சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; எதித்தூன்.* ஆசாப்பின்+ சங்கீதம்.
77 நான் கடவுளிடம் கெஞ்சிக் கதறுவேன்.
என் குரலை உயர்த்திக் கடவுளிடம் கெஞ்சிக் கதறுவேன்.
அவர் என் சத்தத்தைக் கேட்பார்.+
2 இக்கட்டு நாளில் நான் யெகோவாவைத் தேடுகிறேன்.+
ராத்திரியில் என் கைகளை அவர்முன் விரித்தபடியே இருக்கிறேன்.
ஆனாலும், எனக்கு ஆறுதல் கிடைத்த பாடில்லை.
4 கடவுளே, நான் தூங்க முடியாதபடி என் கண் இமைகளை நீங்கள் பிடித்திருக்கிறீர்கள்.
பேச்சே வராத அளவுக்கு நான் கலங்கிப்போயிருக்கிறேன்.
6 ராத்திரி நேரத்தில் என் பாடலை நினைத்துப் பார்க்கிறேன்.+
இதயத்தில் ஆழமாக யோசித்துப் பார்க்கிறேன்.+
நன்றாக ஆராய்ந்து பார்க்கிறேன்.
7 யெகோவா எங்களை ஒரேயடியாக ஒதுக்கிவிடுவாரா?+
இனி கருணை காட்டவே மாட்டாரா?+
8 அவருடைய மாறாத அன்பு அடியோடு மறைந்துவிட்டதா?
அவருடைய வாக்குறுதிகள் நிறைவேறுவதை இனி எந்தத் தலைமுறையுமே பார்க்க முடியாதா?
10 “உன்னதமான கடவுள் எங்களுக்கு உதவி செய்வதை நிறுத்திவிட்டார்,
இதுதான் எனக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது”*+ என்று நான் புலம்பிக்கொண்டிருக்க வேண்டுமா?
11 “யா”* செய்த செயல்களை நினைத்துப் பார்ப்பேன்.
பூர்வ காலத்தில் நீங்கள் செய்த அதிசயங்களை யோசித்துப் பார்ப்பேன்.
12 கடவுளே, நீங்கள் செய்த காரியங்களையெல்லாம் தியானித்துப் பார்ப்பேன்.
உங்களுடைய செயல்களைப் பற்றி ஆழமாக யோசிப்பேன்.+
13 கடவுளே, உங்களுடைய வழிகள் பரிசுத்தமானவை.
கடவுளே, உங்களைப் போன்ற மகத்தான கடவுள் யார்?+
14 நீங்கள்தான் உண்மையான கடவுள், அற்புதமான காரியங்களைச் செய்கிறவர்.+
உங்கள் பலத்தை எல்லா மக்களுக்கும் காட்டியிருக்கிறீர்கள்.+
15 உங்கள் ஜனங்களான யாக்கோபின் வம்சத்தாரையும் யோசேப்பின் வம்சத்தாரையும்,
உங்களுடைய வல்லமையால் காப்பாற்றியிருக்கிறீர்கள்.+ (சேலா)
ஆழமான தண்ணீர் கொந்தளித்தது.
17 மேகங்கள் மழை பொழிந்தன.
மேகமூட்டமான வானம் முழங்கியது.
உங்களுடைய அம்புகள் அங்கும் இங்கும் பறந்தன.+
18 உங்களுடைய இடிமுழக்கத்தின் சத்தம்,+
ரதங்களுடைய சக்கரங்களின் சத்தத்தைப் போல இருந்தது.
மின்னல்களின் வெளிச்சம் பூமியைப் பிரகாசிக்க வைத்தது.+
பூமி அதிர்ந்து, குலுங்கியது.+