ஆமோஸ்
6 “சீயோனில் தன்னம்பிக்கையோடு* திரிகிறவர்களே,
சமாரியா மலையில் கவலையில்லாமல் வாழ்கிறவர்களே,+
பிரபலமான தேசத்தில் உள்ள பெரும் புள்ளிகளே,
உங்களை இஸ்ரவேல் ஜனங்கள் தேடி வருகிறார்கள். ஆனால், உங்களுக்குக் கேடுதான் வரும்!
2 கல்னே ஊருக்குப் போய்ப் பாருங்கள்.
அங்கிருந்து காமாத் மாநகருக்குப் போங்கள்.+
பின்பு, பெலிஸ்தியர்களின் காத் நகருக்குப் போங்கள்.
உங்கள் ராஜ்யங்களைவிட* அவை சிறந்தவையோ?
உங்கள் பிரதேசங்களைவிட அவை பெரியவையோ?
4 யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட கட்டில்களில் படுக்கிறீர்கள்,+ பஞ்சு மெத்தைகளில் சொகுசாகக் கிடக்கிறீர்கள்.+
செம்மறியாட்டுக் கடாக்களைச் சாப்பிடுகிறீர்கள், கொழுத்த கன்றுகளைத் தின்கிறீர்கள்.+
5 யாழை*+ வாசித்துக்கொண்டு இஷ்டத்துக்குப் பாடல்களை எழுதுகிறீர்கள்.
தாவீதைப் போல் புது இசைக் கருவிகளை உருவாக்குகிறீர்கள்.+
6 பெரிய கிண்ணங்களில் திராட்சமது குடிக்கிறீர்கள்.+
விலை உயர்ந்த எண்ணெயைப் பூசிக்கொள்கிறீர்கள்.
ஆனால், யோசேப்புக்கு வரப்போகும் ஆபத்தைப் பற்றிக் கவலையில்லாமல் இருக்கிறீர்கள்.+
7 அதனால், நீங்கள்தான் முதலில் சிறைபிடிக்கப்பட்டுப் போவீர்கள்.+
பஞ்சு மெத்தையில் சொகுசாகக் கிடப்பவர்களின் கும்மாளம் அடக்கப்படும்.
8 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா தன்மீதே சத்தியம் செய்திருக்கிறார்’+ என்று பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா சொல்கிறார்.
‘“யாக்கோபின் கர்வம் எனக்கு அருவருப்பாக இருக்கிறது.+
அவனுடைய கோட்டைகளை நான் வெறுக்கிறேன்.+
நகரத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் எதிரிகளிடம் கொடுத்துவிடுவேன்.+
9 ஒரு வீட்டில் பத்து ஆண்கள் மிஞ்சலாம், ஆனால் அவர்களும் செத்துப்போவார்கள். 10 அவர்களுடைய உடல்களை ஒவ்வொன்றாகத் தூக்கிக்கொண்டுபோய் எரிப்பதற்காகச் சொந்தக்காரன்* ஒருவன் வருவான். அவன் அந்த உடல்களை* வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோவான். பின்பு, உள்ளறைகளில் யாராவது இருந்தால் அவரிடம், ‘வேறு யாராவது உன்னோடு இருக்கிறார்களா?’ என்று கேட்பான். ‘யாரும் இல்லை’ என்று அவர் சொல்வார். பின்பு இவன், ‘அமைதியாக இரு! யெகோவாவின் பெயரைச் சொல்வதற்கு இது நேரமில்லை’ என்று சொல்வான்.”
12 செங்குத்தான பாறையில் குதிரைகள் ஓடுமா?
அங்கே எவனாவது மாடுகளை வைத்து உழுவானா?