ஏசாயா
52 விழித்தெழு! சீயோனே, விழித்தெழு!+ உன் பலத்தைத் திரட்டு!+
பரிசுத்த நகரமான எருசலேமே, அழகான உடைகளை உடுத்திக்கொள்!+
விருத்தசேதனம் செய்யாதவர்களும் அசுத்தமானவர்களும் இனி உன்னிடம் வர மாட்டார்கள்.+
2 எருசலேமே, நீ எழுந்து, மண்ணை உதறிவிட்டு, சிம்மாசனத்தில் உட்காரு.
சிறைபிடிக்கப்பட்ட சீயோன் மகளே, உன் கழுத்திலுள்ள கயிறுகளைக் கழற்றிவிடு.+
3 யெகோவா இப்படிச் சொல்கிறார்:
4 உன்னதப் பேரரசராகிய யெகோவா இப்படிச் சொல்கிறார்:
“என் ஜனங்கள் முதலில் எகிப்துக்குப் போய் அங்கே வேறு தேசத்து ஜனங்களைப் போல வாழ்ந்தார்கள்.+
அதன் பிறகு, அசீரியா காரணமே இல்லாமல் அவர்களைக் கொடுமைப்படுத்தியது.”
5 “இப்போது இந்த இடத்தில் நான் என்ன செய்வது?” என்று யெகோவா கேட்கிறார்.
“என் ஜனங்கள் விலை இல்லாமல் பிடித்துக்கொண்டு போகப்பட்டார்கள்.
அவர்களை ஆளுகிறவர்கள் வெற்றி கிடைத்த பெருமையில் ஆரவாரம் செய்கிறார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.
“நாள் முழுவதும் என் பெயர் அவமதிக்கப்படுகிறது.+
6 அதனால், என் பெயரை என் ஜனங்கள் தெரிந்துகொள்வார்கள்.+
இதையெல்லாம் சொல்லியிருப்பது நான்தான் என்பதை அந்த நாளில் அவர்கள் உணர்ந்துகொள்வார்கள்.
நானேதான் இதையெல்லாம் சொல்லியிருக்கிறேன்!”
7 நல்ல செய்தி சொல்ல மலைகள்மேல் ஏறி வருகிறவருடைய பாதங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன!+
“விடிவுகாலம் வரப்போகிறது!
சீக்கிரத்தில் சமாதானம்+ கிடைக்கப்போகிறது!
கடவுள் மீட்பு தரப்போகிறார்!” என்று அவர் அறிவிக்கிறார்.
சீயோனைப் பார்த்து, “உன் கடவுள் ராஜாவாகிவிட்டார்!”+ என்று சொல்கிறார்.
8 இதோ, உன் காவல்காரர்கள் குரலெழுப்புவதைக் கேள்!
அவர்கள் ஒன்றுசேர்ந்து சந்தோஷமாகக் குரலெழுப்புகிறார்கள்.
சீயோன் ஜனங்களை யெகோவா மறுபடியும் ஒன்றுசேர்ப்பதை அவர்கள் கண்கூடாகப் பார்ப்பார்கள்.
9 எருசலேமின் இடிபாடுகளே,+ சந்தோஷம் பொங்கப் பாடுங்கள்.
யெகோவா அவருடைய ஜனங்களுக்கு ஆறுதல் தந்திருக்கிறார்;+ எருசலேமை விடுவித்திருக்கிறார்.+
10 யெகோவா எல்லா தேசங்களுக்கும் முன்பாகத் தன்னுடைய பரிசுத்தமான கையின் பலத்தைக் காட்டியிருக்கிறார்.+
நம் கடவுள் தரும் மீட்பைப் பூமியெங்கும் இருக்கிறவர்கள் பார்ப்பார்கள்.+
11 புறப்படுங்கள், புறப்படுங்கள், அங்கிருந்து வெளியே வாருங்கள்;+ அசுத்தமான எதையும் தொடாதீர்கள்!+
யெகோவாவின் பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே,+
அங்கிருந்து கிளம்பி வாருங்கள்;+ உங்களைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
12 நீங்கள் பதற வேண்டாம்.
தலைதெறிக்க ஓட வேண்டாம்.
ஏனென்றால், இஸ்ரவேலின் கடவுளான யெகோவா உங்களைப் பாதுகாப்பார்.
உங்களுக்கு முன்னால் போயும் பாதுகாப்பார்,+ பின்னால் வந்தும் பாதுகாப்பார்.+
13 என் ஊழியர்+ விவேகமாக* நடந்துகொள்வார்.
அவர் உயர்த்தப்படுவார்.
மிகுந்த மேன்மையும் சிறப்பும் அடைவார்.+
14 அவருடைய தோற்றம் வேறெந்த மனுஷனுடைய தோற்றத்தையும்விட ரொம்பவே உருக்குலைக்கப்பட்டதையும்,
அவருடைய உருவம் வேறெந்த மனிதனுடைய உருவத்தையும்விட ரொம்பவே கோரமாக்கப்பட்டதையும் பார்த்து,
பலர் அதிர்ச்சி அடைந்தார்கள்.