நீதிமொழிகள்
21 ராஜாவின் இதயம் யெகோவாவின் கையில் நீரோடைபோல்* இருக்கிறது.
தான் விரும்பும் திசையில் அதை அவர் திருப்பிவிடுகிறார்.+
4 அக்கிரமக்காரர்களின் பாதைக்கு விளக்குபோல் இருக்கிற ஆணவக் கண்களும்,
அகம்பாவ இதயமும் பாவம் நிறைந்தவை.+
5 கடினமாக உழைக்கிறவனுடைய திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும்.+
ஆனால், எதையும் அவசரப்பட்டுச் செய்கிறவர்களுக்கு வறுமைதான் வரும்.+
7 பொல்லாதவர்கள் நியாயமாக நடக்க மறுக்கிறார்கள்.
அதனால், அவர்கள் செய்கிற கொடுமைகளே அவர்களை வாரிக்கொண்டு போய்விடும்.+
9 சண்டைக்கார* மனைவியோடு வீட்டுக்குள் குடியிருப்பதைவிட,
கூரைக்கு மேலே ஒரு ஓரமாகத் தங்கியிருப்பதே மேல்.+
11 கேலி செய்கிறவனைத் தண்டிக்கும்போது அனுபவமில்லாதவனும் ஞானமுள்ளவனாக ஆகிறான்.
ஞானமுள்ளவன் ஒரு விஷயத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளும்போது* அறிவை அடைகிறான்.*+
12 நீதியுள்ள கடவுள் பொல்லாதவனின் வீட்டைக் கவனிக்கிறார்.
பொல்லாதவர்கள் எல்லாரையும் ஒழித்துக்கட்டுகிறார்.+
14 ரகசியமாகக் கொடுக்கப்படுகிற அன்பளிப்பு கோபத்தைத் தணிக்கும்.+
மறைவாகக் கொடுக்கப்படுகிற லஞ்சம் ஆக்ரோஷத்தை அடக்கும்.
15 நியாயமாக நடப்பது நீதிமானுக்குச் சந்தோஷம் தருகிறது.+
ஆனால், அக்கிரமம் செய்கிறவனுக்கு அது கொடுமையாக இருக்கிறது.
20 ஞானமுள்ளவனின் வீட்டில் அருமையான பொக்கிஷமும் எண்ணெயும் இருக்கும்.+
ஆனால், முட்டாள் தன்னிடம் இருப்பதையெல்லாம் வெட்டியாகச் செலவழித்துவிடுவான்.+
22 ஞானமுள்ளவனால் பலசாலிகளுடைய நகரத்தின் மதிலில்கூட ஏற முடியும்.
அவர்கள் நம்பியிருக்கிற கோட்டையைக்கூட அவனால் தகர்க்க முடியும்.+
25 சோம்பேறி எதை நினைத்து ஏங்குகிறானோ அதுவே அவனைக் கொன்றுவிடும்.
ஏனென்றால், அவனுடைய கைகள் வேலை செய்ய மறுக்கின்றன.+
26 அவன் நாள் முழுவதும் பேராசையோடு ஏங்குகிறான்.
ஆனால், நீதிமான் கஞ்சத்தனம் காட்டாமல் எல்லாவற்றையும் கொடுக்கிறான்.+
27 பொல்லாதவன் கொடுக்கிற பலி அருவருப்பானது என்றால்,+
கெட்ட எண்ணத்தோடு* அவன் கொடுக்கிற பலி இன்னும் எந்தளவுக்கு அருவருப்பானது!
29 பொல்லாதவன் தனக்கு எந்தப் பிரச்சினையுமே இல்லாததுபோல் காட்டிக்கொள்கிறான்.+
ஆனால், நேர்மையானவனின் வழிதான் உறுதியான வழி.+
30 யெகோவாவுக்கு எதிரான ஞானமும் இல்லை, பகுத்தறிவும் இல்லை, ஆலோசனையும் இல்லை.+