பைபிளிலிருந்து முக்கிய குறிப்புகள் சங்கீதம் 73 முதல் 106
“யெகோவாவைத் துதியுங்கள்”—ஏன்?
யெகோவா தேவன் செய்திருக்கும் செய்துகொண்டிருக்கும் மற்றும் செய்யப்போகும் காரியங்களனைத்தையும் யோசித்துப் பார்க்கும்போது நம்மில் யார் நன்றியில்லாதவர்களாக இருக்கக்கூடும்? நமது கடவுளாகிய யெகோவாவை துதிப்பதற்கு நம்முடைய இருதயம் நம்மை அசைவிக்க வேண்டும். யெகோவாவை துதிப்பதற்கு மிகுதியான காரணங்கள் நமக்கு இருக்கின்றதென்பதை சங்கீதங்களின் மூன்றாம் மற்றும் நான்காம் புத்தகங்களில் நன்கு வலியுறுத்திக் காட்டப்பட்டிருக்கிறது. சங்கீதம் 73 முதல் 106 வரை நாம் இப்பொழுது கலந்தாலோசிக்கும்போது உங்களை நீங்களே பின்வருமாறு கேட்டுக் கொள்ளுங்கள். ‘நான் யெகோவாவை துதிப்பதற்கு கொண்டிருக்கும் தனிப்பட்ட காரணங்கள் என்ன?’
துன்மார்க்கர் மீது பொறாமை கொள்ளாதே
தயவுசெய்து சங்கீதம் 73 முதல் 77 வரை வாசிக்கவும். இவைகள் ஆசாப்புக்கும் அவனுடைய குமாரர்களுக்கும் உரியதாக இருக்கிறது. தான் புத்திக்கு வரும் வரையில் துன்மார்க்கர் மேல் பொறாமை கொண்டதாக ஆசாப் ஒப்புக்கொள்கிறான். (சங்கீதம் 73) அதன் பின்பு எருசலேமின் அழிவு குறித்து புலம்பப்படுகிறது. (சங்கீதம் 74) அடுத்தபடியாக “பயப்படத்தக்கவருக்கு” நன்றியுணர்ச்சியின் வெளிக்காட்டுதல்கள் காணப்படுகின்றன. அதனை தொடர்ந்து துன்பமுறும் ஜனத்திற்காக “பெரிய [மகா] தேவனிடம்” செய்யப்படும் ஜெபமாக இருக்கிறது.—சங்கீதம் 75-77.
◆ 73:24—சங்கீதக்காரனை என்ன ‘மகிமையில்’ யெகோவா ஏற்றுக்கொண்டார்?
‘தேவனை அண்டிக் கொண்டிருப்பதே நலமானது என்பதை தான் மதித்துணரும் வரையில்; நீதிமான்களை காட்டிலும் துன்மார்க்கர் மேம்பட்டதோர் நிலையிலிருப்பதாக அந்த சங்கீதக்காரன் உணர்ந்தான். (சங்கீதம் 73:2-12, 28) கடவுளுடைய “ஆலோசனைகள்” தன்னை வழிநடத்தும்படி அனுமதித்தானது அவன் “மகிமையை” அடைவதில், அதாவது யெகோவா தேவனுடைய தயவை அடைவதில், அவருடன் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட உறவை அடைவதில் விளைவடைந்தது.
◆ 76:6—“இரதங்களும் குதிரைகளும் உறங்கிவிழுந்தது” எப்படி?
குதிரைகளையும் இரதங்களையும் நம்பியிருப்பதற்கு மாறாக, யெகோவாவை நம்பியிருக்கும்படி இஸ்ரவேலர் கற்பிக்கப்பட்டார்கள். (சங்கீதம் 20:7; நீதிமொழிகள் 21:31) குதிரைகளுக்கும் மற்றும் சக்கரங்களில் கத்திகளைக் கொண்ட இரதங்களுக்கும் அவர்கள் பயப்படுவதற்கு எவ்வித காரணமும் இருக்கவில்லை. ஏனெனில் அவர்களுடைய சத்துருக்களை யெகோவா சக்தியிழக்கும்படி செய்து அவர்கள் ‘உறங்கி விழும்படி’ செய்வார். இந்த குறிப்பானது என்றென்றைக்கும் விழிக்காத நித்திரையை—மரணத்தை தானே குறிக்கிறது. (எரேமியா 51:39) தங்களுடைய ஆயுதங்களின் பேரில் நம்பிக்கை வைக்கக்கூடிய உலக தலைவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக சேவிக்க வேண்டும்.—சங்கீதம் 76:12.
நமக்கு பாடம்: சங்கீதம் 75 பெருமைக் கெதிரான எச்சரிக்கையை கொண்டிருக்கிறது. அது சொல்வதாவது: “உங்கள் கொம்பை உயரமாய் உயர்த்தாதிருங்கள். (வசனம் 5) அந்த கொம்பு அதிகாரம் அல்லது வல்லமையின் ஒரு அடையாள சின்னமாக இருந்தது. (உபாகமம் 33:17) ஒருவர் தன் கொம்புகளை உயர்த்துவதானது இறுமாப்புடன் நடந்துகொள்வதை குறித்தது. பார்வைக்கு பாதுகாப்பாய் தோன்றும். தங்கள் அதிகார நிலையை குறித்து கர்வமுள்ள நடத்தை பாங்கை மேற்கொள்ள வேண்டாம் என்று சங்கீதக்காரன் இங்கே துன்மார்க்கரை எச்சரிக்கிறான். ஏனெனில் யெகோவா துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவார்.” (சங்கீதம் 75:10) இதை அறிந்திருப்பதானது துன்மார்க்கருடைய மேல் தோற்றமான செழுமையின் மத்தியிலும் கடவுளுடைய ஊழியர்கள் அவருக்கு உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருப்பதற்கு உதவக்கூடும்.—சங்கீதம் 144:11-15.
“மகா உன்னதருக்கு” கீழ்ப்படியுங்கள்
சங்கீதம் 78 முதல் 83 வரை வாசியுங்கள். ஆசாப்பின் சங்கீதம் தொடருகிறது. இஸ்ரவேலருடைய சரித்திர பாடங்கள் எடுத்துரைக்கப்படுகிறது. (சங்கீதம் 78) அதன் பின்பு எருசலேமின் பாழான நிலையின் பேரில் புலம்பப்படுகிறது. இஸ்ரவேலர் திரும்ப பழைய நிலையில் நிலைநிறுத்தப்படுவதற்காக செய்யப்படும் ஜெபம் தொடருகிறது. (சங்கீதம் 79, 80) கடவுள் அளித்த விடுதலையை குறித்து நினைவுகூரும் பாட்டு, மற்றும் அவருடைய ஜனங்கள் அவருக்கு கீழ்ப்படிய வேண்டிய உற்சாகமூட்டுதலும் கொடுக்கப்பட்ட பின்பு அநீதியான நீதிபதிகள் பேரிலும் இஸ்ரவேலின் சத்துருக்கள் பேரிலும் தம்முடைய தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றும்படி அவர்கள் செய்யும் வேண்டுதல்கள் அடங்கியிருக்கின்றன.—சங்கீதம் 81-83.
◆ 82:1—தேவன் எவ்வாறு “தேவர்களின் நடுவிலே” நியாயம் விசாரிக்கிறார்?
தெளிவாகவே, “தேவர்கள்” இஸ்ரவேலின் நியாயாதிபதிகளாயிருந்தனர். நியாய விசாரனைக்குரிய அதிகாரத்திலே அவர்கள் பலவான்களாக இருந்ததன் காரணமாக அவர்கள் தேவர்கள் என்றழைக்கப்பட்டனர். யெகோவா மகா உன்னத நீதிபதியாக, இப்படிப்பட்ட நியாயாதிபதிகள் தம்முடைய சட்டத்திற்கேற்ப நியாயந்தீர்க்க தவறினதன் காரணமாக, அவர்களை கண்டிப்பதற்காக அவர்கள் நடுவே பிரவேசிப்பதற்கு தெய்வீக உரிமையுடையவராக இருக்கிறார்.—ஏசாயா 33:22; சங்கீதம் 82:2-4.
◆ 83:9-15—பழிவாங்குதலே சங்கீதக்காரனின் உள்நோக்கமா?
இல்லவே இல்லை. யெகோவா தம்முடைய தீவிரமான பகைஞர் மீது நியாயத்தீர்ப்பு நடவடிக்கை எடுக்கும்படி அவன் ஜெபித்துக் கொண்டிருந்தான். (வசனம் 2) அப்பொழுது யெகோவா என்னும் பெயருடைய அந்த கடவுள் மெய்யாகவே “பூமி முழுவதின்மீதும் மகா உன்னதமானவர்” என்பதை மற்ற தேசங்கள் அறிந்து கொள்வார்கள் (வசனம் 17) இந்த வல்லமையின் வெளிக்காட்டு யெகோவா என்ற கடவுளுடைய பெயரை பூமி முழுவதிலும் மகிமைப்படுத்துவதில் விளைவடையும்.
நமக்கு பாடம்: தமக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு யெகோவா தேவன் அதிக நிறைவாக பலனளிக்கிறார் என்பது “உச்சிதமான கோதுமை” [கொழுமையான கோதுமை, NW] என்ற வார்த்தையினால் சுட்டிக்காட்டப்படுகிறது. (சங்கீதம் 81:16) இங்கே “கொழுப்பு” அல்லது “கொழுமை” என்ற வார்த்தையானது மிகச் சிறந்தவற்றை சுட்டிக்காட்டுவதற்கு அடையாள அர்த்தமாய் பயன்படுத்தப்படுகிறது. (சங்கீதம் 63:5-ஐ ஒப்பிட்டு பாருங்கள்) இஸ்ரவேலர்கள் ‘யெகோவாவின் சத்தத்துக்கு செவி கொடுப்பார்களேயாகில் அவர்களை ‘கோதுமையின் கொழுமை’யினால்—மிகச்சிறந்த உயர்தரமான காரியங்களால் அவர் ஆசீர்வதித்திருப்பார். (சங்கீதம் 81:11; உபாகமம் 32:13, 14) அதே விதமாகவே, நாமும் “யெகோவாவின் சத்தத்துக்கு செவி கொடுப்போமானால் “அவர் நம்மை நிறைவாய் ஆசீர்வதிப்பார்.—நீதிமொழிகள் 10:22.
கடவுளை அணுகுதல்
சங்கீதம் 84 முதல் 89 வரை வாசியுங்கள். சங்கீதக்காரன் கடவுளுடைய வீட்டிற்கான வாஞ்சையை வெளிப்படுத்துகிறான். (சங்கீதம் 84) அடுத்தபடியாக கடவுள் தம்முடைய கோபத்தை தங்களை விட்டு திரும்பும்படி சிறையிருப்பிலிருந்து திரும்பிய இஸ்ரவேலர் கடவுளிடம் கேட்கின்றனர். (சங்கீதம் 85) தாவீது வழிநடத்துதலுக்காகவும் பாதுகாப்புக்காகவும் ஜெபிக்கிறான். யெகோவா தனக்கு செவி கொடுப்பார் என்ற நம்பிக்கையோடிருக்கிறான். (சங்கீதம் 86) ‘சீயோனில் பிறந்தவர்கள் பற்றிய ஒரு இன்னிசை இசைக்கப்படுகிறது. இக்கட்டிலிருப்பவனின் விண்ணப்பம் தொடருகிறது. (சங்கீதம் 87, 88) தாவீதிய உடன்படிக்கையில் காட்டப்பட்டிருக்கிறபடியான யெகோவாவின் கிருபைகளை மேன்மைப்படுத்தி காட்டக்கூடிய ஒரு சங்கீதம் வருகிறது.—சங்கீதம் 89.
◆ 84:3—பறவைகளை ஏன் குறிப்பிட வேண்டும்?
இந்த சங்கீதக்காரன், கோராகின் வம்சத்து லேவியன், யெகோவாவின் மகத்துவமுள்ள “ஆலய வாசஸ்தலத்தில்” தங்கியிருக்க வாஞ்சையாயிருந்தான். (வசனங்கள் 1, 2) ஆனால் லேவியர்களோ பல்லாயிரக்கணக்கானவர்களாக இருந்தனர். ஒவ்வொரு ஆண்டின் பாதி காலப்பகுதிக்கு ஒரே ஒரு தடவை மட்டுமே ஒரு வார காலத்திற்கு ஆலய வாசஸ்தலத்தில் சேவிக்கும்படி ஒரு லேவியர் வகுப்பு நியமிக்கப்பட்டனர். அதற்கு மாறாக சிறு பறவைகளும்கூட அங்கே அந்த ஆலயப் பிரகாரத்தில் தங்களுக்கு கூட்டை கட்டுவதன் மூலம் அதிக நிரந்தரமான ஓரிடத்தை கொண்டிருக்கும். அதே போன்று யெகோவாவின் வீட்டில் நிரந்தரமாக இருப்பதன் மூலம் யெகோவாவை துதிப்பதற்கு சங்கீதக்காரன் என்னே மகிழ்ச்சியுள்ளவனாக இருப்பான்!
◆ 89:49—அந்த “கிருபையின் செயல்கள்” என்னவாக இருந்தன?
“கிருபைகள்” அல்லது “கிருபையின் செயல்கள்” என்ற அந்த கூற்றானது அதன் எல்லா அம்சங்களுடன்கூடிய அந்த ராஜ்ய உடன்படிக்கையை குறிப்பிடுகிறது. இக்கட்டான காலங்களில் யெகோவாவின் கவனத்திற்கு இந்த வாக்குறுதிகளை கொண்டுவருவது பொருத்தமானதாக இருந்தது. அந்த உடன்படிக்கையை அவர்கள் சந்தேகித்ததன் காரணமாக அல்ல, ஆனால் அதன் அடிப்படையிலே கடவுளிடம் முறையிட்டதன் மூலம் அப்படி செய்தார்கள்.
நமக்கு பாடம்: கடவுளுடைய புதிய ஒழுங்குமுறைக்காக எது நம்மை ஏக்கங்கொள்ளும்படி செய்ய வேண்டும் என்பதை சங்கீதம் 85 வலியுறுத்துகிறது. சரீர சம்பந்தமான ஆசீர்வாதங்களைப் பற்றி சுருக்கமான குறிப்பு மட்டுமே காணப்படுகிறது. (வசனம் 12) முக்கியமான வலியுறுத்தும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் பேரில் வைக்கப்படுகிறது. (வசனங்கள் 10-13) யெகோவா தேவன் பொருட் சம்பந்தமான ஏக்கங்களுக்கு கவனத்தை ஈர்ப்பதில்லை. ஆனால் புதிய ஒழுங்கு முறையிலிருக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களே நம்மை பலமாக உந்துவிக்கும் சக்தியாக இருக்க வேண்டுமென்று காண்பிக்கிறார்.
‘யெகோவா ராஜாவாகிவிட்டார்!’
சங்கீதம் 90 முதல் 100 வரை வாசியுங்கள். கடவுளின் நித்தியத்துவத்துக்கும் மனிதனின் குறுகிய வாழ்நாட் காலத்திற்குமுள்ள வேறுபாட்டை மோசே எடுத்துக் காட்டுகிறான். அதன் பின்பு யெகோவா தேவனை பாதுகாப்பின் ஊற்று மூலமாக உயர்த்திக் காட்டுகிறான். (சங்கீதம் 90, 91) யெகோவா தேவனின் மிக மேன்மையான பண்புகள் புகழ்ந்து பேசப்படுகிறது. மேலும் அதனை தொடர்ந்து வரும் சங்கீதங்கள் கடவுளுடைய வல்லமையையும் கிருபையையும் நீதியையும் அதோடுகூட ராஜ்ய பொருளையும் உயர்த்திக் காட்டுகின்றன.—சங்கீதம் 92-100.
◆ 90:10—மோசே 80 ஆண்டுகளை காட்டிலும் மிக அதிகமாக உயிர்வாழவில்லையா?
120 ஆண்டுகள் வாழ்ந்த மோசே பொதுவான மக்களுக்கு ஒரு மாதிரியாக இருக்கவில்லை. எகிப்திலிருந்து வந்த விசுவாசமற்ற சந்ததியினரை பற்றி தொகைக்கு உட்பட்டவர்கள் “இருபது வயது முதல் அதற்கு மேற்பட்டவர்கள்” நாற்பது வயதுக்குள்ளாக மரிக்க வேண்டியவர்களாக இருந்தனர், இது மோசேயினால் குறிக்கப்பட்டதற்கு வெகு குறைந்ததாக இருந்தது. (எண்ணாகமம் 14:29-34) மோசேயின் மரணத்தின்போது அவனுடைய கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை” என்று குறிப்பு சொல்லுகிறது. அவன் கடவுளுடைய காக்கும் தன்மையை கொண்டிருந்தான் என்று இது காட்டுகிறது.—உபாகமம் 34:7.
◆ 95:3—யெகோவா எவ்வாறு “எல்லா தேவர்களுக்கும் மகா ராஜனாயிருக்கிறார்”?
சர்வலோக பேரரசராக, யெகோவா மகா உன்னதரும் மற்றும் எல்லா பொய் தெய்வங்களுக்கும் மேலாக ராஜாவாக இருக்கிறார். அவர்களுக்கு அவர் வெகுவாய் உயர்ந்திருக்கிறார். யெகோவா தேவனை மற்றவர்கள் வணங்கக்கூடிய தேவ தூதர்களுக்கும் அல்லது உயிரற்ற கடவுட்கள் உட்பட எந்த ஒரு காரியத்துக்கும் எவ்வித ஒப்பீடும் செய்ய முடியாது.
நமக்கு பாடம்: யெகோவாவை துதிப்பதற்கு நாம் கொண்டிருக்கக்கூடிய மற்றொரு காரணத்தை சங்கீதம் 91 உயர்த்திக் காட்டுகிறது—“உன்னதமானவரின் மறைவிடம்.” (வசனம் 1) அது ஆவிக்குரிய பாதுகாப்பிற்குரிய ஓர் இடம். இந்த சங்கீதத்தில் குறித்துவைக்கப்பட்டிருக்கும் அந்த தேவைகளை பூர்த்தி செய்யகூடிய அனைவருக்கும் ஆவிக்குரிய தீங்குகளிலிருந்து பாதுகாப்பு. ஆவிக்குரிய பார்வையில்லாதவர்களுக்கு இந்த உலகத்து மக்களுக்கு அறியப்படாமலிருக்கிறது என்ற கருத்தில் அது ‘மறைவிடம்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ‘உன்னதமானவரின்’ மறைவிடம் என்று சொல்லப்பட்டிருக்கும் அந்த உண்மையானது சர்வலோக அரசுரிமை சார்ந்த அந்த பிரச்னையில் கடவுளுடைய பக்கத்தை நாம் தாங்கி பற்றிக் கொண்டால் மாத்திரமே அங்கே நாம் பாதுகாப்பை கண்டடைய முடியும்.
“ஜனங்களே யெகோவாவை துதியுங்கள்!”
சங்கீதம் 101 முதல் 106 வரை வாசியுங்கள். இங்கே தாவீது தனது நாட்டு விவகாரங்களை நிர்வகிக்கும் முறையை விளக்குகிறான். (சங்கீதம் 101) துயரப்படுகிறவன், யெகோவா ‘சியோனை கட்டுவதற்கு’ ஜெபிக்கிறான். (சங்கீதம் 102) கடவுளுடைய இரக்கம் பேராற்றல், மற்றும் சிருஷ்டிப்பு வேலைப்பாடுகள் ஆகியவற்றிற்கு கவனத்தை திருப்பி யெகோவாவை துதிக்கும்படியான அழைப்பு சங்கீதங்களில் தொடருகிறது. இங்கேயும்கூட “ஜனங்களே யெகோவாவை துதியுங்கள்” என்ற கூற்று சங்கீதங்களில் தோன்றும் 20-க்கு மேலான தடவைகளில் இது முதல் தடவை. (சங்கீதம் 103, 104) இறுதியாக, இரண்டு சரித்திரப்பூர்வமான சங்கீதங்கள் அவருடைய ஜனங்களின் சார்பாக அவருடைய செய்கைகளுக்காக யெகோவாவை துதிக்கின்றன.—சங்கீதம் 105, 106.
102:25—பூமியை அஸ்திபாரப்படுத்தினது யார்?
சங்கீதக்காரன் கடவுளைக்குறித்து பேசிக்கொண்டிருந்தான். ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் அந்த வார்த்தைகளை இயேசு கிறிஸ்துவுக்கு பொருத்திக் காண்பித்தான். (எபிரெயர் 1:10, 11) உள்ளபடியே அந்த வார்த்கைள் இயேசுவுக்கும்கூட பொருந்துகின்றன. ஏனெனில் பிரபஞ்சத்தை சிருஷ்டிப்பதில் அவர் யெகோவா தேவனுடைய பிரதான துணை முதல்வராக சேவித்தார். (கொலோசெயர் 1:15, 16) எனவே இயேசுவும்கூட “பூமியை அஸ்திபாரப்படுத்தினதாக” சொல்லப்படலாம்.
103:14—“உருவம்” என்பது எதை குறிக்கிறது?
“உருவம்” என்று குறிக்கப்பட்டிருக்கும் இந்த வார்த்தையானது ஆதியாகமம் 2:7-ல் பயன்படுத்தப்பட்டிருக்கும் “உருவாக்க” என்ற வினைச் சொல்லுடனும் மேலும் களிமண்ணை வளைந்து உருவாக்குபவனின் சம்பந்தமாக பயன்படுத்தப்பட்டிருக்கும் “குயவன்” பெயர் சொல்லுடனும் தொடர்புடையதாக இருக்கிறது. (ஏசாயா 29:16; எரேமியா 18:2-6) எனவே எளிதில் உடைந்துபோகும் தன்மையுள்ள மண்பாண்டம் போன்று நாம் இருக்கிறோம் என்பதை அறிந்தவராக பெரிய குயவனான யெகோவா நம்மை பரிவுடன் கையாளுகிறார் என்பதை சங்கீதக்காரன் நமக்கு நினைப்பூட்டுகிறான்.—2 கொரிந்தியர் 4:7-ஐ ஒப்பிட்டு பார்க்கவும்.
104:4 யெகோவா எப்படி “தம்முடைய தூதர்களை காற்றுகளாக [ஆவிகளாக, NW] செய்கிறார்?
தேவ தூதர்கள் ஏற்கனவே ஆவி சிருஷ்டிகளாக இருப்பதன் காரணமாக அவர்களுடைய ஆவி உடலை குறிக்ககாது. ஆங்கில பைபிளில் காணப்படும் “ஆவி” என்ற வார்த்தை [தமிழ் யூனியன் மொழி பெயர்ப்பில் காணப்படுவதை போன்று] “காற்றை” அல்லது “கிரியை நடப்பிக்கும் சக்தியை”யும்கூட குறிக்கக்கூடும். தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு கடவுள் இவ்வாறாக தமது தூதர்களை வலிமை வாய்ந்த சக்திகளை போன்று பயன்படுத்தக்கூடும். அவர்கள் தண்டனை தீர்ப்பை வழங்கிடும் செயலாட்களாகவும்—அதாவது பட்சிக்கும் அக்கினியாகவும் [அக்கினி ஜுலாலைகளாகவும்] பயன்படுத்தப்படக்கூடும். மேலும் இந்த வல்லமை வாய்ந்த தேவதூத சிருஷ்டிப்புகள் மூலமாய் தங்கள் பிரசங்க வேலை ஆதரிக்கப்படுகிறது என்பதை அறிவது கிறிஸ்தவர்களுக்கு ஊக்கமளிக்கிறது.—வெளிப்படுத்துதல் 14:6, 7-ஐ ஒப்பிட்டுப் பார்க்கவும்
நமக்கு பாடம்: கலகத்தனமான கோராகு, தாத்தான் அபிராம் ஆகியோர் கடவுளுடைய தேசத்தினரின் நிர்வாகியாக இருந்த மோசேயின் ஸ்தானத்தின் பேரில் பொறாமை கொண்டார்கள் என்பதை மதித்துணருவதற்கு சங்கீதம் 106 உதவுகிறது. (சங்கீதம் 106:16; எண்ணாகமம் 16:2-11) முடிவிலே, கலகக்காரர் மத்தியிலே “அக்கினி பற்றியெறிந்தது.” அப்பொழுது அந்த கலகம் தகர்த்தெறியப்பட்டது. (சங்கீதம் 106:18) நிச்சயமாகவே பெருமை மற்றும் பொறாமையின் அபாயங்கள் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டப்படுகின்றனர். இன்றும் யெகோவாவினால் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு எதிராக பேசுவது அதைப்போன்றே யெகோவாவின் வெறுப்பை கொண்டுவரும்.—எபிரெயர் 13:17; யூதா 4, 8, 11.
மெய்யாகவே, நாம் நன்றியுள்ளவர்களாக இருப்பதற்கு யெகோவா நமக்கு அதிகமானவற்றை கொடுத்திருக்கிறார். நம்மீது அவர் பொழிந்திருக்கும் எல்லா ஆசீர்வாதங்களையும் நாம் சிந்தித்துப் பார்க்கையில் சங்கீதக்காரன் நம்மை தூண்டியதை போன்று “என் ஆத்துமாவே யெகோவாவை ஸ்தோத்தரி” என்று துதிக்க வேண்டாமா?—சங்கீதம் 103:1. (w86 12/15)