2 நாளாகமம்
1 தாவீதின் மகன் சாலொமோனுடைய ஆட்சி மேலும் மேலும் உறுதியாக ஆனது. அவருடைய கடவுளான யெகோவா அவருக்குத் துணையாக இருந்தார், அவருக்கு அதிக பேரும் புகழும் கிடைக்கச் செய்தார்.+
2 இஸ்ரவேல் முழுவதிலும் இருந்த நூறு வீரர்களுக்குத் தலைவர்களையும் ஆயிரம் வீரர்களுக்குத் தலைவர்களையும் நீதிபதிகளையும் இஸ்ரவேலின் எல்லா கோத்திரத் தலைவர்களையும் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களையும் சாலொமோன் வரவழைத்தார். 3 பின்பு, சாலொமோனும் சபையார் எல்லாரும் கிபியோனில் இருந்த ஆராதனை மேட்டுக்குப் போனார்கள்.+ யெகோவாவின் ஊழியரான மோசே வனாந்தரத்தில் இருந்தபோது செய்த உண்மைக் கடவுளின் சந்திப்புக் கூடாரம் அங்கேதான் இருந்தது. 4 ஆனால் தாவீது, உண்மைக் கடவுளின் பெட்டியை கீரியாத்-யெயாரீமிலிருந்து+ எருசலேமில் தான் தயார் செய்திருந்த இடத்துக்குக் கொண்டுவந்திருந்தார். அதற்கென்று தான் போட்டிருந்த கூடாரத்தில் அதை வைத்திருந்தார்.+ 5 ஹூரின் பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேல்+ செய்திருந்த செம்புப் பலிபீடம்+ யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரத்துக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்தது. சாலொமோனும் சபையாரும் அந்தக் கூடாரத்துக்கு முன்னால் வேண்டிக்கொள்வது* வழக்கம். 6 சந்திப்புக் கூடாரத்துக்கு முன்னால் இருந்த செம்புப் பலிபீடத்தில், யெகோவாவுக்குமுன் 1,000 தகன பலிகளை சாலொமோன் செலுத்தினார்.+
7 அன்றைக்கு ராத்திரி சாலொமோனின் கனவில் கடவுள் தோன்றி, “உனக்கு என்ன வேண்டும், கேள்”+ என்றார். 8 அதற்கு சாலொமோன், “என் அப்பா தாவீதுமேல் நீங்கள் அளவுகடந்த அன்பை* காட்டியிருக்கிறீர்கள்.+ அவருடைய இடத்தில் என்னை ராஜாவாக உட்கார வைத்திருக்கிறீர்கள்.+ 9 யெகோவா தேவனே, என் அப்பா தாவீதுக்குக் கொடுத்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றுங்கள்.+ ஏனென்றால், பூமியிலுள்ள மணலைப் போல் ஏராளமாக இருக்கிற மக்களுக்கு என்னை ராஜாவாக ஆக்கியிருக்கிறீர்கள்.+ 10 இந்த மக்களை நல்ல முறையில் வழிநடத்த இப்போது எனக்கு ஞானத்தையும் அறிவையும் கொடுங்கள்.+ இல்லாவிட்டால், இத்தனை ஏராளமான மக்களுக்கு என்னால் எப்படி நீதி வழங்க முடியும்?”+ என்றார்.
11 அதற்குக் கடவுள், “செல்வத்தையோ பொருளையோ பேர்புகழையோ எதிரிகளின் உயிரையோ நீண்ட ஆயுசையோ நீ கேட்கவில்லை. அதற்குப் பதிலாக, என்னுடைய மக்களுக்கு* நீதி வழங்க ஞானத்தையும் அறிவையும் கேட்டிருக்கிறாய்.+ அதனால், நீ மனதார ஆசைப்பட்டபடியே, 12 ஞானத்தையும் அறிவையும் உனக்குத் தருவேன். அதோடு, உனக்கு முன்பும் சரி, பின்பும் சரி, வேறெந்த ராஜாவுக்கும் இல்லாத அளவுக்குச் செல்வத்தையும் பொருளையும் பேர்புகழையும் தருவேன்”+ என்று சொன்னார்.
13 பின்பு சாலொமோன் கிபியோனிலிருந்த ஆராதனை மேட்டிலிருந்து,+ அதாவது சந்திப்புக் கூடாரத்திலிருந்து, புறப்பட்டு எருசலேமுக்கு வந்தார்; அவர் இஸ்ரவேல் தேசத்தை ஆட்சி செய்தார். 14 ரதங்களையும் குதிரைகளையும்* சாலொமோன் ஏராளமாகச் சேர்த்துக்கொண்டே இருந்தார். அவரிடம் 1,400 ரதங்களும் 12,000 குதிரைகளும்*+ இருந்தன. ரதங்களுக்கான நகரங்களிலும்+ எருசலேமில் ராஜா குடியிருந்த இடத்துக்குப் பக்கத்திலும் அவற்றை நிறுத்தி வைத்தார்.+ 15 தங்கத்தையும் வெள்ளியையும் கற்களைப் போலவும், தேவதாரு மரங்களை சேப்பெல்லாவிலுள்ள காட்டத்தி மரங்களைப் போலவும் சாலொமோன் ராஜா எருசலேமில் ஏராளமாகக் கிடைக்கச் செய்தார்.+ 16 எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குதிரைகளை சாலொமோன் வைத்திருந்தார்.+ ராஜாவின் வியாபாரிகள் குதிரைக் கூட்டங்களை* மொத்த விலைக்கு வாங்குவார்கள்.+ 17 எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு ரதத்தின் விலை 600 வெள்ளிக் காசுகள், ஒரு குதிரையின் விலை 150 வெள்ளிக் காசுகள். பின்பு, இவற்றை சீரியாவின் ராஜாக்கள் எல்லாருக்கும், ஏத்திய ராஜாக்கள் எல்லாருக்கும் ஏற்றுமதி செய்வார்கள்.