ஓசியா
6 “வாருங்கள், யெகோவாவிடம் திரும்பிப் போகலாம்.
அவர் சிங்கம்போல் நம்மைக் கடித்துக் குதறியிருந்தாலும்+ நம்மைக் குணமாக்குவார்.
அவர் நம்மைத் தாக்கியிருந்தாலும் நம்முடைய காயங்களுக்குக் கட்டுப்போடுவார்.
2 இரண்டு நாட்களுக்குப் பின்பு புத்துயிர் தருவார்.
மூன்றாம் நாளில் நம்மைத் தூக்கி நிறுத்துவார்.
நாம் அவர்முன் வாழ்வோம்.
3 யெகோவாவை நாம் தெரிந்துகொள்வோம்,
அவரைத் தெரிந்துகொள்ள ஊக்கமாக முயற்சி செய்வோம்.
பொழுது விடிவது எப்படி உறுதியோ அப்படியே அவர் நம்மிடம் வருவது உறுதி.
பருவ மழையைப் போல் அவர் நம்மிடம் வருவார்,
நிலத்தை நனைக்கும் வசந்த கால மழைபோல் வருவார்.”
4 “எப்பிராயீமே, நான் உன்னை என்ன செய்வேன்?
யூதாவே, நான் உன்னை என்ன செய்வேன்?
உங்களுடைய மாறாத அன்பு காலைநேர மேகங்களைப் போலவும்
பனித்துளிகளைப் போலவும் சீக்கிரத்தில் மறைந்துபோகிறதே!
உங்களுக்கு வரும் தண்டனைகள் வெளிச்சம் போலத் தெளிவாகத் தெரியும்.+
6 நீங்கள் எனக்குப் பலிகள் கொடுக்க வேண்டும் என்றல்ல,
எனக்கு விசுவாசமாக இருக்க* வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.
நீங்கள் எனக்குத் தகன பலிகள் தர வேண்டும் என்றல்ல,
என்னை நன்றாகத் தெரிந்துகொள்ள* வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.+
7 நீங்களோ அற்ப மனுஷர்களைப் போல ஒப்பந்தத்தை மீறினீர்கள்.+
உங்கள் தேசத்திலே எனக்குத் துரோகம் செய்தீர்கள்.
9 குருமார்கள் கொள்ளைக்கூட்டத்தார் போல இருக்கிறார்கள்.
சீகேமின்+ சாலையில் காத்திருந்து கொலை செய்கிறார்கள்.
கேவலமாக நடந்துகொள்கிறார்கள்.
10 இஸ்ரவேல் ஜனங்கள் செய்கிற படுமோசமான காரியத்தை நான் பார்த்தேன்.