சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; கோராகுவின்+ மகன்களுடைய பாடல். மஸ்கீல்.*
44 கடவுளே, பல காலத்துக்கு முன்னால் நீங்கள் செய்த அதிசயங்களைப் பற்றி எங்கள் காதுகளாலேயே கேட்டோம்.
எங்கள் முன்னோர்களின் காலத்தில் நீங்கள் செய்த காரியங்களைப் பற்றி அவர்களுடைய வாயாலேயே கேட்டோம்.+
2 உங்களுடைய கையால் நீங்கள் மற்ற தேசத்தாரைத் துரத்திவிட்டு,+
அங்கே எங்களுடைய முன்னோர்களைக் குடிவைத்தீர்கள்.+
மற்ற ஜனங்களை வீழ்த்தி, அங்கிருந்து விரட்டியடித்தீர்கள்.+
3 எங்கள் முன்னோர்கள் அந்தத் தேசத்தை வாளால் கைப்பற்றவில்லை.+
அவர்கள் தங்களுடைய கைபலத்தால் ஜெயிக்கவில்லை.+
நீங்கள் அவர்கள்மேல் பிரியமாக இருந்ததால்,+
உங்கள் வலது கையாலும், உங்கள் பலத்தாலும்,+
உங்கள் முகத்தின் பிரகாசத்தாலும்தான் ஜெயித்தார்கள்.
5 எங்கள் எதிரிகளை உங்களுடைய பலத்தால் துரத்தியடிப்போம்.+
எங்களுக்கு எதிராகக் கிளம்புகிறவர்களை உங்களுடைய பெயரால் மிதித்துப்போடுவோம்.+
7 எதிரிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றியவர் நீங்கள்தான்.+
எங்களை வெறுக்கிற ஆட்களைத் தலைகுனிய வைத்தவர் நீங்கள்தான்.
8 கடவுளே, நாள் முழுவதும் நாங்கள் உங்களையே புகழ்வோம்.
உங்களுடைய பெயருக்கு என்றென்றும் நன்றி சொல்வோம். (சேலா)
9 ஆனால், இப்போது எங்களை ஒதுக்கித்தள்ளி, தலைகுனிய வைத்துவிட்டீர்கள்.
எங்கள் படைகளுக்குத் துணையாக வராமல் இருக்கிறீர்கள்.
10 நாங்கள் எதிரியிடம் தோற்றுப்போய் ஓடும்படி செய்கிறீர்கள்.+
விரோதிகள் எங்களிடம் இஷ்டத்துக்குக் கொள்ளையடிக்கிறார்கள்.
11 நீங்கள் எங்களைச் செம்மறியாடுகளைப் போல எதிரிகளுக்கு இரையாக்குகிறீர்கள்.
எங்களை மற்ற தேசங்களுக்குச் சிதறிப்போக வைத்திருக்கிறீர்கள்.+
12 உங்களுடைய மக்களை அடிமாட்டு விலைக்கு* விற்கிறீர்கள்.+
லாபம் பார்க்காமல் அவர்களை விற்றுவிடுகிறீர்கள்.
13 எங்களைச் சுற்றியிருக்கிற தேசத்தாருக்குமுன்
எங்களைக் கேவலப்படுத்தி, கேலிப்பொருளாக ஆக்குகிறீர்கள்.
14 மற்ற தேசத்தாருடைய ஏளனப் பேச்சுக்கு எங்களை ஆளாக்குகிறீர்கள்.+
எங்களைப் பார்த்து மற்றவர்கள் கிண்டலாகத் தலையாட்ட வைக்கிறீர்கள்.
15 நாள் முழுவதும் நான் அவமானப்படுகிறேன்.
வெட்கத்தில் கூனிக்குறுகுகிறேன்.
16 ஏனென்றால், பழிவாங்குகிற எதிரியின் கேலியும் கிண்டலும்,
ஏச்சும் பேச்சும் காதில் விழுந்துகொண்டே இருக்கிறது.
18 எங்கள் இதயம் உங்களைவிட்டு விலகவில்லை.
எங்கள் காலடிகள் உங்களுடைய பாதையைவிட்டு விலகவில்லை.
19 ஆனால், நரிகள் வாழும் இடத்தில் நீங்கள் எங்களை நொறுக்கித்தள்ளினீர்கள்.
கும்மிருட்டால் எங்களை மூடினீர்கள்.
20 எங்கள் கடவுளுடைய பெயரை நாங்கள் மறந்துவிட்டால்,
அல்லது எங்கள் கைகளை விரித்து வேறு தெய்வத்திடம் வேண்டினால்,
21 கடவுளுக்கு அது தெரியாமல் போய்விடுமா?
இதயத்தில் புதைந்திருக்கும் ரகசியங்கள்கூட அவருக்குத் தெரியுமே!+
23 யெகோவாவே, எழுந்திருங்கள். ஏன் தூங்கிக்கொண்டு இருக்கிறீர்கள்?+
எழுந்திருங்கள்! எங்களை ஒரேயடியாக ஒதுக்கிவிடாதீர்கள்.+
24 ஏன் உங்கள் முகத்தை மறைத்துக்கொள்கிறீர்கள்?
நாங்கள் படுகிற கஷ்டங்களையும் பாடுகளையும் ஏன் மறந்துவிடுகிறீர்கள்?
26 எங்களுக்கு உதவி செய்ய எழுந்து வாருங்கள்!+
உங்களுடைய மாறாத அன்பினால் எங்களைக் காப்பாற்றுங்கள்.+