சங்கீதம்
சங்கீதம். ஓய்வுநாளில் பாட வேண்டிய பாடல்.
92 யெகோவாவே, உங்களுக்கு நன்றி சொல்வது நல்லது.+
உன்னதமான கடவுளே, உங்கள் பெயரைப் புகழ்ந்து பாடுவது* நல்லது.
2 காலை நேரங்களில் உங்களுடைய மாறாத அன்பைப் பற்றியும்,+
ராத்திரி நேரங்களில் உங்களுடைய உண்மைத்தன்மையைப் பற்றியும்,
3 பத்து நரம்புகள் கொண்ட இசைக்கருவியோடும் தம்பூராவோடும்
யாழின் இனிமையான ஓசையோடும் புகழ்ந்து பாடுவது நல்லது.+
4 யெகோவாவே, உங்கள் செயல்களால் என்னைப் பூரித்துப்போக வைத்தீர்கள்.
உங்கள் கைகளால் நீங்கள் செய்தவற்றைப் பார்த்து நான் சந்தோஷ ஆரவாரம் செய்கிறேன்.
5 யெகோவாவே, உங்களுடைய செயல்கள் எவ்வளவு அற்புதமானவை!+
உங்களுடைய யோசனைகள் எவ்வளவு ஆழமானவை!+
6 புத்தியில்லாத எந்த மனிதனாலும் அவற்றைத் தெரிந்துகொள்ள முடியாது.
முட்டாள்களால் புரிந்துகொள்ள முடியாத விஷயம் இதுதான்:+
7 பொல்லாதவர்கள் களைகளை* போல முளைக்கும்போதும்,
அக்கிரமக்காரர்கள் எல்லாரும் செழிக்கும்போதும்,
அவர்கள் அடியோடு அழிக்கப்படுவார்கள் என்பதை உறுதியாகத் தெரிந்துகொள்ளலாம்.+
8 யெகோவாவே, நீங்கள்தான் என்றென்றுமே உயர்ந்தவர்.
9 யெகோவாவே, வெற்றிப் பெருமிதத்தோடு உங்கள் எதிரிகளைப் பாருங்கள்!
அவர்கள் கண்டிப்பாக அழிந்துபோவார்கள்!
அக்கிரமக்காரர்கள் எல்லாரும் சிதறடிக்கப்படுவார்கள்.+
11 என்னுடைய எதிரிகளை என் கண்கள் வெற்றிப் பெருமிதத்தோடு பார்க்கும்.+
என்னைத் தாக்குகிற அக்கிரமக்காரர்களுக்கு வரும் வீழ்ச்சியைப் பற்றி என் காதுகள் கேட்கும்.
12 ஆனால், நீதிமான்கள் பேரீச்ச மரம் போலச் செழித்து வளருவார்கள்.
லீபனோனில் இருக்கிற தேவதாரு மரம் போல ஓங்கி வளருவார்கள்.+
13 அவர்கள் யெகோவாவின் வீட்டில் நடப்பட்டிருக்கிறார்கள்.
நம் கடவுளுடைய பிரகாரங்களில் செழித்து வளருகிறார்கள்.+
14 வயதான* காலத்திலும் அவர்கள் திடமாக இருப்பார்கள்.+
துடிப்பாகவும் தெம்பாகவும் இருப்பார்கள்.+
15 யெகோவா நேர்மையானவர் என்று அறிவிப்பார்கள்.
அவரே என் கற்பாறை,+ அவரிடம் அநீதியே கிடையாது.