ஓசியா
ஆனால், பாகாலை வணங்கியதால் இறந்துபோனான்.+
2 எப்பிராயீமின் குடிமக்கள் பாவத்துக்குமேல் பாவம் செய்கிறார்கள்.
வெள்ளிச் சிலைகளை உண்டாக்குகிறார்கள்;+ பார்த்துப் பார்த்து அவற்றைச் செதுக்குகிறார்கள்.
அவை வெறும் கைத்தொழிலாளிகளின் வேலைப்பாடுகள்.
‘பலி கொடுக்கிறவர்களே, கன்றுக்குட்டிகளை முத்தமிடுங்கள்’+ என்று சொல்கிறார்கள்.
3 அதனால், அவர்கள் காலைநேர மேகங்களைப் போலவும்,
சீக்கிரத்தில் மறைந்துபோகிற பனித்துளிகளைப் போலவும்,
களத்துமேட்டிலிருந்து சுழல்காற்றில் அடித்துச் செல்லப்படும் பதரைப் போலவும்,
புகைக்கூண்டிலிருந்து வெளியேறும் புகையைப் போலவும் ஆகிவிடுவார்கள்.
4 நீங்கள் எகிப்தில் இருந்த காலத்திலிருந்து யெகோவாவாகிய நான்தான் உங்கள் கடவுள்.+
என்னைத் தவிர வேறு கடவுளை உங்களுக்குத் தெரியாது.
என்னைத் தவிர வேறு மீட்பர் இல்லை.+
5 வறண்ட வனாந்தரத்திலே உங்களைப் பராமரித்தேன்.+
6 நீங்கள் மேய்ச்சல் நிலங்களில் மேய்ந்து திருப்தியானீர்கள்.+
திருப்தியானதும் உங்கள் இதயத்தில் கர்வம் வந்துவிட்டது.
அதனால் என்னை மறந்துபோனீர்கள்.+
8 குட்டிகளைப் பறிகொடுத்த கரடிபோல் பாய்ந்து வந்து,
உங்கள் நெஞ்சைக் கிழிப்பேன்.
சிங்கத்தைப் போல உங்களை விழுங்குவேன்.
ஒரு காட்டு மிருகம் உங்களைக் கடித்துக் குதறும்.
9 இஸ்ரவேலே, அது உன்னை அழிக்கும்.
ஏனென்றால், உனக்குத் துணையாய் இருந்தவரைவிட்டு விலகினாய்.
10 உன்னுடைய எல்லா நகரங்களையும் காப்பாற்றுகிற ராஜா எங்கே?+
உன் தலைவர்கள்* எங்கே?
‘எனக்கு ராஜா வேண்டும், தலைவர்கள் வேண்டும்’ என்று கேட்டாயே.+
12 எப்பிராயீமின் குற்றம் சுருட்டி* வைக்கப்பட்டிருக்கிறது.
அவனுடைய பாவம் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது.
13 அவன் பிரசவ வேதனைப்படுவான்.
அவன் அறிவில்லாத பிள்ளை.
பிறக்க வேண்டிய நேரம் வந்தும், அவன் வெளியே வர விரும்புவதில்லை.
மரணமே, உன் கொடுக்குகள் எங்கே?+
கல்லறையே, உன் நாச வேலைகள் எங்கே?+
ஆனாலும், நான் கரிசனை காட்ட மாட்டேன்.
15 நாணலின் நடுவில் அவன் செழித்து வளருவான்.
ஆனாலும், கிழக்கிலிருந்து யெகோவா காற்றை அனுப்புவார்.
அது வனாந்தரத்திலிருந்து வரும், அவனுடைய கிணறுகளையும் நீரூற்றுகளையும் வற்றிப்போகச் செய்யும்.
அவன் சேர்த்து வைத்திருக்கிற சொத்துகளெல்லாம் சூறையாடப்படும்.+
16 கடவுளுக்கு அடங்கி நடக்காததால்+ சமாரியாமேல் குற்றம் சுமத்தப்படும்.+
ஜனங்கள் பட்டயத்தால் சாவார்கள்.+
பிள்ளைகள் கொடூரமாக அடித்துக் கொல்லப்படுவார்கள்.
கர்ப்பிணிகளின் வயிறு கிழிக்கப்படும்.”