நீதிமொழிகள்
25 இவையும் சாலொமோனின் நீதிமொழிகள்;+ இவற்றை யூதாவின் ராஜாவான எசேக்கியாவின்+ ஆட்கள் தொகுத்து, நகலெடுத்தார்கள்:
2 எந்த விஷயத்தையும் ரகசியமாக வைப்பது கடவுளுக்கு மகிமை.+
எந்த விஷயத்தையும் தீர ஆராய்வது ராஜாவுக்குப் பெருமை.
3 வானத்தின் உயரத்தையும் பூமியின் ஆழத்தையும் தெரிந்துகொள்ள முடியாததுபோல்,
ராஜாவின் உள்ளத்தில் இருப்பதையும் புரிந்துகொள்ள முடியாது.
5 ராஜாவின் முன்னாலிருந்து பொல்லாதவனைத் துரத்திவிடு.
அப்போது, அவருடைய சிம்மாசனம் நீதியால் உறுதியாக நிலைநிறுத்தப்படும்.+
6 ராஜாவுக்கு முன்னால் உன்னை உயர்த்தாதே.+
முக்கியப் பிரமுகர்களின் நடுவே உட்காராதே.+
7 ராஜா உன்னைப் பெரிய மனிதர்கள் முன்னால் அவமானப்படுத்துவதைவிட,
“இங்கே வந்து உட்கார்” என்று அவராகவே சொல்வதுதான் மேல்!+
8 அவசரப்பட்டு ஒருவன்மேல் வழக்கு போடாதே.
உன்மேல் தப்பு இருப்பதாக அவன் நிரூபித்துவிட்டால் என்ன செய்வாய்?+
9 அதனால், பிரச்சினையை அவனோடு நேரடியாகப் பேசித் தீர்த்துக்கொள்.+
ஆனால், அவன் உன்னிடம் சொன்ன ரகசியங்களை* அம்பலப்படுத்தாதே.+
10 ஏனென்றால், நீ யாரிடம் ரகசியத்தைச் சொல்கிறாயோ அவனே உன்னை அவமானப்படுத்திவிடுவான்.
நீ மோசமான விஷயத்தை* பரப்பிய பிறகு அதைத் திரும்பப் பெற முடியாதே!
12 ஒருவர் ஞானமாகக் கண்டிக்கும்போது அதை நீ காதுகொடுத்துக் கேட்டால்,
அவர் உனக்குத் தங்கக் கம்மல் போலவும் சொக்கத்தங்கத்தில் செய்த நகை போலவும் இருப்பார்.+
13 குளிர்ந்த பனி அறுவடை நாளில் புத்துணர்ச்சி தருவதுபோல்,
உண்மையுள்ள தூதுவனும் தன் எஜமானுக்குப் புத்துணர்ச்சி தருகிறான்.+
14 அன்பளிப்பு கொடுப்பதாகப் பெருமையடித்துவிட்டு அதைக் கொடுக்காமல் இருக்கிறவன்,
மழை தராத மேகங்களையும் காற்றையும் போல இருக்கிறான்.+
17 அடுத்தவன் வீட்டுக்கு அடிக்கடி போகாதே.
போனால், அவன் அலுத்துப்போய் உன்னை வெறுக்க ஆரம்பித்துவிடுவான்.
18 அடுத்தவனுக்கு எதிராகப் பொய் சாட்சி சொல்கிறவன்
19 கஷ்ட காலங்களில் பொறுப்பில்லாதவனை* நம்புவது
உடைந்த பல்லையும் நொண்டுகிற காலையும் நம்புவதற்குச் சமம்.
20 சோகத்தில் வாடுகிறவனுக்கு முன்பாகப் பாட்டுப் பாடுகிறவன்,+
குளிர் காலத்தில் உடையைக் கழற்றுகிறவன் போலவும்,
சோடா உப்பின் மேல் ஊற்றப்படுகிற காடியைப் போலவும் இருக்கிறான்.
21 உன் எதிரி பசியாக இருந்தால் அவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொடு.
அவன் தாகமாக இருந்தால் அவனுக்கு ஏதாவது குடிக்கக் கொடு.+
22 இப்படிச் செய்யும்போது, நெருப்புத் தணலை அவன் தலைமேல் குவிப்பாய்.*+
யெகோவா உனக்குப் பலன் கொடுப்பார்.
23 வடக்கிலிருந்து வீசுகிற காற்று கனமழையை வர வைக்கும்.
வம்பளக்கிற வாய் மற்றவர்களுக்குக் கோபத்தை வர வைக்கும்.+
24 சண்டைக்கார* மனைவியோடு வீட்டுக்குள் குடியிருப்பதைவிட,
கூரைக்கு மேலே ஒரு ஓரமாகத் தங்கியிருப்பதே மேல்.+
25 தூர தேசத்திலிருந்து வருகிற நல்ல செய்தி,
தாகத்தில் தவிப்பவனுக்குக் கிடைக்கிற குளிர்ந்த தண்ணீரைப் போல் இருக்கிறது.+
26 பொல்லாதவனுக்கு இணங்கிப்போகிற நீதிமான்,
கலங்கிய நீரூற்று போலவும் பாழடைந்த கிணறு போலவும் இருக்கிறான்.