நீதிமொழிகள்
8 ஞானம் சத்தமாக அழைக்கிறது, அல்லவா?
பகுத்தறிவு உரத்த குரலில் கூப்பிடுகிறது, அல்லவா?+
3 நகரவாசல்களின் பக்கத்திலும் நுழைவாசல்களிலும் நின்று,
சத்தமாக இப்படிக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறது:+
4 “ஜனங்களே, உங்களைத்தான் சத்தமாக அழைக்கிறேன்.
எல்லாரையும் உரத்த குரலில் கூப்பிடுகிறேன்.
5 அனுபவமில்லாதவர்களே, சாமர்த்தியமாக நடக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.+
அறிவில்லாதவர்களே, புரிந்துகொள்ளும் இதயத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
6 கேளுங்கள், நான் முக்கியமான விஷயத்தை உங்களுக்குச் சொல்கிறேன்.
என் உதடுகள் சரியானதையே பேசுகின்றன.
7 என் வாய் உண்மையைத்தான் பேசுகிறது.
என் உதடுகள் கெட்ட விஷயங்களை அருவருக்கின்றன.
8 என் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் எல்லாமே நீதியானவை.
அவை பொய்யும் புரட்டும் இல்லாதவை.
9 அவையெல்லாம் பகுத்தறிவு உள்ளவர்களுக்குச் சட்டென்று புரியும்.
அறிவை அடைந்தவர்களுக்குச் சரியாகத் தோன்றும்.
10 வெள்ளிக்குப் பதிலாக என் புத்திமதியை ஏற்றுக்கொள்ளுங்கள்.
சொக்கத்தங்கத்துக்குப் பதிலாக அறிவைப் பெற்றுக்கொள்ளுங்கள்.+
11 ஏனென்றால், ஞானம் பவளங்களைவிட* சிறந்தது.
வேறெந்தப் பொக்கிஷமும் அதற்கு ஈடாகாது.
12 நான்தான் ஞானம், நான் சாமர்த்தியத்தோடு குடியிருக்கிறேன்.
நான் அறிவையும் யோசிக்கும் திறனையும் பெற்றிருக்கிறேன்.+
13 கெட்டதை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம்.+
அகம்பாவத்தையும் ஆணவத்தையும் நான் வெறுக்கிறேன்.+
அக்கிரமம் செய்வதும் தாறுமாறாகப் பேசுவதும் எனக்குப் பிடிக்காது.+
15 என்னாலேயே ராஜாக்கள் ஆட்சி செய்துவருகிறார்கள்,
உயர் அதிகாரிகள் நீதியான சட்டங்களைக் கொடுக்கிறார்கள்.+
16 என்னாலேயே அதிபதிகள் ஆட்சி செய்துவருகிறார்கள்,
தலைவர்கள் நீதியான தீர்ப்பு சொல்கிறார்கள்.
19 நான் தரும் பலன் தங்கத்தைவிடவும் சொக்கத்தங்கத்தைவிடவும் மேலானது.
என்னால் கிடைக்கும் பலன் சுத்தமான வெள்ளியைவிட அருமையானது.+
20 நான் நீதியான வழியில் நடக்கிறேன்.
நியாயமான பாதையின் நடுவிலேயே நடக்கிறேன்.
21 என்னை நேசிக்கிறவர்களுக்கு விலைமதிப்புள்ள சொத்துகளைக் கொடுக்கிறேன்.
அவர்களுடைய சேமிப்புக் கிடங்குகளை நிரப்புகிறேன்.
22 யெகோவா என்னைத்தான் முதன்முதலில் உருவாக்கினார்.+
படைப்புகளிலேயே முதல் படைப்பாக என்னைப் பல காலங்களுக்கு முன்னால் உருவாக்கினார்.+
23 ஆரம்பத்திலேயே, பூமி படைக்கப்படுவதற்கு முன்பே,+
எண்ணிலடங்காத வருஷங்களுக்கு முன்பே நான் ஏற்படுத்தப்பட்டேன்.+
24 ஆழ்கடல்கள் எதுவும் இல்லாத காலத்தில்+ நான் உண்டாக்கப்பட்டேன்.*
பொங்கி வரும் நீரூற்றுகள் இல்லாத சமயத்தில் உருவாக்கப்பட்டேன்.
25 மலைகள் நிலைநிறுத்தப்படுவதற்கு முன்னால் படைக்கப்பட்டேன்.
குன்றுகள் உண்டாக்கப்படுவதற்கு முன்னால் உயிர்பெற்றேன்.
26 அவர் பூமியையும் அதன் வயல்வெளிகளையும்,
பூமியின் முதல் மண்கட்டிகளையும் உருவாக்குவதற்கு முன்பே நான் உருவாக்கப்பட்டேன்.
27 அவர் வானத்தைப் படைத்தபோது+ நான் இருந்தேன்.
அவர் நீர்ப்பரப்புக்கு மேலாக அடிவானத்தின் எல்லையைக் குறித்தபோதும்,+
28 மேகங்களை வானத்தில் நிலைநிறுத்தியபோதும்,
ஆழத்திலுள்ள ஊற்றுகளை உருவாக்கியபோதும்,
29 அவர் கடலுக்கு எல்லை வகுத்து,
அதைத் தாண்டக் கூடாது என்று அதன் தண்ணீருக்கு உத்தரவு போட்டபோதும்,+
பூமிக்கு அஸ்திவாரம் போட்டபோதும்,
நித்தமும் நான் அவருக்குச் செல்லப்பிள்ளையாக இருந்தேன்.+
அவர்முன் எப்போதும் சந்தோஷமாக இருந்தேன்.+
31 மனுஷர்களுக்காக அவர் படைத்த பூமியைப் பார்த்தபோது எனக்குச் சந்தோஷமாக இருந்தது.
நான் மனுஷர்கள்மேல் கொள்ளைப் பிரியம் வைத்திருந்தேன்.
32 என் மகன்களே, இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள்.
எப்போதும் என் வழியில் நடக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.