சங்கீதம்
2 இஸ்ரவேல் தன்னுடைய மகத்தான படைப்பாளரை+ நினைத்து சந்தோஷப்படட்டும்.
சீயோனின் பிள்ளைகள் தங்கள் ராஜாவை நினைத்து மகிழ்ச்சி அடையட்டும்.
3 அவர்கள் ஆடிப்பாடி அவருடைய பெயரைப் புகழட்டும்.+
கஞ்சிராவையும் யாழையும் இசைத்து அவரைப் புகழ்ந்து பாடட்டும்.+
4 யெகோவா தன்னுடைய மக்களைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்.+
தாழ்மையானவர்களை* மீட்பினால் அலங்கரிக்கிறார்.+
5 உண்மையுள்ளவர்கள்* தங்களுக்குக் கிடைக்கும் மகிமையினால் பூரித்துப்போகட்டும்.
தங்கள் படுக்கைகளில் சந்தோஷ ஆரவாரம் செய்யட்டும்.+
6 கடவுளை அவர்கள் வாயாரப் புகழ்ந்து பாடட்டும்.
இரண்டு பக்கமும் கூர்மையான வாளைக் கையில் எடுக்கட்டும்.
7 ஏனென்றால், அவர்கள் மற்ற தேசங்களைப் பழிவாங்க வேண்டும்.
மற்ற ஜனங்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்.
8 அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளால் கட்ட வேண்டும்.
அவர்களுடைய தலைவர்களுக்கு இரும்பு விலங்குகளை மாட்ட வேண்டும்.
9 அவர்களுக்கு எதிராக எழுதப்பட்ட தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும்.+
இந்தப் பெருமை கடவுளுக்கு உண்மையாக* இருக்கிற எல்லாருக்கும் கொடுக்கப்படும்.
“யா”வைப் புகழுங்கள்!*