ஓசியா
11 “இஸ்ரவேல் சிறுவனாய் இருந்தபோது அவனை நேசித்தேன்.+
எகிப்திலிருந்து என் மகனைக் கூட்டிக்கொண்டு வந்தேன்.+
3 ஆனால், எப்பிராயீமைக் கைப்பிடித்து நடக்கப் பழக்கியதும்,+ அவர்களைக் கையில் ஏந்தியதும் நான்தான்.+
அவர்களைக் குணமாக்கியது நான்தான், அதை அவர்கள் உணரவில்லை.
4 அன்பெனும் கட்டுகளால் கட்டி, பாசமெனும் கயிறுகளால் அவர்களை இழுத்துக்கொண்டிருந்தேன்.+
அவர்களுடைய கழுத்தின் மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப்போட்டேன்.
அவர்களுக்குப் பாசமாக உணவு ஊட்டினேன்.
5 அவர்கள் எகிப்துக்குத் திரும்பிப் போக மாட்டார்கள்; அசீரியாதான் அவர்களை ஆட்சி செய்யும்.+
ஏனென்றால், என்னிடம் திரும்பி வர அவர்கள் மறுத்துவிட்டார்கள்.+
6 அவர்கள் சதித்திட்டங்களைத் தீட்டியதால், அவர்களுடைய நகரங்களுக்குள் ஒரு வாள் சுழன்று பாயும்.+
அவர்களுடைய நகரவாசல்களின் தாழ்ப்பாள்களை நொறுக்கி, அவர்களை வெட்டி வீழ்த்தும்.+
7 என் ஜனங்கள் எனக்குத் துரோகம் செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்.+
அவர்களை உயர்ந்த இடத்துக்கு* அழைத்தாலும், ஒருவரும் வருவதில்லை.
8 எப்பிராயீமே, உன்னை நான் எப்படிக் கைவிடுவேன்?+
இஸ்ரவேலே, உன்னை எப்படி வேறொருவனின் கையில் கொடுப்பேன்?
அத்மாவுக்குச் செய்தது போல உனக்கு எப்படிச் செய்வேன்?
உன்னை எப்படி செபோயீமைப் போலாக்குவேன்?+
9 நான் என் கோபத்தைக் கொட்ட மாட்டேன்.
எப்பிராயீமைத் திரும்பவும் அழிக்க மாட்டேன்.+
நான் மனிதன் அல்ல, கடவுள்.
நான் உன் நடுவில் இருக்கிற பரிசுத்தமான கடவுள்.
நான் உனக்கு எதிராகச் சீறிக்கொண்டு வர மாட்டேன்.
10 யெகோவாவுக்குப் பின்னால் அவர்கள் நடந்து வருவார்கள்; அவர் சிங்கத்தைப் போலக் கர்ஜிப்பார்.+
அவர் கர்ஜிக்கும்போது அவருடைய பிள்ளைகள் மேற்கிலிருந்து நடுக்கத்தோடு வருவார்கள்.+
11 அவர்கள் எகிப்திலிருந்து பறவையைப் போல நடுங்கிக்கொண்டு வருவார்கள்.
அசீரியாவிலிருந்து புறாவைப் போலப் பயத்தோடு வருவார்கள்.+
அவர்களுடைய வீட்டிலேயே அவர்களைக் குடியிருக்க வைப்பேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.
12 “எப்பிராயீம் என்னிடம் பொய்களையே பேசுகிறான்.
நான் எங்கே திரும்பினாலும் இஸ்ரவேலின் ஏமாற்று வேலைகளைத்தான் பார்க்கிறேன்.+
ஆனால், யூதா இன்னமும் கடவுளோடு நடக்கிறான்.
மகா பரிசுத்தமான கடவுளுக்கு விசுவாசமாக இருக்கிறான்.”+