சங்கீதம்
மஸ்கீல்.* எஸ்ராகியனான ஏத்தானின்+ பாடல்.
89 யெகோவா மாறாத அன்பைக் காட்டிய விதங்களைப் பற்றி என்றென்றும் பாடுவேன்.
உங்களுடைய உண்மைத்தன்மையைப் பற்றித் தலைமுறை தலைமுறைக்கும் சொல்வேன்.
2 ஏனென்றால், “மாறாத அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்.+
உங்களுடைய உண்மைத்தன்மையைப் பரலோகத்திலே
உறுதியாக நிலைநாட்டியிருக்கிறீர்கள்” என்று சொன்னேன்.
3 “நான் தேர்ந்தெடுத்த ஒருவனோடு ஒப்பந்தம் செய்திருக்கிறேன்.+
என் ஊழியன் தாவீதுக்கு இப்படி ஆணையிட்டுக் கொடுத்திருக்கிறேன்:+
4 ‘உன் சந்ததியை என்றென்றும் நிலைத்திருக்கச் செய்வேன்.+
உன் சிம்மாசனத்தைத் தலைமுறை தலைமுறைக்கும் நிலைநிறுத்துவேன்.’”+ (சேலா)
5 யெகோவாவே, பரலோகம் உங்களுடைய அற்புதமான செயல்களைப் புகழ்கிறது.
பரிசுத்தமானவர்களின் சபை உங்களுடைய உண்மைத்தன்மையைப் போற்றுகிறது.
6 பரலோகத்தில் யெகோவாவுக்கு நிகராக இருப்பவர் யார்?+
யெகோவாவுடைய மகன்களில்*+ அவருக்குச் சமமாக இருப்பவர் யார்?
7 பரிசுத்தமானவர்களின் கூட்டம் கடவுளுக்குப் பயபக்தி காட்டுகிறது.+
அவரைச் சூழ்ந்திருக்கிற எல்லாருக்கும் அவர் மகத்தானவர், பயபக்திக்குரியவர்.+
நீங்கள் எப்போதுமே நம்பகமானவராக* நடந்துகொள்கிறீர்கள்.+
10 நீங்கள் ராகாபை*+ வென்றீர்கள், கொன்றீர்கள்.+
உங்களுடைய கைபலத்தால் எதிரிகளைச் சிதறிப்போக வைத்தீர்கள்.+
11 வானம் உங்களுடையது, பூமியும் உங்களுடையது.+
பூமியையும் அதிலிருக்கிற எல்லாவற்றையும்+ நீங்கள்தான் உண்டாக்கினீர்கள்.
12 வடக்கையும் தெற்கையும் நீங்கள்தான் படைத்தீர்கள்.
தாபோரும்+ எர்மோனும்+ உங்கள் பெயரைச் சந்தோஷமாகப் புகழ்கின்றன.
14 நீதியும் நியாயமும் உங்களுடைய சிம்மாசனத்தின் அடித்தளமாக இருக்கின்றன.+
மாறாத அன்பும் உண்மைத்தன்மையும் உங்கள் முன்னால் நிற்கின்றன.+
15 உங்களை ஆனந்தமாகப் புகழ்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+
யெகோவாவே, உங்களுடைய முகத்தின் ஒளியில் அவர்கள் நடக்கிறார்கள்.
16 அவர்கள் உங்களுடைய பெயரை நினைத்து நாளெல்லாம் சந்தோஷப்படுகிறார்கள்.
உங்களுடைய நீதியால் உயர்வு அடைந்திருக்கிறார்கள்.
17 ஏனென்றால், நீங்கள்தான் அவர்களுடைய மகிமை, அவர்களுடைய பலம்.+
உங்களுடைய தயவால் எங்களுடைய பலம் கூடுகிறது.+
18 யெகோவா எங்களுக்குக் கேடயத்தைத் தந்தார்.
இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுள் எங்களுக்கு ராஜாவைக் கொடுத்தார்.+
19 அந்தச் சமயத்திலே, உங்களிடம் உண்மையாக* இருந்தவர்களிடம்
ஒரு தரிசனத்தில் இப்படிச் சொன்னீர்கள்:
“மாவீரன் ஒருவனுக்குப் பலம் கொடுத்தேன்.+
மக்கள் நடுவிலிருந்து ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனை உயர்த்தினேன்.+
24 அவனிடம் உண்மையோடு நடந்துகொள்வேன், அவனுக்கு மாறாத அன்பைக் காட்டுவேன்.+
என் பெயரால் அவனுடைய பலம் கூடும்.
29 அவனுடைய சந்ததியை என்றென்றும் நிலைத்திருக்கச் செய்வேன்.
அவனுடைய சிம்மாசனத்தை வானம்போல் என்றுமே நிலைநிற்க வைப்பேன்.+
30 அவனுடைய வாரிசுகள் என் சட்டத்தைக் கடைப்பிடிக்காமல் போனால்,
என் உத்தரவுகளின்படி* நடக்காமல் போனால்,
31 என் சட்டதிட்டங்களை மீறினால்,
என் கட்டளைகளின்படி செய்யாமல் போனால்,
32 எனக்குக் கீழ்ப்படியாததற்காக அவர்களைத் தடியால் அடிப்பேன்.+
குற்றம் செய்ததற்காக அவர்களைச் சாட்டையால் விளாசுவேன்.
33 ஆனாலும், நான் அவனுக்கு மாறாத அன்பைக் காட்டாமல் இருக்க மாட்டேன்.+
கொடுத்த வாக்கை நிறைவேற்றாமலும் போக மாட்டேன்.
36 அவனுடைய சந்ததி என்றென்றும் நிலைத்திருக்கும்.+
அவனுடைய சிம்மாசனம் சூரியனைப் போல எப்போதும் என்முன் நிலைத்திருக்கும்.+
37 வானத்தில் உண்மையுள்ள சாட்சியாக இருக்கிற சந்திரனைப் போல,
அது என்றென்றும் உறுதியாக நிலைநிறுத்தப்படும்.” (சேலா)
38 ஆனால், நீங்கள் அபிஷேகம் செய்தவரை நீங்களே வெறுத்து ஒதுக்கினீர்கள்.+
அவன்மேல் பயங்கர கோபம் கொண்டீர்கள்.
39 உங்களுடைய ஊழியனோடு செய்த ஒப்பந்தத்தைப் புறக்கணித்தீர்கள்.
அவனுடைய கிரீடத்தைத் தரையில் எறிந்து அதைக் கேவலப்படுத்தினீர்கள்.
40 அவனுடைய கற்சுவர்கள் எல்லாவற்றையும் இடித்துப்போட்டீர்கள்.
அவனுடைய மதில்களைத் தரைமட்டமாக்கினீர்கள்.
41 வருவோர் போவோர் எல்லாரும் அவனைச் சூறையாடினார்கள்.
சுற்றுவட்டார ஜனங்கள் அவனைப் பழித்துப் பேசினார்கள்.+
42 அவனுடைய எதிரிகளை நீங்கள் ஜெயிக்க வைத்தீர்கள்.+
அவனுடைய விரோதிகள் எல்லாரையும் கைகொட்டிச் சிரிக்க வைத்தீர்கள்.
43 அவனுடைய வாளை உதவாமல் போகும்படி செய்துவிட்டீர்கள்.
போர்க்களத்தில் அவனைத் தோற்றுப்போக வைத்தீர்கள்.
44 அவனுடைய மேன்மைக்கு முடிவுகட்டினீர்கள்.
அவனுடைய சிம்மாசனத்தைக் கவிழ்த்துப்போட்டீர்கள்.
45 அவனுடைய இளமைக் காலத்தைக் குறைத்தீர்கள்.
அவமானத்தால் அவனை மூடினீர்கள். (சேலா)
46 யெகோவாவே, இன்னும் எவ்வளவு காலம் மறைந்திருப்பீர்கள்? என்றென்றைக்குமா?+
உங்களுடைய ஆக்ரோஷம் நெருப்புபோல் எரிந்துகொண்டே இருக்குமா?
47 என் வாழ்நாள் எவ்வளவு குறுகியது என்பதை நினைத்துப் பாருங்கள்.+
மனிதர்கள் எல்லாரையும் வீணாகவா நீங்கள் படைத்தீர்கள்?
48 எந்த மனிதனாவது சாகாமலேயே உயிரோடு இருக்க முடியுமா?+
கல்லறையின் பிடியிலிருந்து தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள முடியுமா? (சேலா)
49 யெகோவாவே, மாறாத அன்பினால் நீங்கள் முன்பு செய்த செயல்களெல்லாம் எங்கே?
அவற்றைப் பற்றி தாவீதுக்கு உண்மையோடு ஆணையிட்டுக் கொடுத்ததெல்லாம் எங்கே?+
50 யெகோவாவே, உங்களுடைய ஊழியர்கள் எப்படியெல்லாம் பழித்துப் பேசப்பட்டார்கள்!
எல்லாருடைய பழிப்பேச்சையும் நான் எப்படித் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது!
51 யெகோவாவே, உங்களுடைய எதிரிகள் எப்படியெல்லாம் கேவலமாகப் பேசினார்கள்!
நீங்கள் அபிஷேகம் செய்தவரின் ஒவ்வொரு செயலையும் எப்படிக் கேவலமாகப் பேசினார்கள்!
அதையெல்லாம் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
52 யெகோவாவுக்கு என்றென்றும் புகழ் சேரட்டும்!