சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் சங்கீதம். ஒரு பாடல்.
68 கடவுள் எழுந்து, தன்னுடைய எதிரிகளைச் சிதறிப்போகச் செய்யட்டும்.
அவரை வெறுக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போகட்டும்.+
2 காற்றில் மறைந்துபோகும் புகைபோல் அவர்களை நீங்கள் மறைந்துபோகச் செய்யுங்கள்.
நெருப்புக்கு முன்னால் மெழுகு உருகுவதுபோல்,
கடவுளுக்கு முன்னால் பொல்லாதவர்கள் அழிந்துபோகட்டும்.+
3 ஆனால், நீதிமான்கள் சந்தோஷப்படட்டும்.+
கடவுளுக்கு முன்னால் பூரிப்படையட்டும்.
ஆனந்தமும் மகிழ்ச்சியும் அடையட்டும்.
4 கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்; அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்.*+
பாலைநிலத்தின் வழியாக* பயணம் செய்கிறவரைப் புகழ்ந்து பாடுங்கள்.
“யா”* என்பது அவருடைய பெயர்!+ அவருக்கு முன்னால் சந்தோஷப்படுங்கள்.
6 தன்னந்தனியாக இருக்கிறவர்களுக்குக் குடியிருக்க வீடு தருகிறார்.+
கைதிகளை விடுதலையாக்கி சீரும் சிறப்புமாக வாழ வைக்கிறார்.+
ஆனால், வறட்டுப் பிடிவாதமுள்ளவர்கள்* வறண்ட இடத்தில்தான் குடியிருப்பார்கள்.+
7 கடவுளே, உங்களுடைய மக்களை நீங்கள் வழிநடத்தியபோது,*+
பாலைவனத்தின் வழியாக நீங்கள் நடந்து வந்தபோது, (சேலா)
8 பூமி அதிர்ந்தது;+ உங்கள்முன் வானம் மழையைப் பொழிந்தது.
கடவுளுக்குமுன், இஸ்ரவேலின் கடவுளுக்குமுன், இந்த சீனாய் மலை குலுங்கியது.+
9 கடவுளே, நீங்கள் நிறைய மழையைத் தந்தீர்கள்.
களைத்துப்போன மக்களுக்குப் புதுத்தெம்பு கொடுத்தீர்கள்.
10 அவர்கள் உங்களுடைய கூடாரங்களில் தங்கியிருந்தார்கள்.+
கடவுளே, உங்களுக்கு நல்ல மனம் இருப்பதால் ஏழைகளுக்குத் தேவையானதைத் தந்தீர்கள்.
12 ராஜாக்களும் அவர்களுடைய படைவீரர்களும் ஓடுகிறார்கள்,+ தப்பி ஓடுகிறார்கள்!
வீட்டிலிருக்கிற பெண்ணுக்கும் சூறையாடப்பட்ட பொருள்களில் பங்கு கிடைக்கிறது.+
13 மனிதர்களே, நீங்கள் தீ மூட்டி அதன் பக்கத்தில்* படுத்துக் கிடந்திருந்தாலும்,
வெள்ளிச் சிறகுகளும் சொக்கத்தங்க இறகுகளும் உள்ள புறா
உங்களுக்குக் கிடைக்கும்.
16 சிகரங்களைக் கொண்ட மலைகளே,
குடிகொள்வதற்காகக் கடவுள் தேர்ந்தெடுத்த* மலையை+ ஏன் பொறாமையோடு பார்க்கிறீர்கள்?
யெகோவா அங்குதான் என்றென்றும் குடியிருப்பார்.+
17 கடவுளுடைய போர் ரதங்கள் பல்லாயிரம், பல்லாயிரம்!+
யெகோவா சீனாய் மலையிலிருந்து தன்னுடைய பரிசுத்த இடத்துக்கு வந்திருக்கிறார்.+
18 “யா”வே,* நீங்கள் மேலே ஏறிப் போனீர்கள்.+
சிறைபிடிக்கப்பட்ட கைதிகளைப் பிடித்துக்கொண்டு போனீர்கள்.
மனிதர்களைப் பரிசுகளாக ஆக்கினீர்கள்.+
அவர்கள் நடுவில் தங்கியிருப்பதற்காக, பிடிவாதக்காரர்களைக்கூட பரிசுகளாக ஆக்கினீர்கள்.+
19 ஒவ்வொரு நாளும் நம்முடைய பாரத்தைச் சுமக்கிற யெகோவா புகழப்படட்டும்.+
நமக்கு மீட்பு தரும் உண்மைக் கடவுள் புகழப்படட்டும். (சேலா)
20 உண்மைக் கடவுள் நமக்கு மீட்பு தரும் கடவுளாக இருக்கிறார்.+
உன்னதப் பேரரசரான யெகோவாதான் சாவிலிருந்து நம்மைத் தப்பிக்க வைக்கிறார்.+
21 கடவுள் தன்னுடைய எதிரிகளின் தலையை நொறுக்குவார்.
தொடர்ந்து கெட்ட வழியில் போகிறவர்களின் மண்டையோட்டைப் பிளப்பார்.+
22 யெகோவா இதைச் சொன்னார்:
“நான் அவர்களை பாசானிலிருந்து+ திரும்பக் கூட்டிக்கொண்டு வருவேன்.
கடலின் ஆழத்திலிருந்து கொண்டுவருவேன்.
23 அப்போது, எதிரிகளின் இரத்தம் உன் பாதங்களில் வழிந்தோடும்.+
அந்த இரத்தத்தை உன்னுடைய நாய்கள் நக்கும்.”
24 கடவுளே, நீங்கள் ஊர்வலம் வருவதை அவர்கள் பார்ப்பார்கள்.
என் கடவுளே, என் ராஜாவே, பரிசுத்த இடத்துக்கு நீங்கள் ஊர்வலமாக வருவதைப் பார்ப்பார்கள்.+
25 பாடகர்கள் எல்லாரும் முன்னால் போகிறார்கள்,
நரம்பிசைக் கருவிகளை வாசிக்கிறவர்கள் எல்லாரும் பின்னால் போகிறார்கள்.+
இளம் பெண்கள் கஞ்சிராவைத் தட்டிக்கொண்டு நடுவில் போகிறார்கள்.+
27 சின்னஞ்சிறு கோத்திரமாகிய பென்யமீன்+ அவர்களை அடக்கி ஆளுகிறது.
அங்கே யூதாவின் தலைவர்களும், ஆரவாரம் செய்கிற அவர்களுடைய கூட்டத்தாரும்,
செபுலோனின் தலைவர்களும், நப்தலியின் தலைவர்களும் இருக்கிறார்கள்.
28 நீ பலம் பெறுவாய் என்று கடவுள் உறுதியாகச் சொல்லியிருக்கிறார்.
எங்களுக்காகச் செயல்பட்ட கடவுளே, உங்களுடைய பலத்தைக் காட்டுங்கள்.+
29 எருசலேமில் இருக்கிற உங்களுடைய ஆலயத்துக்காக+
ராஜாக்கள் உங்களுக்குக் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்.+
30 நாணல்களுக்கு நடுவே இருக்கிற காட்டு விலங்குகளையும்,
கூட்டமாக இருக்கிற காளைகளையும்,+ அவற்றின் கன்றுகளையும் அதட்டுங்கள்.
அப்போது, மக்கள் வெள்ளிக் காசுகளைக் கொண்டுவந்து தலைவணங்குவார்கள்.
ஆனால், போர் செய்ய விரும்புகிறவர்களை நீங்கள் சிதறிப்போக வைப்பீர்கள்.
31 எகிப்திலிருந்து வெண்கலப் பொருள்கள் கொண்டுவரப்படும்.*+
கடவுளுக்குக் காணிக்கைகளைக் கொடுப்பதற்காக கூஷ்* தேசத்தார் வேகமாக வருவார்கள்.
33 காலம்காலமாக இருக்கிற வானாதி வானங்களிலே பவனி வருகிறவரைப் புகழ்ந்து பாடுங்கள்.+
இதோ! அவர் தன்னுடைய கம்பீரமான குரலில் இடிபோல் முழங்குகிறார்.
34 கடவுள் பலம்படைத்தவர் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.+
அவருடைய மகிமை இஸ்ரவேலின் மேல் இருக்கிறது.
அவருடைய பலம் வானத்தில்* இருக்கிறது.
35 பிரமாண்டமான ஆலயத்தில் இருக்கிற கடவுள் பயபக்திக்குரியவர்.*+
அவர்தான் இஸ்ரவேலின் கடவுள்.
அவர்தான் மக்களுக்குப் பலத்தையும் சக்தியையும் தருகிறவர்.+
கடவுளுக்குப் புகழ் சேரட்டும்!