சங்கீதம்
யெகோவாவின் பெயரைப் புகழுங்கள்.
யெகோவாவின் ஊழியர்களே,+
2 யெகோவாவின் ஆலயத்தில் சேவை செய்கிறவர்களே,
நம் கடவுளுடைய ஆலயப் பிரகாரங்களில் சேவை செய்கிறவர்களே,
அவரைப் புகழுங்கள்.+
3 “யா”வைப் புகழுங்கள்;* ஏனென்றால், யெகோவா நல்லவர்.+
அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்;* ஏனென்றால், அது இனிமையானது.
5 யெகோவா மகத்தானவர் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.
நம் எஜமான் மற்ற எல்லா தெய்வங்களையும்விட உயர்ந்தவர்.+
7 பூமியின் எல்லா இடங்களிலிருந்தும் அவர் மேகங்களை* எழும்ப வைக்கிறார்.
மழையோடு மின்னலை மின்ன வைக்கிறார்.*
காற்றைத் தன்னுடைய கிடங்குகளிலிருந்து வீசச் செய்கிறார்.+
9 எகிப்தே, உன் நடுவில் அவர் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தார்.+
பார்வோனுக்கும் அவனுடைய எல்லா ஊழியர்களுக்கும் எதிராக அவற்றைச் செய்தார்.+
10 அவர் ஏராளமான தேசங்களை வீழ்த்தினார்.+
பலம்படைத்த ராஜாக்களைக் கொன்றுபோட்டார்.+
11 எமோரியர்களின் ராஜாவான சீகோனையும்+
பாசானின் ராஜாவான ஓகையும் கொன்றுபோட்டார்.+
கானானிலிருந்த எல்லா ராஜ்யங்களையும் வென்றார்.
12 அவர்களுடைய தேசத்தைத் தன்னுடைய மக்களுக்குக் கொடுத்தார்,
தன்னுடைய மக்களான இஸ்ரவேலர்களுக்குச் சொத்தாகக் கொடுத்தார்.+
13 யெகோவாவே, உங்களுடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கிறது.
யெகோவாவே, உங்களுடைய புகழ் தலைமுறை தலைமுறைக்கும் நிலைத்திருக்கிறது.+
15 மற்ற தேசத்தார் வணங்குகிற சிலைகள் வெறும் வெள்ளியும் தங்கமும்தான்,
மனிதர்களுடைய கைகளால் செய்யப்பட்டவைதான்.+
16 அவற்றுக்கு வாய் இருக்கிறது, ஆனால் பேச முடியாது.+
கண்கள் இருக்கின்றன, ஆனால் பார்க்க முடியாது.
17 காதுகள் இருக்கின்றன, ஆனால் கேட்க முடியாது.
அவற்றின் மூக்கில் சுவாசமே இல்லை.+
19 இஸ்ரவேல் வம்சத்தாரே, யெகோவாவைப் புகழுங்கள்.
ஆரோன் வம்சத்தாரே, யெகோவாவைப் புகழுங்கள்.
20 லேவி வம்சத்தாரே, யெகோவாவைப் புகழுங்கள்.+
யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களே, யெகோவாவைப் புகழுங்கள்.