சங்கீதம்
3 எஜமான்களுக்கெல்லாம் எஜமானுக்கு நன்றி சொல்லுங்கள்.
அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.
7 அவர் மாபெரும் ஒளிச்சுடர்களைப் படைத்தார்.+
அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.
8 அவர் பகலில் ஒளிவீச* சூரியனைப் படைத்தார்.+
அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.
9 அவர் ராத்திரியில் ஒளிதர* நிலவையும் நட்சத்திரங்களையும் படைத்தார்.+
அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.
10 அவர் எகிப்தியர்களின் முதல் பிறப்புகளைக் கொன்றுபோட்டார்.+
அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.
11 அவர் இஸ்ரவேலர்களை அங்கிருந்து விடுதலை செய்தார்.+
அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.
12 அவர் தன்னுடைய கைபலத்தாலும்+ மகா வல்லமையாலும் அவர்களை விடுவித்தார்.
அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.
15 அவர் பார்வோனையும் அவனுடைய படையையும் செங்கடலில் மூழ்கடித்தார்.+
அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.
16 அவர் தன்னுடைய மக்களை வனாந்தரத்தின் வழியாக அழைத்துவந்தார்.+
அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.
18 அவர் பலம்படைத்த ராஜாக்களைக் கொன்றுபோட்டார்.
அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.
19 அவர் எமோரியர்களின் ராஜாவான சீகோனைக்+ கொன்றுபோட்டார்.
அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.
20 அவர் பாசானின் ராஜாவான ஓகைச் சாகடித்தார்.+
அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.
21 அவர் அந்த ஜனங்களுடைய தேசத்தைத் தன்னுடைய மக்களுக்குக் கொடுத்தார்.+
அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.
22 அவர் அதைத் தன் ஊழியர்களான இஸ்ரவேலர்களுக்குச் சொத்தாகக் கொடுத்தார்.
அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.
24 அவர் நம்மை எதிரிகளிடமிருந்து மறுபடியும் மறுபடியும் காப்பாற்றினார்.+
அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.
26 பரலோகத்தின் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.