சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; கித்தீத்* இசையில்; கோராகுவின் மகன்களுடைய+ சங்கீதம்.
உயிருள்ள கடவுளுக்குமுன் என் உடலும் உள்ளமும் சந்தோஷ ஆரவாரம் செய்கிறது.
3 பரலோகப் படைகளின் யெகோவாவே, என் ராஜாவே, என் கடவுளே,
உங்களுடைய மகத்தான பலிபீடத்தின் பக்கத்திலே பறவைக்குக்கூட வீடு கிடைக்கிறதே!
தகைவிலான் குருவிக்குக்கூட தன் குஞ்சுகளோடு தங்குவதற்குக் கூடு கிடைக்கிறதே!
4 உங்களுடைய வீட்டில் குடியிருப்பவர்கள் சந்தோஷமானவர்கள்.+
அவர்கள் எப்போதும் உங்களைப் புகழ்கிறார்கள்.+ (சேலா)
5 உங்களையே பலமென்று நம்புகிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+
அவர்களுடைய இதயம் உங்கள் ஆலயத்துக்குப் போகிற நெடுஞ்சாலைகள்மேல் இருக்கிறது.
6 தண்ணீர் இல்லாத பேக்கா பள்ளத்தாக்கு* வழியாக அவர்கள் போகும்போது,
நீரூற்றுகள் நிறைந்த இடமாக அதைப் பார்க்கிறார்கள்.
முதல் பருவ மழை அதை ஆசீர்வாதங்களால் நிரப்புகிறது.*
7 அவர்கள் பலத்துக்குமேல் பலம் அடைந்து நடந்துபோவார்கள்.+
அவர்கள் ஒவ்வொருவரும் சீயோனிலே கடவுளுக்கு முன்னால் வந்து நிற்பார்கள்.
8 பரலோகப் படைகளின் கடவுளான யெகோவாவே, என் ஜெபத்தைக் கேளுங்கள்.
யாக்கோபின் கடவுளே, காதுகொடுத்துக் கேளுங்கள். (சேலா)
10 வேறு எந்தவொரு இடத்திலும் ஆயிரம் நாட்கள் இருப்பதைவிட,
உங்கள் பிரகாரங்களில் ஒரேவொரு நாள் இருப்பது மேல்!+
பொல்லாதவர்களின் கூடாரத்தில் குடியிருப்பதைவிட,
என் கடவுளுடைய ஆலய வாசலில் நிற்பதைத்தான் நான் விரும்புகிறேன்.