யோசுவா
19 இரண்டாவது குலுக்கல்+ சிமியோன் கோத்திரத்தாருக்கு+ விழுந்தது. அவரவர் குடும்பத்தின்படி அவர்களுக்குப் பங்கு கிடைத்தது. அவர்களுடைய பங்கு யூதா கோத்திரத்தாருடைய பகுதியில் இருந்தது.+ 2 அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்கள் இவைதான்: சேபாவுடன் பெயெர்-செபா,+ மொலாதா,+ 3 ஆத்சார்-சுவால்,+ பாளா, ஆத்சேம்,+ 4 எல்தோலாத்,+ பெத்தூல், ஓர்மா, 5 சிக்லாகு,+ பெத்-மார்காபோத், ஆத்சார்-சூசா, 6 பெத்-லெபாவோத்+ மற்றும் சருகேன். கிராமங்களோடு சேர்ந்த இந்த நகரங்கள் மொத்தம் 13; 7 ஆயின், ரிம்மோன், ஏத்தேர் மற்றும் ஆசான்.+ கிராமங்களோடு சேர்ந்த இந்த நகரங்கள் மொத்தம் 4; 8 பாலாத்-பெயெர் வரையில், அதாவது தெற்கிலுள்ள ராமா வரையில், உள்ள இந்த நகரங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்கள். இவைதான் சிமியோன் கோத்திரத்துக்கு அவரவர் குடும்பத்தின்படி கிடைத்த சொத்து. 9 சிமியோன் வம்சத்தாருக்கு யூதா வம்சத்தாருடைய பங்கிலிருந்து ஒரு பாகம் கொடுக்கப்பட்டது. ஏனென்றால், யூதாவுக்குக் கிடைத்த பங்கு மிகப் பெரியதாக இருந்தது. அதனால், சிமியோன் வம்சத்தாருக்கு அவர்கள் நடுவிலேயே பங்கு கிடைத்தது.+
10 மூன்றாவது குலுக்கல்+ செபுலோன் கோத்திரத்தாருக்கு+ விழுந்தது. அவரவர் குடும்பத்தின்படி அவர்களுக்குப் பங்கு கிடைத்தது. அவர்களுடைய எல்லை சாரீத்வரை போய், 11 மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்தை எட்டி, யொக்னியாமுக்கு முன்னால் உள்ள பள்ளத்தாக்குவரை* போனது. 12 பின்பு, சாரீத்திலிருந்து கிழக்குப் பக்கமாகப் போய், கிஸ்லோத்-தாபோரின் எல்லைவரை போனது. அங்கிருந்து தாபராத்துக்குப்+ போய், யப்பியாவுக்கு ஏறி, 13 கிழக்குப் பக்கமாக காத்-தேப்பேருக்குப்+ போய், இத்-காத்சீனை அடைந்து, ரிம்மோனுக்குச் சென்று நேயா வரையில் போனது. 14 பின்பு அந்த எல்லை வடக்கே அன்னத்தோனுக்குத் திரும்பி, இப்தா-ஏலின் பள்ளத்தாக்கில் முடிவடைந்தது. 15 காத்தாத், நகலால், சிம்ரோன்,+ இதாலா, பெத்லகேம்+ என்ற 12 நகரங்களும் அவற்றின் கிராமங்களும் அவர்களுக்குக் கிடைத்தன. 16 இந்த நகரங்களும் அவற்றின் கிராமங்களும்தான் செபுலோன் வம்சத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி+ கிடைத்த சொத்து.
17 நான்காவது குலுக்கல்+ இசக்காருக்கு+ விழுந்தது. இசக்கார் வம்சத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி பங்கு கிடைத்தது. 18 அவர்களுடைய எல்லை இதுதான்: யெஸ்ரயேல்,+ கெசுல்லோத், சூனேம்,+ 19 அப்பிராயீம், ஸீகோன், அனாகராத், 20 ராப்பித், கிஷியோன், அபெத்ஸ், 21 ரெமேத், என்-கன்னீம்,+ என்-காதா மற்றும் பெத்-பாத்செஸ். 22 அந்த எல்லை தாபோரையும்+ சகசீமாவையும் பெத்-ஷிமேசையும் அடைந்து, யோர்தானில் முடிவடைந்தது. அதில், கிராமங்களோடு சேர்ந்து மொத்தம் 16 நகரங்கள் இருந்தன. 23 இந்த நகரங்களும் அவற்றின் கிராமங்களும்தான் இசக்கார் வம்சத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி+ கிடைத்த சொத்து.
24 ஐந்தாவது குலுக்கல்+ ஆசேர்+ கோத்திரத்துக்கு விழுந்தது. அவரவர் குடும்பத்தின்படி அவர்களுக்குப் பங்கு கிடைத்தது. 25 அவர்களுடைய எல்லை இதுதான்: எல்காத்,+ ஆலி, பேதேன், அக்சாப், 26 அலம்மேலெக், ஆமாத் மற்றும் மிஷயால். அது மேற்கே கர்மேலுக்கும்+ சீகோர்-லிப்னாத்துக்கும் போய், 27 கிழக்கே பெத்-டாகோனுக்குத் திரும்பி, செபுலோனை அடைந்து, வடக்கே இப்தா-ஏல் பள்ளத்தாக்குவரை போனது. அங்கிருந்து அது பெத்-ஏமேக்குக்கும் நேகியெலுக்கும் போய், இடது பக்கமாக காபூலுக்குப் போனது. 28 பின்பு, எபிரோனுக்கும் ரேகோபுக்கும் ஹம்மோனுக்கும் பெரிய சீதோன்+ வரையுள்ள காணாவுக்கும் போனது. 29 அந்த எல்லை ராமாவுக்குத் திரும்பி, மதில் சூழ்ந்த தீரு நகரம்+ வரைக்கும் போனது. பின்பு அது ஓசாவுக்குத் திரும்பி, 30 அக்சீப், உம்மா, ஆப்பெக்+ மற்றும் ரேகோப்+ பிரதேசத்திலுள்ள கடலில் முடிவடைந்தது. அதில், கிராமங்களோடு சேர்ந்து மொத்தம் 22 நகரங்கள் இருந்தன. 31 இந்த நகரங்களும் அவற்றின் கிராமங்களும்தான் ஆசேர் வம்சத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி+ கிடைத்த சொத்து.
32 ஆறாவது குலுக்கல்+ நப்தலிக்கு விழுந்தது. நப்தலி வம்சத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி பங்கு கிடைத்தது. 33 அவர்களுடைய எல்லை எலேப்பிலிருந்து சானானிமில் உள்ள பெரிய மரத்துக்கும்,+ அங்கிருந்து ஆதமி-நெக்கேப்புக்கும் யாப்னியேலுக்கும் போனது. பின்பு லக்கூம் வரையில் போய், யோர்தானில் முடிவடைந்தது. 34 அந்த எல்லை மேற்கே அஸ்னோத்-தாபோருக்குத் திரும்பி உக்கோகுக்குப் போனது. அவர்களுடைய தெற்கு எல்லை செபுலோனையும், மேற்கு எல்லை ஆசேரையும், கிழக்கு எல்லை யோர்தானுக்குப் பக்கத்திலுள்ள யூதாவையும் எட்டியது. 35 மதில் சூழ்ந்த நகரங்கள் இவைதான்: சீத்திம், சேர், அம்மாத்,+ ரக்காத், கின்னரேத், 36 ஆதமா, ராமா, ஆத்சோர்,+ 37 கேதேஸ்,+ எத்ரேய், என்-ஆத்சோர், 38 ஈரோன், மிக்தால்-ஏல், ஓரேம், பெத்-ஆனாத் மற்றும் பெத்-ஷிமேஸ்.+ கிராமங்களோடு சேர்ந்த இந்த நகரங்கள் மொத்தம் 19. 39 இந்த நகரங்களும் அவற்றின் கிராமங்களும்தான் நப்தலி வம்சத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி+ கிடைத்த சொத்து.
40 ஏழாவது குலுக்கல்+ தாண்+ கோத்திரத்துக்கு விழுந்தது. அவரவர் குடும்பத்தின்படி அவர்களுக்குப் பங்கு கிடைத்தது. 41 அவர்களுடைய எல்லை இதுதான்: சோரா,+ எஸ்தாவோல், இர்-சேமேஸ், 42 சாலாபீன்,+ ஆயலோன்,+ யெத்லா, 43 ஏலோன், திம்னா,+ எக்ரோன்,+ 44 எல்தெக்கே, கிபெத்தோன்,+ பாலாத், 45 யேகூத், பெனெ-பெராக், காத்-ரிம்மோன்,+ 46 மே-யார்கோன், ராக்கோன் மற்றும் யோப்பாவுக்கு+ எதிரில் உள்ள எல்லைப்பகுதி. 47 தாணின் பகுதி அவர்களுக்கு ரொம்பவே சின்னதாக இருந்தது.+ அதனால் அவர்கள் போய் லேசேமைத்+ தாக்கி, அதைக் கைப்பற்றி, அங்கிருந்தவர்களை வாளால் கொன்றார்கள். அந்த நகரத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு, அங்கே குடியேறினார்கள். அதோடு, தங்களுடைய மூதாதை தாணின் ஞாபகமாக அதன் பெயரை தாண் என்று மாற்றினார்கள்.+ 48 இந்த நகரங்களும் அவற்றின் கிராமங்களுமே தாண் வம்சத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி கிடைத்த சொத்து.
49 இப்படி, அவரவர் பங்கைப் பிரித்துக் கொடுக்கும் வேலை முடிவடைந்தது. பின்பு, நூனின் மகனாகிய யோசுவாவுக்கு இஸ்ரவேலர்கள் தங்கள் நடுவில் ஒரு பங்கைக் கொடுத்தார்கள். 50 யோசுவா கேட்ட நகரத்தை, அதாவது எப்பிராயீம் மலைப்பகுதியிலுள்ள திம்னாத்-சேராவை,+ யெகோவாவின் கட்டளைப்படி அவருக்குக் கொடுத்தார்கள். அவர் அந்த நகரத்தைக் கட்டி அங்கே குடியிருந்தார்.
51 சீலோவில்+ யெகோவாவுக்கு முன்னால், அதாவது சந்திப்புக் கூடாரத்தின்+ வாசலுக்கு முன்னால், குருவாகிய எலெயாசாரும் நூனின் மகனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் கோத்திரங்களின் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களும் குலுக்கல் முறையில் எல்லாருக்கும் பிரித்துக் கொடுத்த+ சொத்துகள் இவைதான். இப்படி, தேசத்தைப் பங்குபோட்டு முடித்தார்கள்.