சங்கீதம்
தாவீதின் சங்கீதம்.
23 யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார்.+
எனக்கு ஒரு குறையும் வராது.+
2 பசுமையான புல்வெளிகளில் அவர் என்னைப் படுத்துக்கொள்ள வைக்கிறார்.
நிறைய தண்ணீர் உள்ள இடங்களுக்குக் கொண்டுபோய் என்னை ஓய்வெடுக்க வைக்கிறார்.*+
3 எனக்குப் புத்துணர்ச்சி தருகிறார்.+
அவருடைய பெயருக்காக என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.+
4 பயங்கர இருட்டான பள்ளத்தாக்கிலே நான் நடந்தாலும்,+
எந்த ஆபத்தையும் நினைத்துப் பயப்பட மாட்டேன்.+
ஏனென்றால், நீங்கள் என்னோடு இருக்கிறீர்கள்.+
உங்களுடைய கோலும் தடியும் எனக்கு நம்பிக்கை* தருகின்றன.
5 என் எதிரிகளுக்கு முன்னால் எனக்கு ஒரு விருந்தை ஏற்பாடு செய்கிறீர்கள்.+