சங்கீதம்
ஒரு பாடல். தாவீதின் சங்கீதம்.
108 கடவுளே, நான் உள்ளத்தில் உறுதியோடு இருக்கிறேன்.
நான் முழு மூச்சோடு இசை இசைத்துப் பாடுவேன்.+
2 நரம்பிசைக் கருவியே, விழித்தெழு! யாழே, நீயும் விழித்தெழு!+
நான் விடியலைத் தட்டி எழுப்புவேன்.
4 ஏனென்றால், உங்களுடைய மாறாத அன்பு மகத்தானது.
அது வானத்தைப் போல உயர்ந்தது.+
உங்களுடைய உண்மைத்தன்மை ஆகாயத்தையே தொடுகிறது.
6 உங்களுக்குப் பிரியமானவர்கள் விடுவிக்கப்படும்படி,
உங்கள் வலது கையால் எங்களைக் காப்பாற்றி, எனக்குப் பதில் கொடுங்கள்.+
7 பரிசுத்தமான* கடவுள் இப்படிச் சொன்னார்:
“நான் சந்தோஷத்தோடு என் ஜனங்களுக்கு சீகேமைச்+ சொத்தாகக் கொடுப்பேன்.
சுக்கோத் பள்ளத்தாக்கைப்+ பங்காக அளந்து கொடுப்பேன்.
9 மோவாப் நான் பாதங்களைக் கழுவுகிற பாத்திரம்.+
ஏதோமின் மேல் என் செருப்பைத் தூக்கியெறிவேன்.+
பெலிஸ்தியாவைத் தோற்கடித்து வெற்றி முழக்கம் செய்வேன்.”+
10 முற்றுகை போடப்பட்ட நகரத்துக்கு யார் என்னை அழைத்துக்கொண்டு போவார்?
ஏதோம்வரை யார் என்னை வழிநடத்துவார்?+