகோவா சொல்வது இதுதான்: ‘யெகோவாவாகிய நான் உன்னதப் பேரரசர். பாவம் நிறைந்த ராஜ்யத்தை என் கண்கள் பார்க்கின்றன.
அதை இந்தப் பூமியிலிருந்து அழித்துவிடுவேன்.+
ஆனால், யாக்கோபின் வம்சத்தாரை அடியோடு அழிக்க மாட்டேன்.+
சல்லடையால் சலிப்பதுபோல் அவர்களைச் சலிப்பேன்.
அப்போது, எல்லா கற்களும் பிடிபடும்.*
10 பாவம் செய்கிற என் ஜனங்கள், “அழிவு எங்களுக்கு வராது, எங்கள் பக்கத்தில்கூட வராது” என்று சொல்கிறார்கள்.
ஆனால், அவர்கள் எல்லாரும் வாளால் சாவார்கள்.’
11 ‘விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை அந்த நாளிலே எடுத்து நிறுத்துவேன்.+
கூடாரத்தின் கிழிசல்களைத் தைப்பேன்.*
சேதமானவற்றைச் சரிசெய்வேன்.
பூர்வ காலத்தில் இருந்ததைப் போலவே திரும்பக் கட்டுவேன்.+
12 ஏதோமில் மிச்சம் இருப்பதெல்லாம் அப்போது அவர்களுடைய சொத்தாகும்.+
என்னுடைய பெயரால் அழைக்கப்படுகிற எல்லா தேசங்களும் அவர்களுக்குச் சொந்தமாகும்.’
இவற்றைச் செய்கிற யெகோவாவே இதைச் சொல்கிறார்.
13 யெகோவா சொல்வது இதுதான்: ‘காலம் வரப்போகிறது.
அப்போது, அமோகமான விளைச்சலை அறுவடை செய்வதற்குள் உழுவதற்கான நேரமே வந்துவிடும்.
ஏராளமான திராட்சைப் பழங்களைப் பிழிந்து முடிப்பதற்குள் விதைப்பதற்கான நேரமே வந்துவிடும்.+
மலைகளிலிருந்து தித்திப்பான திராட்சமது சொட்டும்.+
எல்லா குன்றுகளிலும் அது வழிந்தோடும்.+
14 சிறைபிடிக்கப்பட்டுப் போன என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களைத் திரும்பவும் கூட்டிக்கொண்டு வருவேன்.+
இடிந்து கிடக்கும் நகரங்களை அவர்கள் மறுபடியும் கட்டி அவற்றில் குடியிருப்பார்கள்.+
திராட்சைத் தோட்டங்களை அமைத்து, அவற்றிலிருந்து கிடைக்கும் திராட்சமதுவைக் குடிப்பார்கள்.+
பழத் தோட்டங்களை அமைத்து அவற்றின் பழங்களைச் சாப்பிடுவார்கள்.’+