ஆமோஸ்
4 “சமாரியா மலையில் குடியிருக்கும் பெண்களே,+ கேளுங்கள்.
பாசான் பிரதேசத்தின் மாடுகள்போல் நீங்கள் இருக்கிறீர்கள்.
ஏழைகளை ஏமாற்றுகிறீர்கள், எளியவர்களைக் கொடுமைப்படுத்துகிறீர்கள்.+
‘குடிக்க மது கொண்டுவா’ என்று உங்கள் கணவரிடம்* சொல்கிறீர்கள்.
2 உன்னதப் பேரரசராகிய யெகோவா தன்னுடைய பரிசுத்தத்தின் மேல் சத்தியம் செய்து இப்படிச் சொல்லியிருக்கிறார்:
‘“ஒரு காலம் வரப்போகிறது. அப்போது, கறிக்கடைக் கொக்கிகளால் நீங்கள் இழுத்துச் செல்லப்படுவீர்கள்.
உங்களில் மீதியாக இருப்பவர்கள் தூண்டில் கொக்கிகளால் பிடித்துச் செல்லப்படுவீர்கள்.
3 மதிலில் உள்ள பிளவுகள் வழியாய் நேராக வெளியே போவீர்கள்.
ஹார்மனுக்கு* துரத்தப்படுவீர்கள்” என்று யெகோவா சொல்கிறார்.’
4 ‘பெத்தேலுக்கு வாருங்கள், அக்கிரமம் செய்யுங்கள்!+
கில்காலுக்கு வாருங்கள், அக்கிரமத்துக்குமேல் அக்கிரமம் செய்யுங்கள்!+
5 உங்கள் நன்றியைக் காட்ட புளித்த ரொட்டியைத் தகன பலியாகச் செலுத்துங்கள்!+
நீங்களாகவே விருப்பப்பட்டுக் கொடுக்கும் காணிக்கைகளை ஊருக்கே விளம்பரம் பண்ணுங்கள்!
இஸ்ரவேல் ஜனங்களே, இதைச் செய்யத்தானே விரும்புகிறீர்கள்?’ என்கிறார் உன்னதப் பேரரசராகிய யெகோவா.
6 எல்லா ஊர்களிலும் உங்களைப் பட்டினி போட்டேன்.
எல்லா வீடுகளிலும் பஞ்சத்தைக் கொண்டுவந்தேன்.+
ஆனாலும், நீங்கள் திருந்தி என்னிடம் வரவில்லை’+ என்கிறார் யெகோவா.
7 ‘அறுவடைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே மழையை நிறுத்தினேன்.+
ஒரு ஊரில் மழை பெய்ய வைத்தேன், இன்னொரு ஊரில் மழை பெய்யாதபடி செய்தேன்.
ஒரு வயல் மழையில் நனைந்தது.
இன்னொரு வயல் மழையில்லாமல் காய்ந்துபோனது.
8 நீங்கள் தண்ணீரைத் தேடி+ இரண்டு, மூன்று ஊர்களிலிருந்து இன்னொரு ஊருக்குத் தள்ளாடிக்கொண்டே போனீர்கள்.
ஆனாலும், உங்கள் தாகம் தீரவில்லை.
அந்த நிலையிலும் நீங்கள் திருந்தி என்னிடம் வரவில்லை’+ என்கிறார் யெகோவா.
9 ‘அனல் காற்றாலும் நோயாலும் உங்கள் பயிர்களை நாசமாக்கினேன்.+
நீங்களோ தோப்புகளையும் திராட்சைத் தோட்டங்களையும் அதிகரித்தீர்கள்.
ஆனால், உங்கள் அத்தி மரங்களையும் ஒலிவ மரங்களையும் வெட்டுக்கிளிகள் மொட்டையாக்கின.+
அந்த நிலையிலும் நீங்கள் திருந்தி என்னிடம் வரவில்லை’+ என்கிறார் யெகோவா.
10 ‘எகிப்தில் வர வைத்தது போன்ற கொள்ளைநோயை உங்களுக்கு வர வைத்தேன்.+
உங்கள் வாலிபர்களை வாளால் கொன்றேன்,+ உங்கள் குதிரைகளை ஒழித்தேன்.+
உங்கள் கூடாரங்களில் பிண நாற்றம் வீசும்படி செய்தேன்.+
ஆனாலும், நீங்கள் திருந்தி என்னிடம் வரவில்லை’ என்கிறார் யெகோவா.
நீங்கள் நெருப்பிலிருந்து எடுக்கப்படும் கொள்ளிக்கட்டை போல இருந்தீர்கள்.
ஆனாலும், நீங்கள் திருந்தி என்னிடம் வரவில்லை’+ என்கிறார் யெகோவா.
12 இஸ்ரவேலர்களே, உங்களை மறுபடியும் தண்டிக்கப்போகிறேன்.
இதை நான் கண்டிப்பாகச் செய்யப்போகிறேன்.
அதனால், உங்கள் கடவுளைச் சந்திக்கத் தயாராகுங்கள்!