நீதிமொழிகள்
17 சண்டை நிறைந்த வீட்டில் பெரிய விருந்து சாப்பிடுவதைவிட,+
சமாதானம் நிறைந்த* வீட்டில் காய்ந்த ரொட்டியைச் சாப்பிடுவதே மேல்.+
2 விவேகமாக நடக்கும் வேலைக்காரன் வெட்கக்கேடாக நடக்கும் மகனை* ஆளுவான்.
எஜமானின் மகன்களோடு அவனும் சொத்தில் ஒரு பங்கைப் பெறுவான்.
4 புண்படுத்துகிற பேச்சைப் பொல்லாதவன் கவனித்துக் கேட்கிறான்.
தீய பேச்சை ஏமாற்றுக்காரன் காதுகொடுத்துக் கேட்கிறான்.+
5 ஏழையைக் கிண்டல் செய்கிறவன் அவனைப் படைத்தவரை அவமதிக்கிறான்.+
அடுத்தவன் படும் கஷ்டத்தைப் பார்த்து சந்தோஷப்படுகிறவன் தண்டனைக்குத் தப்ப மாட்டான்.+
7 சரியான பேச்சு* முட்டாளுக்குப் பொருந்துவதே இல்லை.+
அப்படியிருக்கும்போது, பொய்யான பேச்சு ராஜாவுக்கு* கொஞ்சமாவது பொருந்துமா?+
8 அன்பளிப்பு கொடுக்கிறவனுக்கு அது விலைமதிப்புள்ள* கல்லைப் போல இருக்கிறது.+
அவன் போகும் இடமெல்லாம் அது அவனுக்கு வெற்றி தேடித்தருகிறது.+
9 குற்றத்தை மன்னிக்கிறவன்* அன்பு காட்டுகிறான்.+
ஆனால், அதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பவன் உயிர் நண்பர்களைக்கூட பிரித்துவிடுகிறான்.+
11 கெட்டவன் எப்போதும் கலகத்தைத்தான் விரும்புவான்.
ஆனால், அவனைத் தண்டிக்க கொடூரமான தூதுவன் அனுப்பப்படுவான்.+
12 அறிவில்லாமல் நடக்கும் முட்டாளிடம் மாட்டிக்கொள்வதைவிட,
குட்டிகளைப் பறிகொடுத்த கரடியிடம் மாட்டிக்கொள்வது எவ்வளவோ மேல்.+
14 சண்டையை ஆரம்பிப்பது அணையைத் திறந்துவிடுவதுபோல் இருக்கிறது.
வாக்குவாதம் வெடிப்பதற்கு முன் அந்த இடத்தைவிட்டுப் போய்விடு.+
16 முட்டாளுக்கு ஞானத்தைச் சம்பாதிக்க வழியிருந்து என்ன பிரயோஜனம்?
17 உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான்.+
கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்.+
18 அடுத்தவனுடைய கடனுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு,*
அவனுக்காகக் கைகுலுக்கி ஒப்பந்தம் செய்கிறவன் புத்தியில்லாதவன்.+
19 வாக்குவாதம் செய்ய விரும்புகிறவன் குற்றம் செய்ய விரும்புகிறான்.+
தன் நுழைவாசலை உயரமாகக் கட்டுகிறவன் அழிவைத் தேடிக்கொள்கிறான்.+
21 புத்தியில்லாத பிள்ளையைப் பெற்றவன் துக்கப்படுவான்.
அறிவில்லாத பிள்ளையைப் பெற்றவன் சந்தோஷத்தைப் பறிகொடுப்பான்.+
24 பகுத்தறிவு உள்ளவன் ஞானத்தைப் பெறுவதிலேயே கண்ணாக இருக்கிறான்.
ஆனால், புத்தி இல்லாதவனின் கண்கள் நாலாபக்கமும் அலைபாய்கின்றன.+
25 புத்தியில்லாத மகன் தன் அப்பாவின் மனதைத் துக்கப்படுத்துகிறான்,
தன் அம்மாவின் உள்ளத்தை வேதனைப்படுத்துகிறான்.+
28 பேசாமல் இருந்தால் முட்டாள்கூட அறிவாளியாகக் கருதப்படுவான்.
வாய் திறக்காமல் இருப்பவன் பகுத்தறிவு உள்ளவனாகக் கருதப்படுவான்.