மீகா
உங்களுக்கு நீதிநியாயம் தெரிய வேண்டாமா?
2 நீங்கள் நல்லதை வெறுக்கிறீர்கள்,+ கெட்டதை விரும்புகிறீர்கள்.+
என் ஜனங்களுடைய தோலை உரிக்கிறீர்கள், அவர்களுடைய எலும்புகளிலிருந்து சதையைப் பிய்த்தெடுக்கிறீர்கள்.+
3 பிய்த்தெடுத்த சதையைச் சாப்பிடவும் செய்கிறீர்கள்.+
என் ஜனங்களின் தோலைக் கிழித்தெடுக்கிறீர்கள்.
அவர்களுடைய எலும்புகளை உடைத்து நொறுக்குகிறீர்கள்.+
பானையில் வேகிற இறைச்சித் துண்டுகளைப் போல் ஆக்குகிறீர்கள்.
4 அந்த நாளில், நீங்கள் உதவிக்காக யெகோவாவைக் கூப்பிடுவீர்கள்.
ஆனால், அவர் பதில் சொல்ல மாட்டார்.
5 தீர்க்கதரிசிகள் யெகோவாவின் ஜனங்களைக் கெட்ட வழிக்குக் கொண்டுபோகிறார்கள்.+
யாராவது சாப்பாடு கொடுக்கும்போது,*+ ‘நன்றாக இருப்பீர்கள்!’ என்று வாழ்த்துகிறார்கள்.+
ஆனால் யாராவது சாப்பாடு கொடுக்காதபோது, ‘நாசமாய்ப் போவீர்கள்!’ என்று சபிக்கிறார்கள்.
6 அவர்களிடம் கடவுள், ‘உங்களுக்கு இரவு நேரம் வரும்,+ நீங்கள் எந்தத் தரிசனமும் பார்க்க மாட்டீர்கள்.+
கும்மிருட்டில்தான் கிடப்பீர்கள், குறிசொல்ல மாட்டீர்கள்.
தீர்க்கதரிசிகளின் வாழ்க்கையில் சூரியன் மறைந்துவிடும்.
பகல் இரவாகிவிடும்.+
கடவுளிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்காததால்
அவர்கள் எல்லாரும் அவமானத்தில் தங்கள் வாயை* மூடிக்கொள்வார்கள்’ என்று சொல்கிறார்” என்றேன்.
8 யாக்கோபுக்கு அவன் குற்றத்தையும், இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் புரிய வைக்க,
யெகோவாவின் சக்தி என்னைப் பலத்தினாலும்*
நீதியினாலும் தைரியத்தினாலும் நிரப்பியிருக்கிறது.
9 யாக்கோபின் வம்சத் தலைவர்களே, தயவுசெய்து கேளுங்கள்.
இஸ்ரவேலின் அதிகாரிகளே, கவனியுங்கள்.+
நீங்கள் நீதிநியாயத்தை வெறுக்கிறீர்கள், நேரானதைக் கோணலாக்குகிறீர்கள்.+
10 சீயோனை இரத்தத்தாலும், எருசலேமை அக்கிரமத்தாலும் நிரப்புகிறீர்கள்.+
11 எருசலேமின் தலைவர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு சொல்கிறார்கள்.+
அவளுடைய குருமார்கள் பணத்துக்காகப் போதிக்கிறார்கள்.+
ஆனாலும், யெகோவாமேல் நம்பிக்கை இருப்பதுபோல் காட்டிக்கொள்கிறார்கள்.
“யெகோவா எங்களோடு இருக்கிறார்,+
எங்களுக்கு எந்த ஆபத்தும் வராது”+ என்று சொல்லிக்கொள்கிறார்கள்.