சங்கீதம்
பூமி பூரித்துப்போகட்டும்!+
தீவுகளெல்லாம் சந்தோஷத்தில் துள்ளட்டும்!+
2 அடர்ந்த கார்மேகங்கள் அவரைச் சூழ்ந்திருக்கின்றன.+
நீதியும் நியாயமும் அவருடைய சிம்மாசனத்தின் அடித்தளமாக இருக்கின்றன.+
3 அவருக்கு முன்னால் நெருப்பு போகிறது.+
அவருடைய எதிரிகளை எல்லா பக்கத்திலிருந்தும் சுட்டுப்பொசுக்குகிறது.+
7 செதுக்கப்பட்ட சிலைகளை வணங்குகிற எல்லாரும்,
ஒன்றுக்குமே உதவாத தெய்வங்களைப் பற்றிப் பெருமையடிக்கிற எல்லாரும்+
அவமானப்பட்டுப் போகட்டும்.+
தெய்வங்களே, நீங்கள் எல்லாரும் அவரை வணங்குங்கள்.*+
8 யெகோவாவே, உங்களுடைய நீதித்தீர்ப்புகளைக் கேட்டு,
சீயோன் மகிழ்கிறது.+
யூதாவின் நகரங்கள் சந்தோஷப்படுகின்றன.+
9 யெகோவாவே, நீங்கள்தான் இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான கடவுள்.
நீங்கள்தான் மற்ற எல்லா தெய்வங்களையும்விட மிக மிக உயர்ந்தவர்.+
10 யெகோவாவை நேசிக்கிறவர்களே, கெட்ட காரியங்களை வெறுத்துவிடுங்கள்.+