சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் சங்கீதம். தாவீது பத்சேபாளுடன்+ உறவுகொண்டதைப் பற்றி நாத்தான் தீர்க்கதரிசி அவரிடம் வந்து பேசிய பிறகு பாடியது.
51 கடவுளே, உங்களுடைய மாறாத அன்பின்படி எனக்குக் கருணை காட்டுங்கள்.+
உங்களுடைய மகா இரக்கத்தின்படி என் குற்றங்களைத் துடைத்தழியுங்கள்.+
3 ஏனென்றால், என் குற்றங்கள் எனக்கு நன்றாகத் தெரியும்.
அதனால், நீங்கள் சொல்வது நீதியானதுதான்.
உங்கள் தீர்ப்பு நியாயமானதுதான்.+
6 உள்ளத்தில் உண்மையாக இருப்பவர்கள்மேல் நீங்கள் பிரியமாக இருக்கிறீர்கள்.+
அதனால், உண்மையான ஞானத்தை என் உள்ளத்துக்குப் புகட்டுங்கள்.
7 மருவுக்கொத்தால் என் பாவத்தை நீக்குங்கள், அப்போது நான் சுத்தமாவேன்.+
என்னைக் கழுவுங்கள், அப்போது நான் பனியைவிட வெண்மையாவேன்.+
8 சந்தோஷ சத்தமும் ஆனந்த ஆரவாரமும் என் காதில் கேட்கட்டும்.
அப்போதுதான், நீங்கள் நொறுக்கிப்போட்ட என் எலும்புகள் சந்தோஷத்தில் துள்ளும்.+
9 என்னுடைய பாவங்களைப் பார்க்காதபடி உங்கள் முகத்தைத் திருப்பிக்கொள்ளுங்கள்.+
என்னுடைய எல்லா குற்றங்களையும் துடைத்தழியுங்கள்.+
11 உங்களுடைய சன்னிதியைவிட்டு என்னைத் துரத்திவிடாதீர்கள்.
உங்களுடைய சக்தியை என்னிடமிருந்து எடுத்துவிடாதீர்கள்.
12 உங்கள் மீட்பைப் பார்க்கும் சந்தோஷத்தை மறுபடியும் எனக்குக் கொடுங்கள்.+
உங்களுக்குக் கீழ்ப்படியும் ஆசையை எனக்குள் தூண்டுங்கள்.
13 குற்றம் செய்கிறவர்களுக்கு உங்கள் வழிகளை நான் சொல்லிக்கொடுப்பேன்.+
பாவிகளான அவர்கள் அப்போது உங்களிடம் திரும்பி வருவார்கள்.
14 கடவுளே, என்னை மீட்கும் கடவுளே,+
கொலைப்பழியிலிருந்து* என்னை மீட்டுக்கொள்ளுங்கள்.+
அப்போது, என் நாவு உங்கள் நீதியைப் பற்றிச் சந்தோஷமாகச் சொல்லும்.+
16 நீங்கள் பலியை விரும்புவதில்லை, விரும்பினால் அதைச் செலுத்துவேன்.+
தகன பலியிலும் நீங்கள் பிரியப்படுவதில்லை.+
17 உடைந்த மனம்தான் கடவுளுக்குப் பிரியமான பலியாக இருக்கிறது.
கடவுளே, உடைந்த உள்ளத்தையும் நொறுங்கிய நெஞ்சத்தையும்